Baidu Spark Browserஎன வித்தியாசமான பெயரில் உள்ள இந்த ப்ரவ்சர் 36 எம்.பி. கொள்ளளவில பலவித வசதிகளை கொண்டுள்ளது. இதன் முகவரி தளம் காண இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இணையத்தில் அடிக்கடி பயன்படுத்தும் இணைய பக்கங்களின் தம்ப்நெயில் வியு நமக்கு கிடைக்கும். தேவையானதை நேரடியாக கிளிக் செய்து பெறலாம். மேலும் இதில கூகுள் சர்ச் பாக்ஸம் இணைத்துள்ளார்கள். அதன் மூலமும் தேவையானதை தேடிப்பெறலாம்.
இதில் நாம் யூடியூபிலிருந்து வீடியோ பைலினை பார்க்கும் சமயம் நாம் விருப்பப்பட்டால் இதில் உள்ளீடாக உள்ள ப்ளேயரில் பார்க்கலாம். வீடியோவினை பதிவிறக்கம் செய்யவிரும்பினாலும் நேரடியாக டவுண்லோடு செய்துகொள்ளலாம். இதற்கென தனியாக நாம் வீடியோ டவுண்லோடரை தேடிச்செல்ல வேண்டியதில்லை. அதுபோல டோரண்ட் பைல்கள் இருந்தாலும் இதின் மூலம் நேரடியாக டோரண்ட் பைல்கள் மூலம வேண்டிய பைலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தனியே யூடோரண்ட்.மற்றும்;; பிட் டோரண்ட் போன்ற சாப்ட்:வேர்கள் தேவையிலலை. கீழே உள்ள விணடோவில் பாருங்கள்.
ஒரு இணையப்பக்கத்தில் நாம் குறிப்பிட்ட புகைப்படத்தினையோ தகவல்களையோ பெறவிரும்பினால் இதில் உள்ள கத்தரி சிம்பலை கிளிக் செய்தால நமக்கான விண்டோ கிடைக்கும் இதில் தேவையான படத்தினையோ - டெக்ஸ்ட் தகவல்களையோ தேர்வு செய்து அதில் மாற்றங்கள் தேவைப்பட்டால் செய்து பின்னர் சேமித்துவைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இணையத்தல் ஒரு பககத்தினை பார்க்கின்றோம். பின்னர் வேறு ஒரு இணைய பக்கம் பார்ப்பதற்கு நியூ டேபினை கிளிக் செய்து வேறு ஒரு விண்டோவில் பார்க்கின்றோம் மீண்டும் பழைய இணைய பக்கம் பார்ப்பதற்கு பின்னோக்கி டேபினை கிளிக் செய்யாமல் கர்சர் ரைட் கிளிக் செய்து வேண்டிய வசதிகளை நாம் சுலபமாக பெறலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
No comments:
Post a Comment