Sunday, March 22, 2020

வேலன்:-பைல்களை பிரிக்க -இணைத்திட -3nity File Splitter and Joiner

சில வகை பைல்கள் அளவினில் பெரியதாக இருக்கும். அதனை மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இணையத்தில் பதிவேற்றுவதிலும் சிரமம் ஏற்படும். அவ்வாறான பைல்களை வேண்டிய அளவிற்கு பிரித்து மீண்டும் ஒன்றாக சேர்த்திட இந்த மென்பொருள் பயன்படுகின்றது ;இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

பைல்களை எந்தனை துண்டுகளாக மாற்றிட வேண்டுமோ அந்த துண்டுகளை தேர்வு செயதிடவும். அதுபோல எவ்வளவு எம்பிக்களில ;அதனை பிரித்திட வேண்டுமோ அநத எம்பி அளவினை குறிப்பிட்டு பைலினை பிரித்துகொள்ளலாம். இறுதியாக எந்த இடத்தில் பைலினை சேமிக்கவிரும்புகின்றீர்களோ அந்த இடத்தினை தேரவு செய்து ஸ்லிப்ட் என்பதனை கிளிக் செய்:து ஒ.கே.தரவும். 

 பைல்களை பிரிந்ததும் உங்களுக்கான தகவல்கிடைக்கும்.
பிரிந்துள்ள பைல்களை ஒன்றாக சேர்த்திட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. பிரிந்துள்ள பைல்களை தேர்வு செய்திடவும். 
சேமிக்கவிரும்பும் இடத்தினை தேர்வு செயதிடவும். பின்னர் இதில் உள்ள ஜாயின் ;;என்பதனை கிளிக் செய்திடவும்.
சில நிமிடங்கள்காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கு இணைத்தாகிவிட்டதாக தகவல் கிடைக்கும். நீங்கள் சேமிதத இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான இணைந்த பைல்கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

No comments:

Post a Comment