Wednesday, March 15, 2017

வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட

இந்த சாப்ட்வேர் பிடிஎப பைல்களை பார்வையிட உதவுகின்றது. அதுமட்டுமல்லாமல் இந்த சாப்ட்வேர் பிடிஎப் பைல்களை தனியே பிரிக்கவும. ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்கவும் பயன்படுகின்றது. குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் நாம் பிரிண்ட்செய்துகொள்ளலாம். 5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் தேவையான பைல்களை தேர்வு செய்யவும்.ஒரு பிடிஎப் பைலை தேர்வு செய்ததும் அந்த பிடிஎப் பைல்களில் உள்ள பக்கங்கள் உங்களுக்கு தெரியவரும். தேவையான பக்கத்தினை கிளிக் செய்ததும் வலது பக்கத்தில் உள்ள விண்டோவில் டிஸ்பிளே ஆகும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


பக்கங்களை நாம் தனியே பிரிக்க விரும்பினால் தேவையான பக்கத்தினை கிளிக் செய்து பின்னர் இதில் உள்ள Add To Join கிளிக் செய்யவும்.இப்போது உங்களது பைலானது பக்கத்து டேபில் வந்து அமர்ந்துகொள்ளும்.

தனிதனி பிடிஎப் பைல்களிலிருந்து தேவையான  பக்கங்களை தேர்வு செய்து பின்னர் இதில் உள்ள Join Mode கிளிக் செய்து ஒரே பிடிஎப் பைலாக மாற்றவும். 
சேர்க்கப்பட்ட பிடிஎப் பைல்களை தனியே  சேவ் செய்திடவும் பிரிண்ட செய்திடவும் முடியும். அதேபோல பிடிஎப் பைல்களை தனிதனியே பிரிக்கவும் பிரித்ததை சேர்க்கவும் முடியும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன். 

2 comments:

  1. i follow your blog from 2010..your blog post all useful really.Thanks..Keep your services.All the best

    ReplyDelete
  2. ஜெயக்குமார். த said...

    i follow your blog from 2010..your blog post all useful really.Thanks..Keep your services.All the best

    Thanks Mr.Jeyakumar sir...

    valga valamudan.
    velan

    ReplyDelete