Friday, May 22, 2020

வேலன்:-வேர்ட் பைல்களை பிடிஎப் பைலாக மாற்றிட -Word to PDF.

வேர்ட் பைல்களை மற்றவர்களுக்கு கொடுக்கையில் பிடிஎப் பைலாக இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுவார்கள். அவ்வாறு பிடிஎப் பைல்களாக வேர்ட் பைல்களை மாற்றிட இந்த மென்பொருள் உதவுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


உங்களிடம் உள்ள வேர்ட் பைல்களை தேர்வு செய்திடுங்கள். பைல்களை தனிதனியாகவோ மொத்தமாகவோ நீங்கள் பிடிஎப் ஆக மாற்றிடலாம். பைல்களை முன்பின் மாற்றிஅமைக்கும ;வசதி இதில் உள்ளது.
இதில் உள்ள ஸ்டார்ட் நௌ என்பதை கிளிக் செய்திட உங்களுக்கான பைலானது மாறிட ஆரம்பிக்கும்.
நீங்கள்மாற்றும் பிடிஎப் பைலானது மற்றவர்கள் பார்க்கவேண்டாம் என நீங்கள் விரும்பினால் நீங்கள் கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்கலாம்.


பயன்படுத்த சுலபமாகவும் எளிமையாகவும் உள்ளதால் பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

No comments:

Post a Comment