Sunday, March 8, 2020

வேலன்:-டெலிட் செய்த பைல்களை மீட்டு எடுக்க-7 Data Photo Recovery

தவறுதலாக நாம் டெலிட் செய்துவிட்ட போட்டோக்கள்.வீடியோககள்.ஆடியோ பைல்கள் முதலியவற்றை மீட்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 இதில் நமது கணிணியில் உள்ள டிரைவ்களும் யுஎஸ்பி போர்டில் இணைத்துள்ள பென்டிரைவ் களும் கிடைக்கும். இதில் எந்த டிரைவிலிருந்து தகவல்களை நாம் மீட்டு எடுக்க வேண்டுமோ அந்த டிரைவ்வினை தேர் வுசெய்யவும். பின்னர் இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
டிரைவின் ஸ்கேன் முடி ந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் டிரைவிலிருந்து மீட்டு எடுக்கப்பட்ட தகவல்கள்  பால்டர்களாக காட்சிஅளிக்கும். நமக்கு எந்த போல்டர் தேவையோ அதனை கிளிக் செய்து இதில் உள்ள சேவ் ஆப்சனை கிளிக் செய்யவும். எந்த இடத்தில் நீங்கள் சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தினை தேர்வு செய்யவும். 
மீட்டு எடுக்கப்பட்ட தகவல்களின் அளவினை பார்த்து அதற்கு ஏற்ப டிரைவினில் எது காலியாக உள்ளதோ அதனை தேர்வு செய்துகொள்ளவும்.அப்போதுதான் உங்களுக்கான மீட்கப்பட்ட டதகவல்கள் முழுவதுமாக வந்து சேரும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

No comments:

Post a Comment