Wednesday, January 8, 2014

வேலன்:-காலரி கணக்கிட்டு உணவு உண்ண

நாம் சாப்பிடும் உணவுப்பொருளுக்கு ஒவ்வொரு சத்துக்கள்உள்ளது. அதுபோல ஒவ்வொரு உணவுப்பொருளுக்கும் காலரி சத்துக்கள் கொழுப்பு சத்துக்கள் உள்ளது. உணவுப்பொருட்களின் காலரி சத்துக்களை நாம் எளிதில் அறிந்து கொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் ஆணா பெண்ணா என தேர்வு செய்யவும். ஆணாக இருக்கும் பட்சத்தில உங்களுக்கு ஓரு நாளைக்கு 2500 காலரிகளும். பெண்ணாக இருக்கும் பட்சத்தில் 2000 காலரிகளும் தேவைப்படும்.
இதில் மாமிச உணவுகள். காய்கறிகள்.பழங்கள்.பேககரி உணவுகள்.இதர உணவுகள் என வகைப்படுததிஉள்ளார்கள். ஒவ்வொரு டேபினையும் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோக்கள் ஓப்பன் ஆகும்.

 பழங்கள் காய்கறிகள் வகைப்படுத்திஉள்ளார்கள்.
 பேகக்ரி உணவுகள் வகைப்படுத்திஉள்ளார்கள். கீழே உள்ள டேபிளை கவனியுங்கள்.
 உங்களுக்கான தினசரி உணவு வகைகளை தேர்வு செய்தபின் இதில் உள்ள கால்குலேட் கிளிக் செய்ய நீங்கள் தேர்வு செய்த அனைத்து உணவு வகைகளும்  உங்களுக்கு கிடைக்கும்.
ஒவ்வொரு உணவின் காலரி மற்றும் கொழுப்பின் அளவுகளை நீங்கள் உண்னணும் உணவின் 100கிராம் எடைக்கு ஏற்ப கொடுத்துள்ளார்கள். இதன் மூலம் உங்கள் உடல் எடை கூடாமல் சிக்கென்று வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

3 comments:

  1. அனைவருக்கும் பயன்படக்கூடிய மென்பொருள்.... பயன்படுத்திப் பார்க்கிறேன்....

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள பகிர்வு... நன்றி...

    ReplyDelete
  3. நல்ல பயனுடைய பதிவு

    வாழ்த்துக்கள்

    ReplyDelete