Tuesday, August 31, 2010

வேலன்-அனிமேஷன் படங்கள் பாகம்-2

பழைய சிடிகளை தேடும்போது இந்த அனிமேஷன் கிடைத்தது. மொத்தம் 300 க்கும் மேல் அனிமேஷன் படங்கள் உள்ளன.பதிவின் நீளம் கருதி இரண்டாக பிரித்து முதல் பகுதியாக 150 படங்களை இன்று பதிவிடுகின்றேன்.மீதியை பின்னர் ஒரு நாள் பதிவிடுகின்றேன்.முதல் பகுதியை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.அதிலிருந்து சில படங்கள் உங்கள் பார்வைக்கு- 


ரேஸில் குதிரை ஓடவேண்டியதுதான். அதற்காக இப்படியா?


Photobucket


 தலையில் ரொம்ப தட்டிட்டாங்களோ..!
Photobucket


எப்போதுதான் முடியும் ...?
Photobucket


வீட்டில் ஆரம்பித்து எங்கெங்கோ சென்று மீண்டும் எங்கு முடிகின்றது பாருங்கள். இப்போதாவது உலகம் உருண்டை என்று ஒப்புக்கொள்றீங்களா..?.
Photobucket


நிச்சயமாக ஒட்டுகேட்கும் விளம்பரம் இலலைங்க...
Photobucket

இதற்கு முன்னரே 100 அனிமேஷன் படங்கள் உங்களுக்காக என பதிவிட்டுள்ளேன். இதுவரை அந்த பதிவினை பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.
பதிவினை பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

Monday, August 30, 2010

வேலன்-பிடிஎப்-பைலில் புகைப்படங்களை தனியே பிரிக்க


பிடிஎப் உபயோகிக்காதவர்களே இருக்கமாட்டோம். சில பிடிஎப் பைல்களி்ல் படங்கள் மட்டும் நமக்கு தேவைப்படும். பொதுவாக பிடிஎப்பிலிருந்து படங்களை எடுக்க அந்த குறிப்பிட்ட பக்கத்தை திறந்து அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பின்னர் கட்செய்து உபயோகிப்போம்.சில படங்கள் மட்டு்ம் அவ்வாறு எடுப்பதானால் பரவாயில்லை. இதுவே அதிகமான படங்கள் எடுப்பதென்றால் அவ்வளவுதான். நாம் சோர்ந்துவிடுவோம். இந்த குறையை போக்கவே இந்த சாப்ட்வேர் நமக்கு பயன்படும். 1 எம்.பி்.கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் புகைப்படங்களை பிரிக்க விரும்பும் பிடிஎப் பைலை தேர்வு செய்யவும். படங்களை சேமிக்க விரும்பும் இடத்தை தேர்வு செய்யவும். அடுத்து Next கொடுக்கவும். இந்த சாப்ட்வேரில் என்ன ஒரு விஷேஷம்  என்றால் ஒரு பிடிஎப் பைலில் எந்த பக்கத்திலிருந்து எந்த பக்கம் வரை நீங்கள் புகைப்படங்களை பிரிக்க விரு்ம்புகின்றீர்களோ அந்த பக்கத்தை இதில் தேர்வு செய்துகொள்ளலாம்.நான் 11 பக்கத்திருந்து 25 ஆம் பக்கம் வரை தேர்வு செய்துள்ளேன். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
புகைப்படங்களை வேண்டுமானால் திருப்பியும் கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இறுதியாக உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். உங்களுக்கு உங்களுடைய புகைப்படமானது தனியே சேமிக்க ஆரம்பிக்கும். சிறிது நேர காத்திருங்கள்.
நீங்கள் குறிப்பிட்ட போல்டரில் நீங்கள் விரு்ம்பிய உங்களது புகைப்படங்கள் மட்டும் இருப்பதை காணலாம்.படிக்கும் மாணவர்களுக்கு இந்த சாப்ட்வேர் நன்கு பயன்படும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன். 

Saturday, August 28, 2010

வேலன்-போல்டரை லாக் செய்ய-Folder lock

அந்தரங்கம் இல்லாத மனிதர் யார் உள்ளார்கள். நமக்கென்றுசிலஅந்தரங்க டாக்குமென்டுகள்.படங்கள்.பைல்கள்.வீடியோக்கள்.பாடல்கள் என இருக்கும்.மற்றவர்கள் பார்வையிலிருந்து நாம் அதை கணிணியில் எவ்வாறு பாதுகாத்து வைப்பது? இநத கவலையை போக்கவே இந்த சிறிய சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது. 5 எம்.பி. கொள்ளளவு கொண்டுள்ள இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்இதை கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் பாஸ்வேர்ட் கொடுத்து பைலை ஒப்பன் செய்யவும். சாவி வந்து திறந்து உங்களுக்கு ஒரு விண்டோ ஒப்பன் ஆகும்.அதில் தேவையான பைலை எடுத்துவந்து போட்டுவிடவும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது மீண்டும் வெளியே வந்து கீழ்கண்ட விண்டோவில் Lock கிளிக்செய்யவும். 
சாவி யானது விட்டலாச்சரியா படத்தில் வருவது போல வந்து போல்டரை லாக் செய்து கொள்ளும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அவ்வளவுதான். உங்கள் பைல் லாக்கரில் பத்திரமாக இருக்கும். நீங்கள் மீண்டும் பைலை பார்க்கவேண்டுமானால் இந்த லாக்கர் ஐ-கானை கிளிக் செய்யவேண்டும்.வரும் படத்தில் ஓப்பன் கிளிக் செய்யவேண்டும். இப்போது உங்களை பாஸ்வேர்ட் கேட்கும் பாஸ்வேரட் கொடுத்தவுடன் உங்கள் பைலானது ஓப்பன் ஆகும்.பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

நன்றி்-ஆனந்தன்.

Friday, August 27, 2010

வேலன்-போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற



நம்மிடம் உள்ள புகைப்படங்களை போட்டோஷாப் துணையில்லாமல் முப்பரிமான எபெக்ட்களை 3D Image கொண்டுவரலாம். 2 எம்.பி. கொள்ளளவு கொண்டுள்ள இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இங்கு சாதாரண புகைப்படத்தை எடுததுள்ளேன்.
இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு விண்டோ ஓன்று ஓப்பன் ஆகும். அதன் வலதுபுறம் கீழ்கண்ட விண்டோ வரும்.
இதில் முதலில் ஒரு பாக்ஸ் இருக்கும். நமது புகைப்படத்தை சுற்றி வண்ண நிறங்கள் வரவழைக்க. தேவையானல வண்ணங்கள் கொண்டுவரலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். அதற்கு அடுத்துள்ள கட்டத்தை கவனியுங்கள்.
3D Transformation என்று போட்டுள்ள இதில் உள்ள Rotate-ல் உள்ள ஸ்லைடரை நீங்கள் நகர்த்த படமானது வேண்டிய அளவிற்கு திரும்பும். அதைப்போலவே அடுத்துள்ள Curving  ஸ்லைடரை நகர்த்த படமானது குவிந்த படியும் - குழிந்த படியும் நமக்கு கிடைக்கும் கீழே உள்ள படங்களை பாருங்கள்.

இதைப்போலவே கடைசியாக உள்ள Scale H நகர்த்துவது மூலம் படமானது அகலத்தில் அதிகமாக மாறும். அடுத்துள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் படத்தின் நான்கு மூலைகளில்கார்னர் டிசைன்களை கொண்டுவரலாம். இதிலி எந்த கார்னர் டிசைன் வேண்டுமோ அதை கிளிக் செய்தால் அந்த டிசைனானது படத்தில் வரும். அதைப்போலவே கார்னர் கீழே நான்கு மூலைகளுக்கான ரேடியோ பட்டன் இருக்கும்.  படத்தில் உள்ள நான்கு மூலைகளில் எந்த மூலையில் கார்னர் டிசைன் வேண்டுமோ அந்த மூலைக்கான ரேடியோ பட்டனை கிளிக் செய்தால் அந்த மூலையில் டிசைன் வரும். நான் நான்கு மூலைகளிலும் கார்னர்செலக்ட்செய்துள்ளேன்.அடுத்துள்ள விண்டோவினை பாருங்கள்.
ஒரு படத்தில் உள்ள பிரதிபலிப்பை இதில கொண்டுவரலாம். இதில் உள்ள ஸ்லைடர்களை நகர்த்துவது மூலம் அதன் பிரதிபலிப்பை சுலபமாக மாற்றலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதன் உள்ளாக நமது புகைப்படம் - பெயர்கள் கொண்டுவரலாம் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
டிசைன்செய்த போட்டோக்களை வேண்டிய பார்மெட்டில் மாற்றி தனியே போல்டரில் போட்டு வைக்கலாம்.போட்டோஸ்டுடியோ வைத்திருப்பவர்கள் போட்டோஆல்பத்தின் நடுவில இதுபோல டிசைன்களை சேர்த்தால் வித்தியாசமாக இருக்கும்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
மறக்காமல் ஒட்டுபோட்டு செல்லுங்கள். அதனால் மேலும் பலர் இந்த சாப்ட்வேர் பற்றி அறிய வாய்ப்பாக அமையும்.நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.

சற்று முன் கிடைத்த தகவல்-
திரு.முஹமது நியாஜ் அவர்கள் பதிவிறக்கம் செய்வதில சிரமம் இருப்பதாக சொன்னார்.4 Shared.com ல் பதிவிறக்க சிரமமாக இருந்தால் ரபிட்ஷேரில் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

Thursday, August 26, 2010

வேலன்-டூப்ளிகேட் பைல் கிளினர் -Duplicate file cleaner



நாம் தயாரிக்கும் பைல்கள்.எடுக்கும் புகைப்படங்கள்.டவுண்லோடு செய்யும் பாடல்கள் என அனைத்தையும் கம்யுட்டரில New Folder என பெயரிட்டு சேமித்து வைப்போம். பின்னர் அந்த பைல்களை அதற்கென உள்ள ட்ரைவ்களில் தனியே காப்பி செய்துவைப்போம். ஆனால் முதலில் சேமித்துவைத்த போல்டரை டெலிட் செய்யமாட்டோம். ஞாபகமாக மறந்துவிடுவோம். இது நாளடைவில் ஒவ்வோரு ட்ரைவிலும் மலைமலையாக சேரந்துவிடும்.ஒரு டிரைவில இருக்கும் பைல்கள் அடுத்த டிரைவிலும் இருக்கும். இவ்வாறு இரட்டைவேடமிட்டு இருக்கும் பைல்க ளில் ஒன்றை அழிக்கவே இந்த சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது. இதில் டாக்குமெண்டுகள்.இ-மெயில்கள்-e-mail,photos புகைப்படங்கள்.பாடல்கள்songs, மற்றும் advanced ஆக pulverizer.synchronize filles.junk file cleaner.excel duplicate finder.bookmark cleaner ஆகியவைகளையும் இது கண்டறிந்து நீக்கும்.2 எம்.பிக்குள் உள்ளஇலவச சாப்ட்வேரான இதனை பதிவிறகக இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில 5 டேப்கள் இருக்கும். முதலில் பேசிக். அடுத்ததாக  அவுட் லுக்கில் இ-மெயில் கிளினர். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
மூன்றாவதாக இசை யை கண்டறியும் டேப். இசையில எந்த வகை பைல் என்பதனை தேர்வு செய்து ஸ்கேன் கொடுக்கவேண்டும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதைப்போலவே புகைப்படங்களும் தேவையான புகைப்படத்தின் பைலின் வகையை கொடுக்க வேண்டும்.
இதில் உள்ள வகைகளை தேர்வு செய்து பின்னர் அதில் உள்ள Scan Now என்பதனை கிளிக் செய்யவும். கீழே உள்ள விண்டோவினை பாரு்ங்கள்.
ஸ்கேன் செய்து முடித்ததும் உங்களுக்கு கீழ்கண்டவாறு விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவையில்லாத பைல்களை தேர்வு செய்து டெலிட்கொடுத்துவிடவேண்டும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இந்த சாப்ட்வேர் மூலம் டூப்ளிகேட்டாக உள்ள புக்மார்க்.எக்ஸெல்.ஷிஸ்டரி என அனைத்தையும் டெலிட் செய்யலாம்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன் பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Wednesday, August 25, 2010

வேலன்-போட்டோவை போஸ்டரில் அச்சிட -Poster Printer


நம்மிடம் உள்ள பிரிண்டர் மூலமே பெரிய பெரிய போஸ்டர்களை நாம் சுலபமாக அச்சிடலாம். நமது குழந்தைகளின் பிறந்த நாள் அன்று இவ்வாறு அவர்களின் புகைப்படத்தை பெரிய போஸ்டரில் அச்சிடலாம். அவர்களுக்கும் மகிழ்ச்சி..நமக்கும் மகிழ்ச்சி.5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள பைல் மூலம் நமது கணிணியில் உள்ள புகைப்படத்தை தேர்வு செய்யவும். நான் இந்த இயற்கை காட்சியை தேர்வு செய்துள்ளேன்.
இதை தேர்வு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்டவாறு படம் மாறிவிடும். இதில் வலது புறம் கவனியுங்கள்.
இதில் உள்ள கிராப் டூல் மூலம் புகைப்படத்தை தேவையான அளவு கட் செய்துகொள்ளலாம்.இடையில் வரும் கோடுகளின் இடைவெளியையும் நாம் தேவையான அளவு அமைத்துக்கொள்ளலாம்.படத்தை நீள வாக்கிலோ - அகல வாக்கிலோ பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்வது மூலம் அந்த வசதி நமக்கு கிடைக்கும்.அதைப்போல நமது பிரிண்டர் மாடலையும் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
கீழே உள்ள் ரேடியோ பட்டன்கள் ஒவ்வொன்றாக கிளிக்செய்து படத்தில் எவ்வாகையாக மாற்றங்கள் ஏற்படுகின்றது என்று கவனியுங்கள். 
இதில போஸ்டர் சைஸும் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். தேவையான அளவினை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
தேவையான செட்டிங்ஸ் செய்தபின் இறுதியாக Print Poster - ல் உள்ள Print கிளிக் செய்யுங்கள் சில வினாடிகள் ஒவ்வொரு பகுதியாக நமது படம் பிரிண்ட்டாகி வரும். இடைவெளியை சரியாக பொருத்தி ஒவ்வொரு படமாக ஒட்டினால் நாம் விரும்பிய போஸ்டர் கிடைக்கும்.இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது உங்கள் புகைப்படம் தேர்வு செய்யும் முன் படத்தின் ரெசுலேஷன் 400 பிக்ஸல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.அப்போழுதுதான் புகைப்படம் புள்ளிகள் இல்லாமல் அழகாக வரும். போஸ்டர் அச்சடியுங்கள். கருத்துக்களை கூறுங்கள்.( நமது பதிவுலக நண்பர் சிம்பு அவர்கள் நீண்டநாட்களாக இந்த சாப்ட்வேர்பற்றி கேட்டிருந்தார்.நேரமின்மைகாரணமாக இவ்வளவுநாள் பதிவிடவில்லை.)
வாழ்க வளமுடன்.
வேலன்.

Tuesday, August 24, 2010

வேலன்-375 ஆவது பதிவும் -வித்தியாசமான ப்ளேயரும்.

அனைவருக்கும் வணக்கம். இப்பொழுதுதான் 350 ஆவது பதிவை போட்டதுபோல் இருந்தது. அதற்குள் 375-ஆவது பதிவு வந்துவிட்டது.இநத பதிவில் வித்தியாசமான ப்ளேயரை போடலாம் என்று உள்ளேன. 12 எம்.பி. உள்ள   இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

வி.எல்.சி.ப்ளேயரைப்போல அனைத்துவிதமான பைல்களையும் இது ஆதரிக்கின்றது.ஸ்கீரினை வேண்டிய அளவிற்கு வைத்துக்கொள்ளலாம்.
கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
மணிரத்தினம் அவர்களின் படங்களில் வெளிச்சம் குறைவாக இருக்கும். அந்தமாதிரி படங்களில் தேவையான வெளிச்சத்தை நாம் கூட்டிவைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
Transparancy அளவினை மாற்றுவது மூலம் படத்தினை வேண்டிய அளவு மாற்றிக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் உள்ள பிற வசதிகள் கீழே-
மற்ற ப்ளேயரில் இல்லாத வசதி இதில் கூடுதலாக உள்ளது.  இதில் Shift + Enter அழுத்துவதன் மூலம் Desktop Mode க்கு மாற்றிக்கொள்ளலாம்.நமது Desktop பின்புறத்தில் படம் ஓடும்.இது தவிர ஒரே ஸ்கிரீல் 4 விண்டோக்களை ஓப்பன் செய்யலாம்.(ஒரு வீடியோபடம் பார்ப்பதே தலைவலி. இதில் 4 விண்டோக்களில் படம் ஓடினால்...? என நீங்கள் கேட்பது புரிகின்றது)கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில பல வீடியோக்களை ஒரே விண்டோவில் கொண்டுவருவது பற்றி பற்றிய வீடியோ டுடோரியலை கீழே காணுங்கள்.
இதன் பயன்பாட்டில் பதிவின் நீளம் கருதி கொஞ்சமாகதான் பதிவிட்டுள்ளேன்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்

Monday, August 23, 2010

வேலன்-கண்டுபிடித்து விளையாடுங்கள்.

அட...போங்க....சும்மா சாப்ட்வேர் - கல்வி - போட்டோஷாப் என்று போர் அடிக்கிறிங்கனு நீங்க சொல்றது புரிகிறது. ஒரு மாறுதலுக்கு இன்று விளையாட்டு சாப்ட்வேர் பற்றி பதிவிடுகின்றேன்.மற்ற விளையாட்டு போல் இல்லாமல் இது பொருட்களை - எழுத்துக்களை - கண்டுபிடிக்கும் விளையாட்டு. இந்த விளையாட்டு சாப்ட்வேர் கொஞ்சம் பெரிய சாப்ட்வேர் 90 எம்.பி. கொள்ளளவு. இதை பதிவிறக்க இங்கு கிளிக்செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Options கிளிக் செய்து தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
முதலில் நீங்கள் 5 கடிகாரங்களை கண்டுபிடிக்க வேண்டும். அடுத்து உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மொத்தம் 10 பொருட்கள் ஒளிந்திருக்கும். அதைப்போல் இதில் எழுத்துக்கள் மறைந்திருக்கும்.மறைந்து்ள்ள எழுத்துக்களை கண்டுபிடித்து வார்த்தையை ஒழுங்குப்படுத்தவேண்டும்.
உங்கள் கண்டுபிடிப்புக்கள் முடிந்ததும் நீங்கள் அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லப்படுவீர்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதிலும் நீங்க்ள  மறைந்துள்ள பொரு்ட்களையும் எழுத்துக்களையும் கண்டுபிடிக்க வேண்டும்.பயன்படுத்திப்பாருங்கள். சாரி...விளையாடிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Saturday, August 21, 2010

வேலன்-போட்டோஷாப் பற்றிய பாடங்களின் தொகுப்பு-பாகம் 1



பதிவு உலகில்தான் நண்பர்கள் எத்தனை வகை...ஒவ்வொருவருக்கும் நான் எப்படி பதில் கைமாறு செய்யப்போகின்றேன் என்று தெரியவில்லை. நமது பதிவுலக நண்பர் திரு.முஹம்மது நியாஸ். அவர்கள் எனது போட்டோஷாப் பற்றிய பாடங்களை அழகாக தொகுத்து எனக்கு அனுப்பிவைத்திருந்தார்.அவரின் புகைப்படம் கீழே-
அதை அப்படியே உங்களுக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.போட்டோஷாப் பற்றி தனியே பிளாக ஆரம்பித்துவிட்டேன்.அதில்  போட்டோஷாப் பற்றி மட்டும் பதிவிடும் எண்ணமும் உள்ளது. ஆனால் நேரமின்மை காரணமாக வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுகின்றது.அதற்கு முன் நண்பர் தொகுத்தளித்த இந்த புத்தகத்தை பயன்படுத்திக்கொள்ளவும்.புத்தகம் கீழே-
வேலன்-போட்டோஷாப்-பாகம்-1

ஏற்கனவே எனது பதிவுகள் அங்கங்கே வெளியிடுகின்றார்கள்.நாளையே நான் புத்தகம் வெளியிடும் அளவிற்கு பெரிய ஆளாக வந்தால் என்னை பின் தொடரும் நண்பர்களுக்கு முதல் பிரதியை இலவசமாக வழங்க உள்ளேன். எனவே நான் இந்தப் பதிவில் உள்ள போட்டோஷாப் ஆக்கங்களை போட்டோஷாப் புத்தகமாக வெளியிட உள்ளேன். ஆகவே பதிவில் உள்ளவைகள் படிப்பதற்கு மட்டுமே. வாசகர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே! வேறு எந்த மாற்று உபயோகத்திற்கும் என் அனுமதியின்றி பிரதி எடுப்பது மறுக்கப்படுகிறது.



புத்தகமாக தொகுத்தளித்த நண்பர் திரு.முஹம்மது நியாஸ் அவர்களுக்கு எனது சார்பாகவும் பதிவர்கள் சார்பாகவும் நன்றி..


வாழ்க வளமுடன்,
வேலன்.





Friday, August 20, 2010

வேலன்-விரும்பிய நேரத்தில் விரும்பியதை பெற



இன்டர்நெட் உபயோகிக்கும் சமயங்களில் நாம் வெளிஉலகத்தையே மறந்துவிடுவோம்.நம்மை மீண்டும் நினைவுக்கு கொண்டுவரவே இந்த மிகவும் சின்ன சாப்ட்வேர் உபயோகப்படும். 1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வலதுபுறம் அன்றைய காலண்டர் வந்துவிடும். அன்று தேவையான நேரத்தையோ அல்லது மற்றொருநாள் தேதியையோ தேர்வு செய்துகொள்ளலாம்.இடதுபுறம் முதல் கட்டத்தில் கீழ்கண்ட விண்டோ வரும்.
கம்யுட்டர் ரீ-ஸ்டார்ட் முதற்கொண்டு தேவையானதை தேர்வு செய்துகொண்டு  நேரத்தை செட்செய்யலாம். குறிப்பிட்ட நேரத்தில் இந்த சாப்ட்வேர் கம்யுட்டரில் அதனுடைய பணியை  சிறப்பாக செய்யும்.இந்த செயலை எப்பொழுதெல்லாம் செய்யவேண்டும் என்பதையும் குறிப்பிடலாம். கீழே உள்ள விண்டோவி ல் பாருங்கள்.
இதில் இன்னும்ஒரு சிறப்பு என்னவென்றால் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு இணையதளம் திறக்கவேண்டும் என்றால் அந்த இணையதள முகவரியின் யுஆல்எல் லிங்கை இதில் குறிப்பிட்டுவிட்டு நேரத்தை செட் செய்துவிட்டால் குறிப்பிட்ட நேரத் தில் இது தானே அந்த லிங்கை திறக்கும்.உதாரணத்திற்கு காலை 10 மணிக்கு http://velang.blogspot.com/ திறக்கவேண்டும் என்று செட்செய்துவிட்டால் சரியாக 10 மணிக்கு அந்த இணையதளம் நமக்கு திறக்கும்.
இதைப்போல தகவல்பெட்டியில் நமது டெக்ஸ்டை தட்டச்சு செய்துகொள்ளலாம். குறிப்பிட்ட நேர்த்தில் டெக்ஸ்ட் நமக்கு நினைவுபடுத்தும்.
(கம்யுட்டரில் பணிபுரியும் சமயம் நான் தண்ணீர் மோட்டார் ஆன் செய்துவிட்டு சுத்தமாக மறந்துவிடுவேன்.டேங்க் நிரம்பி தண்ணீர் வெளிவரும் சமயம் தான்  ஞாபகம் வரும்.மோட்டார் ஆப் செய்வேன்.இந்த சாப்ட்வேர் போட்டதில் இருந்து அந்த ப்ரச்சனை இல்லை-கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்)
இதைப்போலவே நேரத்தை செட் செய்துவிட்டு நமது கம்யுட்டரில் உள்ள எந்த ஒரு பைலை - புகைப்படத்தை திறக்க செய்யலாம்.மாலை 5 மணிக்கு நமது காதலி -மனைவியின் புகைப்படம் -குழந்தைகள் புகைப்படம் - திறக்குமாறு செட்செய்துவிட்டால் அந்த நேரம் சரியாக அந்த புகைப்படம் நமக்கு டிஸ்பிளே ஆகும்.தமிழில் விளக்கம் புரியாதவர்கள் வசதிக்காக ஆங்கிலத்திலும் இதன் விவரங்கள் கீழே இணைத்துள்ளேன். 
Need a reminder? No problem! Set it up easily with TimeBell!
TimeBell is designed with three important objectives:
provide you a user-friendly interface.
be simple and easy to operate.
provide multiple useful features, but not an overload.
With TimeBell, you can:
create an unlimited number of reminders.
insert a warning beep.
shut off, restart, standby, logoff or hibernate your PC at a time you select.
run a selected program, open a selected file or open a selected web site at a time you select.
run tasks one time, or on a recurring basis (hourly, daily, weekly, monthly or yearly).
TimeBell settings include the ability to:
run TimeBell 3 automatically when windows starts.
minimize TimeBell 3 to the system tray (near the clock).
open a window showing you a list of reminders for the day.
display on your desktop a separate monthly calendar, with selectable transparency.
show a message box of missed one-time reminders.
change the appearance, with a choice of skins, colors and fonts.
have the program tell you time every hour with a pleasant female voice.
இந்த பதிவை ஓட்டி ஒரு நகைச்சுவை ஞாபகம் வருகின்றது..நண்பர் ஒருவரை பார்க்க அவரது அலுவலகம் சென்றிருந்தேன். அந்த சமயம் அவரின் மேனேஜர் அவர் செய்த சிறு தவறுக்காக அவரை அழைத்தார். மேனேஜர் ரூ்ம் செலலும் முன் நண்பர் தனது பர்சை திறந்து அதிலிருந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு பின்னர் மேனேஜர் ரூம் சென்றார். எனக்கு மிகுந்த ஆச்சர்யம்.பரவாயில்லை. நண்பர் மேனேஜரை பார்க்கும் முன் பர்சிலிருக்கும் சாமியை வேண்டிக்கொண்டு செல்கின்றார் என நினைத்தேன். திரும்பிவந்ததும் எந்த சாமிபடம் அது என தெரிந்துகொள்ள ஆவலாய் இருந்தேன். திரும்பி வந்ததும் பர்ஸை வாங்கிப்பார்ததால் அவரது மனைவியின் புகைப்படம் இருந்தது. ஏன் மேனேஜர் ரூம் செல்லும் முன்னர் மனைவின் புகைப்படத்தை பார்த்து செல்கின்றாய் என கேட்டேன். அதற்கு அவர் கல்யாணம் பண்ணிக்கொண்டு வீட்டில் இவ்வளவு பெரிய ப்ராபளத்தையே சமாளிக் கின்றோம்.. இது என்ன சின்ன ப்ராபளம். இதை சமாளிக்க முடியாதா ? என நினைத்துகொள்வதாக சொன்னார் அவர் சரி..அப்ப நீங்க......?.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.