Friday, December 20, 2013

வேலன்:-டிரைவ் மறைத்திட

நம்மிடம் உள்ள டிரைவ்களை முழுவதுமாக மறைத்துவைத்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் நம்மிடம் உள்ள டிரைவ்களின் எழுத்துக்களில் எந்த டிரைவினை மறைக்க விரும்புகின்றமோ அந்த டிரைவ் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்திடவும்.கீழே உள்ள் விண்டோவில பாருங்கள்.
நான் A  டிரைவ் வினை தேர்வு செய்துள்ளேன் மேலும் நாம் மறைக்க விரும்பும் டிரைவ்விற்கு பாஸ்வேர்டும் கொடுத்து பாதுகாக்கலாம். இதனால் நமது டிரைவ்வானது கூடுதல் பாதுகாப்புடன் இருக்கும். இப்போது இதில் நான் டிரைவினை தேர்வு செய்தபின் விண்டோவினை மூடிவிட்டேன் இப்போது மை கம்யூட்டரை திறந்து பார்க்கையில் எனக்கு கீழ்கணட விண்டோ தெரிந்தது. இதில் நான் தேர்வு செய்த டிரைவானது முழுவதுமாக மறைந்துவிட்டதை காணுங்கள்.
இப்போது மீண்டும் நான் இந்த சாப்ட்வேரினை திறந்து இதில் நான் தேர்வு செய்த டிரைவின் ரேடியோ பட்டனை நீக்கிவிட்டேன். இப்போது மீண்டும் நான் மைகம்யூட்டரினை திறந்து பார்க்க எனக்கு கீழ்கண்ட விண்டோ தெரிந்தது.
ரகசிய தகவல்கள் முக்கியமான புகைப்படங்கள் மற்றவர்கள் பார்வையில் இருந்து பாதுகாக்க இந்த சாப்ட்வேரினை பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள.
 வாழ்க வளமுடன 
வேலன்.

5 comments:

  1. பயனுள்ள மென்பொருள்... நன்றி...

    ReplyDelete
  2. dear sir
    my computer seems affected by virus.. my computer shows ONLY SCREEN SAVER. all the icons start up menu task bar are ALL GONE hidden. How to recover? Whether I should format again or any other means availble? Please inform me thro email
    pbn1961@gmail.com or badri61nath@gmail.com
    Badrinath

    ReplyDelete
  3. பயனுள்ள மென்பொருள்... நன்றி...

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ள மென்பொருள்...

    ReplyDelete
  5. I want Tamil Typing in my system..Please help me..Give me that Tool..

    ReplyDelete