Wednesday, August 9, 2017

வேலன்:-செல்பேசி தகவல்களை பரிமாற்றிக்கொள்ள

மாறி வரும் காலத்திற்கு ஏற்ப நாம் நம்முடைய மொபைல்போன்களை மாற்றிக்கொண்டே வருகின்றோம். அவ்வாறு மாற்றும் சமயம் நம்மிடம் பழைய போனில் உள்ள தொடர்புகள்.புகைப்படங்கள்.வீடியோக்கள்.தகவல்கள் போன்றவற்றை ஒரு போனிலிருந்து மற்ற போனுக்கு மாற்றிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 35 எம்.பி கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இந்த தளம் :-https://drfone.wondershare.com/phone-transfer.html செல்லுங்கள். சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உஙக்ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நான்கு வித டேப்புகள் அடங்கிய விண்டோ கொடுத்துள்ளார்கள்.

இதில் செல்பேசியிலிருந்து செல்பேசி,கணிணியிலிருந்து செல்பேசி.சேல்பேசியிலிருந்து கணிணி.செல்பேசி தகவல்களை அழித்தல் என கொடுத்துள்ளார்கள்.
 செல்பேசியிலிருந்து மற்றும் ஒரு செல்பேசிக்கு தகவல்களை அனுப்ப முதலில் அனுப்பவேண்டிய செல்பேசியை கணிணியில் இணைக்கவும். அடுத்து புதிய செல்பேசியை இணைக்கவும். விண்:டாவில் வரும் அறிவுரைக்கு ஏற்பவாறு மாற்றங்களை  செல்பேசியில் செய்திடவும்.


 உங்கள் தகவல்கள் ஒரு போனியலிருந்து மற்றும் ;ஒரு போனுக்கு மாறுவதை கவனிக்கலாம்.
உங்கள் பழைய செல்பேசியிலிருந்து தகவல்களை கணிணிக்கு மாற்றிட செல்பேசியை கணிணியில் இணைக்கவும். எந்த எந்த தகவல்களை கணிணியில் சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த தகவல்களை தேர்வு செய்யவும். கணிணியில் சேமிக்க விரும்பும் டிரைவினை தேர்வு செய்யவும்.பின்னர் ஒகே தர உங்கள் செல்பேசி தகவல்கள் கணிணியில் சேமிப்பாகும்.
 அதுபோல தகவல்களை கணிணியிலிருந்து  செல்போனுக்கு மாற்றிட செல்பேசியை இணைக்கவும். வரும் விண்டோவில் நீங்கள் எந்த எந்த தகவல்களை கணிணியிலிருந்து செல்பேசிக்கு மாற்றிட விரும்புகின்றீர்களோ அந்த தகவல்களை தேர்வு செய்யவும்.

உங்கள் செல்பேசியை மற்றவர்களுக்கு விற்க விரும்பினால் அதிலுள்ளதகவல்களை முற்றிலும் அழித்துவிடவேண்டும். அவ்வாறு தகவல்களை அழித்துவிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.

செல்பேசியை கணிணியில் இணைத்து பின்னர ;இதில் உள்ள எரேஸ் கிளிக் செய்திடவும்.உங்கள் செல்பேசி தகவல்களை அழித்துவிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

4 comments:

  1. அனைவருக்கும் மிகவும் பயன் தரும்...

    நன்றி தோழர்...

    ReplyDelete
  2. அருமை நண்பரே

    ReplyDelete
  3. திண்டுக்கல் தனபாலன் said...

    அனைவருக்கும் மிகவும் பயன் தரும்...

    நன்றி தோழர்..

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்சார்..
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete

  4. Blogger mohamed althaf said...

    அருமை நண்பரே

    நன்றி நண்பரே...
    தங்கள் வ்ருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete