Sunday, October 18, 2020

வேலன்:-செல்பேசியில் உள்ள தொடர்புஎண்களை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள -Cell phone Contact to print.

செல்பேசியில் உள்ள தொடர்பு எண்களை கணினியில் எக்ஸெல் பைல்களாக சேமிக்கவும். தனியே பிரிண்ட் எடுத்து வைக்கவும் எப்படி என பார்க்கலாம். முதலில் உங்கள் கைபேசியில் உள்ள தொடர்பு எண்களை உங்கள் கூகுள் கணக்கில்சேமியுங்கள். பின்னர் உங்கள் ஜிமெயில் கணக்கினை திறந்துகொள்ளுங்கள். இப்போது இதில் உள்ள கூகுள் ஆப்ஸ்  கிளிக் செய்யுங்கள். கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 அதில் உள்ள கான்டாக்ட் (Contacts) கிளிக்செய்திடவும். இப்போது இதில் உள்ள மோர் (More) என்பதினை கிளிக் செய்யுங்கள். இப்போது கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உள்ள எக்ஸ்போர்ட் (Export) என்பதினை கிளிக் செய்யவும்.
 வரும் விண்டோவில் Which export Format? என்பதில்   Google (Csv Format ) என்பதினை தேர்வு செய்து எக்ஸ்பர்ட் (Expert) கிளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கான கான்டாக்ட் பைலானது எக்ஸெல் பார்மெட்டில் சேமிப்பாகும்.
 இதனையோ நீங்கள் பிரிண்ட் எடுத்து சேமிக்க விரும்பினால் More என்பதினை கிளிக் செய்து அதில் Print என்பதினை தேர்வு செய்யவும்.


இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 
அதில் பிரிண்ட் என்பதினை தேர்வு செய்யவும். உங்களுக்கான கான்டாக்ட் பைலானது மீண்டும் உங்களுக்கு கிடைக்கும். இதில் கர்சரினை பைலினுடைய நடுவில் வைத்து ரைட் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 

இப்போது உங்களுக்கு கிடைக்கும் விண்டோவில் பிரிண்ட் என்பதினை தேர்வு செய்திடவும். இப்போது உங்களுக்கான பிரிண்டர் விண்டோ திறக்கும் உங்கள் வசம் பிரிண்டர் இருந்தால்  தொடர்பு எண்களை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளலாம். இதையே நீங்கள் பிடிஎப் பைலாக வேண்டுமானாலும் சேமித்து வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

No comments:

Post a Comment