எழுத்துருக்களில் வேண்டிய டிசைன் செய்து பயன்படுத்திட நாம் போட்டோஷாப் மற்றும் வேர்ட் பயன்படுத்துவோம் ஆனால் இந்த மென்பொருளில் தேவையான டிசைன்கள் செய்திட உதவுகின்றது.
இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதில் இரண்டாவதாக உள்ள டைட்டிலில் உங்களுக்கு விருப்பமான எழுத்துருவினை தட்டச்சு செய்திடவும்.
இதில் உள்ள சர்பேஸ் என்பதினை கிளிக் செய்திட வரும் விண்டோவில் எழுத்துருக்கள் என்ன என்ன டிசைன்கள் வேண்டுமோ அதனை கொண்டுவரலாம்.
மைக்ரோசாப்ட் வேர்டில் எழுத்துருக்கு என்று தனியே டிசைன்செய்திடலாம். அதனை விட கூடுதலாக இதில் வேவ்வெறான டிசைன்கள் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
இதனை போல அவுட்லைன் மற்றும் 3டி பெவல் கொடுத்துள்ளார்கள். தேவையானதை தேர்வு செய்திட ப்ரிவியூவிண்டோவில் அது மாறுவதினை நாம் காணலாம்.
எழுத்துருவில் நிழல் எபெக்ட் கொண்டுவர இதனை பயன்படுத்தலாம்.
தேர்ந்தெடுத்த வார்த்தையினை நாம் ப்ரேம் கொண்டு டிசைன்செய்யலாம். விதவிதமான ப்ரேம்கள் கொடுத்துள்ளார்கள்.
இதில் கூடுதலாக எடிட் இமெஜ் கொடுத்துளார்கள்.அதில் வேண்டிய ஸ்லைடரினை நகர்த்துவது மூலம் தேவையான மாடலினை நாம் கொண்டுவரலாம்.
நாம் ஒவ்வொன்றாக மாற்றிப்பார்க்காமல் மொத்த டிசைன்களினையும் ப்ரிவியூவாக கொண்டுவர இதில் டெக்ஸ்ட் எபெக்ட் ஜெனரேட்டர் கொடுத்துள்ளார்கள்.
அதில் உள்ள ஸ்டார்ட் கிளிக் செய்திட நமக்கான எழுத்துருவானது விதவிதமாக மாறுவதினை காணலாம். தேவையானதை நாம் தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் யூடியூப் பிலும் எழுத்துருவினை கொண்டுவரலாம். மேலும் விவரமாக அறிந்துகொள்ள பிடிஎப் வடிவில் இதில் கையேடும்கொடுத்துள்ளார்கள். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
No comments:
Post a Comment