Wednesday, September 23, 2020

வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.

புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்கவும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இதன் இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். நீங்கள் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 மாற்றவேண்டிய புகைப்படங்களையோ -போல்டர்களையோ தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் அடுத்து கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 தேவையான பார்மெட்டினை தேர் வு செய்திடவும்.
நீங்கள் புகைப்படத்தினை எந்த அளவில் சதவீதத்தில் குறைக்கவேண்டுமோ அந்த சதவீதத்தினை தேர்வு செய்திடவும். பின்னர் இதில் உள்ள ரீசைஸ் கிளிக் செய்திடவும்.

சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் ;உங்கள் புகைப்படங்கள் அ;னைத்தும் தரம் குறையாமல் அளவு குறைந்து காணப்படும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

No comments:

Post a Comment