யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திடவும் அதனை வேண்டிய அளவில் பார்வையிடவும் வேண்டிய பார்மெட்டில் மாற்றிடவும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 25 எம்.பி கொளளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனைஇன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நமது யூடியூப் வீடியோவின் யூஆர்எல முகவரியை காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்யவும்.
வீடியோவின் அளவினை தேர்வு செய்யவும். உங்களுக்கு எந்த அளவு வேண்டுமோ அந்த அளவினையும் தேர்வு செய்யலாம்.இதில் இடதுபுறம் டவுன்லோடிங்.டவுன்லோடு மற்றும் கன்வர்டட் என்கின்ற மூன்று ஆப்ஷன்கள் இருக்கும். பதிவிறக்கம் ஆகி கொண்டிருப்பதையும் பதிவிறக்கம் முடிந்துவிட்டதையும் காணலாம். கன்வர்ட் செய்யப்பட்ட வீடியோவினையும் காணலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
டவுண்லோடிங் ஆப்ஷன் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நமக்கான வீடியோ எந்தஅளவிற்கு டவுண்லோடுஆகிக்கொண்டு இருப்பதனை காணலாம்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் நமக்கான வீடியோ டவுண்லோடு ஆகிவிட்டிருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
No comments:
Post a Comment