தமிழுக்காக நிறைய இணைய தளங்கள் இருந்தாலும் சில இணைய தளங்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுவதாக இருக்கின்றது. அந்த வகையில் Tamil Cube என்கின்ற பெயருடைய இந்த இணையதளம் மிகமிக சிறப்பானதாக உள்ளது.இந்த இணைய தளம் காண இங்கு கிளிக் செய்யவும். தமிழ் நாட்காட்டி.அகராதி.மொழிபெயர்ப்பு.தூய தமிழ் பெயர்கள்.ஜாதகம்.பொது அறிவு,காரண ஆய்வு,கணித அறிவு,யூபிஎஸ்சி.டிஎன்பிசி.தமிழ் நூல்கள் என பல்வேறு டேப்புகள் கொடுத்துள்ளார்கள். இனி இதில் வரும் ஒவ்வொரு தலைப்பினையும் விரிவாக காணலாம்.
முதலில் உள்ளது தமிழ் நாட்காட்டி. அதில் அன்றைய தேதி நாட்காட்டியையும் அந்த மாத்த்திற்கான தமிழ்நாட்காட்டியையும் இணைத்துள்ளார்கள். அந்த மாத்த்திற்குரிய விசேஷங்கள் இதன் மூலம் எளிதில் அறிந்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அடுத்ததாக தமிழ் மற்றும் சான்ஸ்கிரிட் புத்தகங்கள் இணைத்துள்ளார்கள். திருக்குறள் முதல் பாரதியார் பாடல்கள்.நாவல்கள்.கவிதைகள்.அகராதிகள் என முன்னூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை பதிவிறக்கம் செய்திடும் வகையில் அறிமுகப்படுத்திஉள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் அடுத்ததாக அகராதி கொடுத்துள்ளார்கள். இதில் தமிழ்,தெலுங்கு.மலையாளம்.கன்னடம்.குஜராத்தி.ஒரியா.இந்தி.சைனா.பெங்காலி.சிங்களம்.அரபி.ஜப்பானிய மொழிகளுக்கான அகராதி கொடுத்துள்ளார்கள். நீங்கள் இதில் உள்ள் சர்ச் பாக்ஸில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் அதற்கான விளக்கம் நீங்கள் எந்த மொழியில் விரும்பினீர்களோ அந்த மொழியில் உங்களுக்கு விடை கிடைக்கும். நான் Tamil Computer என தட்டச்சு செய்தேன்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மொழி பெயர்ப்பு என்கின்ற காலத்தில் உங்களுக்கு தமிழ.தெலுங்கு.மலையாளம்.கன்னடம்.குஜராத்தி.பெங்காலி.மராட்டி.சான்ஸ்கிரிட்.பஞ்சாபி.சிங்கள.நேபாளி.சைனா மற்றும் ஜப்பானிய மொழிகளில் நாம் மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு நீங்கள் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை தட்டச்சு செய்தால் அதற்குரிய தமிழ்வார்த்தை உங்களுக்கு விடையாக கிடைக்கும். நான் இதிலும் Tamil Computer என ஆங்கிலத்தில தட்டச்சு செய்தேன் எனக்க தமிழ்கம்யூட்டர் என தமிழில வந்தது. தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் இந்த டிரான்ஸ்லேட்டர் மூலம் ஆங்கில்தில் தட்டச்சு செய்து அதனை தமிழாக மாற்றி பின்னர் காப்பி பேஸ்ட் செய்வதன் மூலம் ஜிமெயில் உட்பட இணைய பயன்பாடுகள் அனைத்தையும் எளிதில் தமிழில நிறைவேற்றிக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
குழந்தைகளுக்கான அழகான பெயர்கள் வைக்க இந்த டேப் பயன்படுகின்றது. இதில தமிழ்.தெலுங்கு.மலையாளம்.கன்னடம்.முஸ்லீம்.குஜராத்தி.பெங்காலி.நேபாலி.சன்ஸ்கிரீட் போன்ற மொழிகளுக்கான தூய பெயர்கள் ஆண் பெண் குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்கள். நமது குழந்தைகளுக்கு தூய தமிழ்பெயர் வைக்க இது மிகவும் பயன்படும். இதில் உள்ள தமிழ்மொழியின் ஆரம்ப எழுத்தை கிளிக் செய்திட அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் அனைத்து பெயர்களும் நமக்கு கிடைக்கும்.போனஸாக அநத எழுத்துக்குரிய நியூமராலஜி எண்ணும் நமக்கு கிடைக்கும்.கீழே உள்ள் விண்டோவில் பாருங்கள்.
அடுதத டேப்பில் தமிழ் ஜாதகம்.தமிழ் நாட்காட்டி.எலி ஜோதிடம்.கிளி ஜோதிடம். தமிழ் ஜாதகம்.ராசி.நட்சத்திரம்.லக்னம்.பஞ்ஞாங்கம்.சனி பெயர்ச்சி.குரு பெயர்ச்சி.ராசி பலன்.தெலுங்கு ஜாதகம்.மலையாள ஜாதகம். நியூமராலஜி என 13 வகைகள் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அடுத்து பொது அறிவு டேப் கொடுத்துள்ளார்கள். அதில் ஜெனரல் நாலேட்ஜ். வரலாறு.அறிவியல்.கணிதம். புவியியல். கணிணி அறிவியல்.தமிழ்.ஆங்கிலம்.இந்திய அரசியல் நேர் முகதேர்வுக்கான கேள்வி பதில்கள் என நிறைய தலைப்புகள் கொடுத்தள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
ஒவ்வொரு தலைப்பிலும் எண்ணற்ற கேள்விகளும் அதற்கான விடைகளும் கொடுத்துள்ளார்கள். உங்கள் பொது அறிவினை வளர்த்துக்கொள்ள இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
அடுத்ததாக உள்ள டேப்பில் அப்டிடியூட் கணக்குகள்கொடுத்துள்ளார்கள். ஒவ்வொரு பிரிவிலும் எண்ணற்ற கண்ககுள் கொடுத்துள்ளாரக்ள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அடுத்ததாக Reasoning என்கின்ற தலைப்பில காரண ஆய்வு கேள்விகள் கொடுத்துள்ளார்கள். ஒரு விடை வந்தால் அது எவ்வாறு விடை கிடைக்கும் என்பதனை ஆய்வு செய்து யூகித்து நாம் விடைஅ ளிக்கவேண்டும. அப்ஜக்டிவ் டைப் எனப்படும் கேள்விகளுக்கான விடைகள் கொடுத்திருப்பார்கள். நாம் விடையை டிக் செய்திட வேண்டும்.
அடுத்த டேப்பில் யூபிஎஸ்சி தேர்வுக்கான வினாக்களை கொடுத்துள்ளார்கள்
அநத தேர்வு எழுதுபவர்களுக்கு அது மிகவும் பயன்தர கூடியதாக இருக்கின்றது.அடுத்த டேபில் தமிழ்நாடு தேர்வாணயத்தால் நடத்தப்படுகின்ற டிஎன்பிஎஸ்சி தேர்வு க்கான வினா விடைகள் கொடுத்துள்ளார்கள்.இதில்
பொது அறிவு வினாவிடை,தமிழ் கேள்வி பதில்கள்.தமிழ் இல்ககண வினாக்கள்.வரலாற்று கேள்வி பதில்கள் என நான்கு வித தலைப்புகளில் கொடுத்துள்ளார்கள்.
இறுதியாக கொடுத:துள்ள தலைப்பில் உஙகளுக்கு தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்கின்றன. 2015 வருடத்திற்கான தமிழ் டியூஷன் உங்களுக்கு தேவையென்றால் இங்கு பதிவு செய்துகொள்ளலாம். மேலும்
தமிழில் நீங்கள் விரும்பி கேட்கின்ற பக்தி பாடல்கள் கெர்டுத்துள்ளார்கள். ஆன்லைன் எப்.எம். வசதி கொடுத:துள்ளார்கள். தமிழ் புதினங்கள் எனப்படும் தமழ் நாவல்கள் இடம்பெற்றுள்ளன்.மேலும் வெற்றிக்கான தாரக மந்திரம் விளங்கங்களுடன் கொடுத:துள்ளார்கள். தமிழில் உள்ள பிளாக்குகள் பற்றிய விவரம்கொடுத்துள்ளார்கள்.தமிழ் பழமொழிகள்.இணைய இணைப்பின் மூலம் தமிழ் கற்றல்.தமிழ் பாட புத்தகங்கள் மற்றும் தமிழ் மூலம் எளிதாக ஆங்கிலம் பயிலுதல் போன்ற விவரங்களும் கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருஙகள்.
ஒரு இணையதளத்தில் இவ்வளவு விவரங்கள் கொடுத்துள்ளது பெரிய விஷயம். நீங்களும் ஒவ்வொன்றாக பயன்படுத்திப்பர்ருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
இந்தத் தளம் பார்த்திருக்கிறேன்... மிகவும் அருமையான தளம்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி வேலன் சார்.
நன்றி ... இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....
ReplyDeleteமேலும் இலவச உடண்டி 150 ரீச்சார்ஜ் க்கு :- http://naveensite.blogspot.in/2014/11/earntalktime.html
Super sir
ReplyDeleteJuergen