அலுவலகங்களில் அடிக்கடி பயன்படும் முகவரி லேபிள்.வணிக கடிதம்.சிடிகவர்.ஐடிகவர்.நேம்பேட்ஜ்.ஆபிஸ்கவர் போன்ற முப்பதிற்கும் மேற்பட்ட பணிகளுக்கு நேடிமேட் பிரிண்ட் செய்திட இந்த சின்ன சாப்வேர் பயன்படுகின்றது. 5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக:கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் புதியது என்பதனை தேர்வு செய்யவும்.
அடுத்து உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும் இதில ;முப்பதிற்கும் மேற்பட்ட வகைகள் கொடுத்திருப்பார்கள். இதில ;நமக்கு எது தேவையோ அதனை தேரவு செய்யவும். நீங்கள் தேர்வு செய்தபின்னர் வலதுபக்கம் அதற்கான டிஸ்பிளே விண்டோ ஓப்பன் ஆகும்.முப்பது வகைகளில் உங்களுக்கு எது தேவையோ அதனை கிளிக் செய்யவும். நான் விசிட்டிங் கார்ட் தேர்வு செய்துள்ளேன்.
எனக்குவலதுபுறம் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகியது.
இதற்கு அடுத்து நெக்ஸ்ட் கிளிக் செய்திட டிசைன் டெம்ப்ளேட் கிடைத்தது. அதில் விதவிதமான டிசைன்கள் கொடுத்துள்ளார்கள். நீங்கள் தேர்வு செய்வதற்கு ஏற்ப டெப்ளேட் டிசைனை ப்ரிவியூ பார்க்கலாம்.
இதில் உள்ள டேடாவில் நமக்கான விவரங்களை தட்டச்சு செய்யவும்.எழுத்துருக்களின் அளவு மற்றும் நிறத்தினை செட் செய்திடவும்.
வேண்டிய பின்னணி நிறத்தினை தேர்வு செய்திடவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
உங்கள் விசிட்டிங் கார்டில் தேவையான படங்களை சேர்க்கலாம். நமக்கு விருப்பமான புகைப்படங்களையும் இதில் எளிதில இணைக்கலாம்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
புகைப்படம்.எழுத்துரு.பார்கோட்.விருப்பமான கோடுகள்.விருப்பமான உருவங்கள் என எதைவேண்டுமானாலும் இதில இணைத்துக்கொள்ளலாம் அதற்கான விண்டோ இடதுபுறம் கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இறுதியாக நாம் டிசைன்செய்ததற்கான ப்ரிவியுவினை காணலாம். ப்ரிவியு செட்டிங்ஸ் சரிசெய்து பின்னர ;பிரிண்ட தரலாம்.
முப்பதுக்கும் மேற்பட்ட பணிகளை செய்வதால் நமக்கு அடிக்கடி இது பயன்தரகூடியதாக உள்ளது. பயன்படுத்திப்பர்ருங்கள்.கருத:துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
மிக்க நன்றி வேலன் சார்.
ReplyDeleteBlogger malik said...
ReplyDeleteமிக்க நன்றி வேலன் சார்.ஃஃ
நன்றி மாலிக் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.