நாம் பயன்படுத்தும் தனி கணினி (பர்சனல் கம்யூட்டர்) யின் அனைத்து விவரங்களும் அறிய இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். உங்கள் கணினியின் ஹார்ட்வேர் தகவல்கள் நமக்கு கிடைக்கும். நாம் கடைசியாக எப்போது ஒ.எஸ் மாற்றினோமோ அந்த தேதி நமக்கு கிடைக்கும்.
இதன் மேல்புறம் விண்டோவில் OS.CPU.GPU.RAM,STORAGE,OPTICAL DEVICES.MOTHER BOARD.SECOND DEVICES.NET WORKS.PERIPHERAL&SETTINGS என நிறைய டேப்புகள் கொடுத்துள்ளார்கள். இதில் உள்ள CPU ஐகானினை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். அதில் நமது கணினியில் சிபியூவில் உள்ள தகவல்கள் கிடைக்கும்.
நமது கணினியில் டிரைவ் வகைகளையும் அதன் கொள்ளளவு விவரங்களையும் இதில் அறிந்துகொள்ளலாம்.
இதில் உள்ள நெட்ஓர்க் செட்டிங்ஸ்ஸில் தேவையான விவரம் பெறலாம். இதில் ;கடைசியாக உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நாம் நமது கணினி விவரங்களை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் நமது கணினி விவரங்களை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பயனுள்ள வழிகாட்டல்
ReplyDeleteபாராட்டுகள்
Blogger Yarlpavanan said...
ReplyDeleteபயனுள்ள வழிகாட்டல்
பாராட்டுகள்
நன்றி சார்...
வாழ்கவளமுடன்
வேலன்.