Thursday, October 15, 2020

வேலன்:-வீடியோவில் வாட்டர் மார்க் கொண்டவர -Aoao Video Watermark.

நாம் பயன்படுத்தும் வீடியோக்களில் வாட்டர் மார்க் கொண்டுவர இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்துதம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் நாம் வாட்டர் மார்க் கொண்டுவர விரும்பும் வீடியோவினை தேர்வு செய்திடவும். இதில் உள்ள ஆப்ஷனை கிளிக செய்து நாம் விரும்பும் வகைகளையும் சேமிக்க விரும்பும் இடத்தினையும் தேர்வு செய்திடவும்.
இதன் வலதுபுறம் மூன்று விதமான டேப்புகள் கொடுத்துள்ளார்கள். அதில் Add Text Add Image.Add Shape என இருக்கும். 
நீங்கள் முதலில் உள்ள Add Text கிளிக் செய்தால் ;கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
நீங்கள் வீடியோவில் சேர்க்க விரும்பும் எழுத்தினை -அதன் வகையினை -அளவினை -நிறத்தினை -வீடியோவில் வர விரும்பும் இடத்தினை என நீங்கள் விரும்பியதை தேர்வு செய்திடலாம்.
பாண்ட் வகையினையும் நிறத்தினையும் அளவினையும் முடிவு செய்திடலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள Output Process கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். ;அதில் வீடியோ செட்டிங்ஸ் ஆடியோ செட்டிங்ஸ் விரும்பியவாறு செய்திடலாம்.
இதில் உள்ள Image Watermark கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும். அதில் வாட்டர் மார்க் இமேஜின் அளவு.அடர்ட்தி.வீடியோவில் ;வரக்கூடிய இடம் ஆகியவற்றை தேர்வு செய்திடலாம்.
டீபால்டாக கொடுக்கப்பட்டுள்ள வாட்டர்மார்க் இமேஜினை கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

டீபால்டாக கொடுக்கப்பட்டுள்ள 200 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் கீழே. இதிலிருந்து உங்களுக்கு தேவையானதை நீங்கள் தேர்வு செய்து வாட்டர் மார்க்காக கொண்டுவரலாம்.
இதுதவிர வடிவங்கள் (Shapes) கொடுத்துள்ளார்கள். நமக்கு தேவையான வடிவங்களையும் ;வீடியோவில் கொண்டுவரலாம்.
உங்கள் வீடியோவின் அனைத்து வாட்டர்மார்க் பணிகளும் முடிந்ததும் இதன் ;கீழே உள்ள RUN பட்டனை கிளிக் செய்திடவும். சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் வீடியோவில் வாட்டர் மார்க் வந்துள்ளதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.


1 comment:

  1. dear velan
    why am i not getting mails by post .please provide follow by mail facility .
    thankfully

    ReplyDelete