வேலன்:-வீடியோ கட்டர்.weeny video cutter

நம்மிடம் உள்ள வீடியோபைல்களை தேவையான இடத்திற்கு மட்டும் வெட்டி பயன்படுத்த ;இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 20 எம்.பி.கொள்ளளவு கொண்ட ;இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்தபின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

தேவையான வீடியோ பைலினை தேர்வு செய்யவும். பின்னர் நமக்கு எந்த பார்மெட்டில் வீடியோ வேண்டுமோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பின்னர் வீடியோவினை ஒட விடவும். தேவைப்படும் இடம் வந்ததும் இதில் உள்ள ஸ்;லைடரை கிளிக் செய்யவும். தேவைப்படும் இடம் முடிந்ததும் இதில் உள்ள எண்ட் ஸ்லைடரை கிளிக் ;செய்யவும். பின்னர் இதில் உள்ள Cut Now கிளிக் ;செய்யவும்.கீழே உள்ள விண்டோஓப்பன் ஆகும்.

சில நிமிட காத்திருப்பிற்கு பின்னர் நாம் கட் செய்த வீடியோ மட்டும் நாம்தேர்வு செய்த பார்மெட்டில் கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...