Wednesday, February 19, 2014

வேலன்:-குழந்தைகள் படம் வரைந்து மகிழ

குழந்தைகளுக்கு கலர்பென்சில்களோ.சாக்பீஸொ கிடைத்துவிட்டால் போதும் சுவர் முழுவதும் வண்ண வண்ண கோடுகள் வரைந்து புது சுவரை மார்டன் சுவராக மாற்றிவிடுவர். அவ்வாறு குழந்தைகள் சுவரில் கிறுக்காமல் கம்யூட்டரில் வரைந்து மகிழ  இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திஇங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதன் வலதுபுறம் நிறைய டூல்கள் கொடுத்துள்ளார்கள். இதில் நாம் பெயிண்ட் அப்ளிகேஷனில் உபயோகிக்கும் டூல்கள் இருக்கும். 
 இதன் மேல்புறம் ஒன்பது விதமான டேப்புகளும் ஒவ்வொரு டேபிலும் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட படங்களையும் கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதன் ஒவ்வொரு டேபினைகிளிக் செய்திட உங்களுக்கு அது சம்பந்தமான படங்கள் கிடைக்கும். அந்த படத்தில் ஏதாவது ஒரு படத்தினை கிளிக்செய்திட ஒவ்வொன்றிலும ;அதுசம்பந்தமான படங்களின் ஐகான்கள் கிடைக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

 திரைச்சீலைகள்.கோலங்கள.விதவிதமான கெடிகாரங்கள.விதவிதமான மலர்கள். உருவங்கள்.என்னற்ற டிசைன்கள் என விதவிதமாக நாம் வரைந்து மகிழலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


இது முற்றிலும் குழந்தைகளுக்கானது:. எனவே அவர்களுக்கு பதிவிறக்கம் செய்து வரைய சொல்லி பழக்கப்படுத்துங்கள. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

3 comments: