whatsappஎனப்படும் புலனத்தில் நாம் பேசும் தமிழினை வார்த்தைகளாக கொண்டுவர வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை கொண்டுவர நீங்கள் உங்கள் செல்பேசியில் கூகுள்ப்ளே ஸ்டோர் ஓப்பன் செய்து அதில் GBoard தேர்வு செய்யவும். இதனை பெற இங் குகிளிக் செய்யவும். பின்னர் அதனை இன்ஸ்டால் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் தகவல் அனுப்பவேண்டிய வாட்ச்அப்பினை ஒப்பன் செய்து தகவல் அனுப்பவேண்டியவரின் பெயரை தேர்வு செய்யவும். தகவல் உள்ளீடும் பகுதியை தேர்வு செய்யவும்.
வரும் விண்டோவில் செட்டிங்ஸ் கிளிக் செய்திடவும். உங்களுக்கு கிடைக்கும் விண்டோவில் Language தேர்வு செய்திடவும்.
அதில் நிறைய மொழிகள் கொடுத்திருப்பார்கள். அதில் தேர்வாகிஉள்ள ஆங்கிலத்தினை அன்லாக் செயதிடவும். ஸ்கோரல் செய்து கீழே வரவும்.
தமிழ் என்பதில் இந்தியாவினை தேர்வு செய்து பின்னர்கீழே உள்ள சேவ் கிளிக் செய்யவும்.
இப்போது மீண்டும் முன்புசொன்னதுபோல தட்டச்சு பகுதியை தேர்வு செய்து மைக்கில் நீங்கள் பேசவிரும்புவதை தமிழிலேயே பேசவும்.
நீங்கள் பேச பேச தமிழில் வேகமாக தட்டச்சு ஆவதினை காணலாம். இதன் மூலம் வாட்ச்அப்பில் தமிழ்மொழியை வேகமாக உள்ளீடு செய்யலாம். இதேப்போல நீங்கள் நோட்பேடினையும் ப்ளே ஸ:டொரில் திறந்து இதேபோல தமிழில்பேசிமற்றவர்களுக்கு சுலுபமாக அனுப்பஇயலமுடியும். பயன்படுத்துங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
No comments:
Post a Comment