கணிணியில் நாம் பணி புரிகையில் அடிக்கடி பயன்படுத்தும் 25 க்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களை உடனடியாக பெற இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டர்ல் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் அப்போதைய நேரம்,தேதி கிழமை போன்ற விவரங்கள் தெரியவரும். இதன் மேல்புறம் மூன்று வித டேப்புகள் கொடுத்துள்ளார்கள். அதில் பைல்,இன்போ,ஆப்ஷன் என டேப்புகள் இருக்கும். இதில் உள்ள பைல்கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட டாப்அப்மெனு கிடைக்கும். அதில் NotePad;Paint.Calculator.ControlPanel.CharMap.WordPad.Browse.Minimize & Exit என அப்ளிகேஷன்கள்கொடுத்துள்ளார்கள். அப்போதைக்கு எது தேவையோ அதனை கிளிக் செய்தால் உங்களுக்கான விண்டோ ஓப்பன் ஆகும். நீங்கள் இதற்காக ஸ்டார்ட்.ப்ரோகிராம் செல்ல தேவையில்லை.இதில் உள்ள இன்போ கிளிக் செய்திட உங்களுக்கு User Name.Network.Windows Version.MAC Address.IPAddress.Manufacurrer.Resolution CPU Speed.Toral Memory போன்ற விவரங்கள் கிடைக்கும். உங்களுக்கு எந்த விவரம் தேவையோ அதனை கிளிக் செய்திட உங்களுக்கு இந்த அப்ளிகேஷனில் உள்ள ஸ்கிரினில் அதற்கான விவரம் தெரியவரும்.
அதனைப்போலவே ஆப்ஷன் கிளிக் செய்திட நமக்கு Restart,Shut Down, என நமக்கு தேவையான ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளலாம்.
கணிணியில் முக்கியமான எல்லா அப்ளிகேஷன்களையும் நாம் சுலபமாக பெற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பல நேரங்களில் நீங்கள் தரும் மென்பொருள் அறிமுகங்கள் பயனுள்ளவையாகவே உள்ளன. சில நேரங்களில் குப்பைகளையும் தருகிறீர்கள். இது குப்பையில் ஒன்று. நேரடியாக ஸ்டார்ட் விண்டோவில் மென்பொருளின் பெயரைத் தட்டச்சிட்டால் திறந்துவிடுகின்ற வசதி இருக்கும்போது எதற்காக இன்னொரு மென்பொருள்?
ReplyDeleteசார் நீங்கள் கொடுக்கும் லின்க்கில் இருந்து ட்வுன்லோட் செய்ய முடியவில்லை எப்படி ட்வுன்லோட் செய்வது என்று விளக்கவும்
ReplyDelete