Sunday, January 30, 2011

வேலன்-எனது பார்வையில் முதல் இடம்.

சில மாதங்களாக எனது மனதிற்குள் பெரும் குழப்பம்.எனது பதிவு மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றதா? அதனால் மற்றவர்கள் உண்மையிலேயே பயனடைகின்றார்களா ? தொழில்நுட்பம் என்னும் சிறிய வட்டத்தித்திற்குள் நம்பதிவுகளை போடுவதா, ? மருததுவம் - கல்வி -போட்டோஷாப் -தொழில்நுட்பம் என எல்லாதரப்பு மக்களும் பயனடையும் பதிவுகளை பதிவிடுவதா?

தொழில்நுட்பத்தில் பல ஜாம்பவான்கள் இருக்கையில் என்னாலும் முதல் இடம் பிடிக்க முடியும் என இந்த மாதம் ஆரம்பத்தில் முதல் இடம் பிடித்துவிட்டேன்.அதற்கான ஸ்கிரீன்ஷாட் கீழே-
ஜீலை மாதம் என்னுடைய பிளாக் 5 வது இடத்தில் இருந்தது. 

ஆகஸ்ட் மாதம் திரு.பிரபு அவர்கள் வெளியிட்ட பாராட்டு கீழே-
எந்த பதவியில் இருந்தாலும் முதல் இடத்தில் இருக்கும் போதே விலகிவிடுவதுதான் சிறந்தது. நிரந்தர முதல்வர் போல் இந்த இடம் நிரந்தரமாக பிடிக்கும் ஆவல் எனக்கு இல்லை.இந்த இடம் தக்கவைத்துக்கொள்ள நான் தொழில்நுட்ப பதிவுமட்டும்தான் போடவேண்டும். மருத்துவம் - கல்வி--தொழில்நுட்பம் - அரசு சார்ந்த பதிவுகள் -போட்டோஷாப் -அனிமேஷன் - என பலவிஷயங்களை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளமுடியாது.(இதன் காரணமாக நான் வெளியிட்ட முந்தைய தொழில்நுட்பம் இல்லா பதிவுகள் சுமார் 25 பதிவுகளை நான் நிறுத்தி வைத்துள்ளேன் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்).பல தரப்பட்ட வாசகர்களும் எனது பதிவிற்கு வருகின்றார்கள்.அவர்கள் வெறும் தொழில்நுட்பத்திற்காக மட்டும் வருவதில்லை. என்னிடம் பல புதிய விஷயங்களை எதிர்பார்க்கின்றார்கள்.நண்பர்களுக்குள் போட்டி -பொறாமை வரக்கூடாது .புதியவர்கள் இந்த இடத்தை தாராளமாக பிடித்துக்கொள்ளட்டும்.எனக்கு தெரிந்த விஷயங்களை -தொழில்நுட்பங்களை -தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆவலிலேயே எனது சொந்த செலவில் பதிவிட்டுவருகின்றேன்.போகும் போது என்ன கொண்டுபோகபோகின்றோம் - ஒன்றுமில்லை.....இணைய உலகத்தில் வேலன் என்கின்ற பெயர் அனைவரின் மனதில் இருந்தால் அதுவே எனக்கு போதும்.அதனால் இனி வரும் பதிவுகளில் 90 சதவீதம் தொழில்நுட்பத்துடனும் 10 சதவீதம் இதர தகவல்களுடன் பதிவிடவுள்ளேன்

இந்த பதிவினால் யார்மனதாவது புண்பட்டிருந்தால் தயவு கூர்ந்து மன்னிக்கவும்.எனது இந்த முடிவுக்கு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.எனது பதிவுலக பயணம் தொடர அது உதவும்.
வாழ்க வளமுடன்.
வேலன்.



Saturday, January 29, 2011

வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க-Super Taxi Driver

முந்தைய பதிவுகளில் டிரைன் ஓட்டுவது - பைக் ஓட்டுவது -கார் ஓட்டுவது என பார்த்தோம். இன்றைய பதிவினில் டாக்ஸி டிரைவராக ஆகலாம் வாங்க.65 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஒப்பன ஆகும். 
 தேவையான வண்டியை தேர்வு செய்தபின் விளையாட ஆரம்பியுங்கள்.உங்களுக்கு அழைப்பு வரும். வாடிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு கிளம்ப வேண்டும்.
உங்களுக்கு ரூட் மேப்பும் கிடைக்கும். அதில் குறிப்பிட்ட இடத்திற்கு நம்ம ஊரில் உள்ள சில டாக்ஸிடிரைவர்கள் போல் ஊர் சுற்றி அழைத்துசெல்லாமல்  பயணிகளை அவர்கள் சொல்லும் இடத்தில் சேர்க்கவேண்டும்.குழந்தைகள் விரும்பி விளையாடுவார்கள்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
எனது முந்தைய பதிவான வேலன்-500 ஆவது பதிவு க்கு வந்தவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Thursday, January 27, 2011

வேலன்-500 ஆவது பதிவு.

அனைவருக்கும் வணக்கம்.இது என்னுடைய
Photobucketஆவது பதிவு.
தொடர்ந்து ஆதரவு தரும் அன்பு உள்ளங்களுக்கும் ஒவ்வொரு பதிவிற்கும் ஓட்டினை பதியும் நண்பர்களுக்கும்-கருத்துரை எழுதும் அன்பர்களுக்கும் -பின்தொடரும் 880 நண்பர்களுக்கும்.-பதிவுகளை வெளியிடும் கூகுள் நிறுவனத்தாருக்கும் -தமிழ்கம்யூட்டர் புத்தக நிறுவனத்தாருக்கும் -திரட்டிகளான தமிலிஷ் -தமிழ்10 -ஈகரை -திரட்டி-முத்தமிழ்மன்றம் -தமிழ்உலகம் -யாழ்தேவி -தட்ஸ்தமிழ் -இதமிழ் -தமிழர்களின் சிந்தனைகளம் -சுதந்திர மென்பொருள் மற்றும் யூத்புல்விகடனுக்கும் எனது இதயபூர்வமான
நன்றிகள்.
வாழ்கவளமுடன்.
Photobucket

Wednesday, January 26, 2011

வேலன்-mkv கட்டர் உபயோகிப்பது எப்படி?


இணையத்தில் வெளிவருகின்ற வீடியோக்களில் சில mkv பார்மெட்டிலே வெளிவரும்.அதில் குறிப்பிட்ட காட்சியைமட்டும் தனித்துபிரித்து பார்க்க இந்த சாப்ட்வேர் உதவும்.இதைப்போலவே ஏற்கனவே நாம் mp4 கட்டர் உபயோகிப்பது பற்றி முந்தைய பதிவினில் பார்த்தோம்.இரண்டும் ஒரே மாதிரி இருந்தாலும் இரண்டும் வெவ்வேறானவையாகும்.7 எம்.பி.. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
இதில் உள்ள ஓப்பன் என்பதில் உங்கள் ஹார்ட்டிஸ்கில் உள்ள படத்தை தேர்வு செய்யுங்கள்.Play பட்டனை அழுத்துங்கள்.குறிப்பிட்ட காட்சி வரும் வரை காத்திருக்கவும். தேவையான இடம் வந்ததும் Select Start கிளிக் செய்யவும். காட்சி முடியும் வரை காத்திருக்கவும். இப்போது Select End கிளிக் செய்யவும். சில நிமிடங்கள் காத்திருக்கவும. உங்கள் விருப்பமான இடத்தில் சேமிக்கவும். சேமித்ததை பிளே செய்தும் பார்க்கலாம். அதைப்போல ஸ்கிரீன் அளவினையும் தேவைபோல் வைத்துக்கொள்ள்வும்.பயன்படுத்த சுலபமாக இருக்கின்றது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துககளை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்.
வேலன்.


JUST FOR JOLLY PHOTOS:-
ரெடியாயிட்டியா...இப்போ போட்டோ எடுக்கட்டுமா?

Tuesday, January 25, 2011

வேலன்-பிராட்பாண்ட்டின் வேகத்தை அறிந்துகொள்ள

மருத்துவமனை சென்றால் முதலில் சோதிப்பது நமது பி.பி.தான்.பி.பி.அதிகம் என்றாலும் அவஸ்தைதான் - பி.பி.குறைவு என்றாலும் வேதனைதான்.நார்மல் என்றால் மனம் நிம்மதி அடையும். ஆனால் கம்யூட்டரில் பார்க்கப்படும் பி.பி.அளவு அதிகம் என்றால் மனம் மகிழ்ச்சி அடையும்.என்ன குழப்பமாக உள்ளதா..? நமது இணைய இணைப்பின் -பிராட்பாண்ட்-வேகத்தை அளவிட பல தளங்கள் இருந்தாலும் இது சுலபமாகவும் அருமையாகவும் உள்ளது.இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள Begin கிளிக் செய்யவும்.
இதில் உள்ள மீட்டர் இணைய வேகத்திற்கு ஏற்ப சுற்றும்.இறுதியாக டவுண்லோடு ஸ்பீடு நமக்கு கிடைக்கும். 
மீண்டும் மீட்டர் சுற்றி அப்லோடு ஸ்பீடு கிடைக்கும். 
பழைய அளவினையும் புது அளவினையும் நாம் கிராப் மூலம் பார்த்துக்கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

Monday, January 24, 2011

வேலன்-ஹார்ட்டிரைவின் காலி இடத்தை அதிகரிக்க.


முக்கியமான சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும்போதும் - நீரோவில் சி.டி.காப்பிசெய்யும்போதோ அல்லது ஏதாவது பைல்களை சேமிக்கும்போதோ டிரைவில் இடம் இல்லை என்கின்ற தகவல்வந்து நம்மை எரிச்சலுட்டும். தற்காலிகமாக நாம் இடம் ஏற்படுத்திக்கொடுத்து நிலைமையை சமாளிக்கலாம். அதை புதியவர்கள் எவ்வாறு செயல்படுத்துவது என்று இன்று பார்க்கலாம்.முதலில் ஒவ்வொரு டிரைவிலும் எவ்வளவு காலி இடம் இருக்கின்றது என்பதனை தனியே குறித்துக்கொள்ளுங்கள்.இப்போது My Computer மீது ரைட் கிளிக செய்து Properties கிளிக் செய்யுங்கள். கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் System Restore டேபை தேர்வு செய்யுங்கள்.
அதில் எந்த டிரைவின் அளவை அதிகரிக்க வேண்டுமோ அதனை தேர்வு செய்யுங்கள். நான் சி - டிரைவை தேர்வு செய்துள்ளேன்.இப்போது Setttings கிளிக் செய்யுங்கள்.
வரும் விண்டோவில் Disk space to use என்பதில் உள்ள ஸ்லைடரை Max -திலிருந்து Min - க்கு கொண்டுவாருங்கள். கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள். 
ஓ.கே. கொடுத்து பின்னர் மீண்டும் திறந்து இப்போது தேவையான அளவிற்கு ஸ்லைடரை நகர்த்துங்கள்.
மீண்டும் ஓ,கே. கொடுததுவிடுங்கள் இப்போது உங்கள் டிரைவில் காலி இடம் எவ்வளவு உள்ளது என்று பாருங்கள. முதலில் குறித்த அளவையும் இதையும் ஒப்பிட்டு பாருங்கள்.நிச்சயம் காலி இடத்தின் அளவு அதிகமாக மாறிஇருக்கும். நான் விண்டோஸ் எக்ஸ்பியில் இந்த முறையை பயன்படுத்தி டிரைவின் இடத்தை அதிகரிக்கின்றேன். நீங்களும முயன்று பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Sunday, January 23, 2011

வேலன்-ஸ்கிரின் சேவரில் நகைச்சுவை -தத்துவங்கள் -பொன்மொழிகளை கொண்டுவர

ஸ்கிரின்சேவரில் விதவிதமான படங்கள் - வீடியோக்கள் பார்த்தோம். ஆனால் கருத்துள்ள பொன்மொழிகள்.நகைச்சுவைகள்-பயனுள்ள தகவல்களை ஸ்கிரீன் சேவராக வரவழைக்க முடியுமா? இந்த சாப்ட்வேரின் துணைகொண்டு நாம் வரவழைக்க முடியும். 1 எம்.பி. கொள்ளளவை விட குறைவான அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து பின்னர் உங்கள் மவுஸை ரைட் கிளிக் செய்து Properties பார்க்கையில் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் Screen Saver தேர்வு செய்யவும்.வரும் விண்டோவில் MomSoft Jokes தேர்வு செய்து ப்ரிவியு கொடுக்கவும. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
ஏற்கனவே அவர்கள் கொடுத்துள்ள நகைச்சுவைகள் - தத்துவங்கள் நமக்கு ஸ்கிரின் சேவரில் கிடைக்கும். அவர்கள் என்ன தருவது? நாமே நமக்கு பிடித்த நகைச்சுவைகள் - தத்துவங்கள் - பொன்மொழிகளை அமைக்கலாம் வாங்க. அதற்கு நீங்கள் சி-டிரைவில் உள்ள ப்ரோகிராம் தேர்வு செய்யுங்கள். வரும் விண்டோவில் mom soft தேர்வு செய்யுங்கள் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
அதில் நான்கு நோட்பேட் பைல்கள் இருக்கும். அதனை ஓவ்வொன்றாக கிளிக் செய்தால் கீழ்கண்டவாறு விண்டோ வரும்.
இதில் Startக்கும் End க்கும்  நடுவில் நமது பொன்மொழிகள் - நகைச்சுவைகள் - தத்துவங்களை தட்டச்சு செய்துகொள்ளவேண்டியதுதான். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
Start
The Airplane Law:
When the plane you are on is late, the plane you want to transfer to is on time.
End
இந்த வாக்கியம் ஸ்கிரீன் சேவரில் கீழ்கண்ட வாறு வரும்.
அவ்வளவுதாங்க. அப்புறம் என்ன - வேண்டிய வார்த்தைகளை -தத்துவங்களை - நகைச்சுவைகளை - பொன்மொழிகளை எழுதி மற்றவர்களை அசத்துங்கள்.தமிழ்பற்று இருப்பவர்கள் திருக்குறளை இதுபோல் வரவழைக்கலாம்.
பதிவினை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Saturday, January 22, 2011

வேலன்-குருவிகளின் நகரம்.

குருவி பற்றி ஏகப்பட்ட திரைப்பட பாடல்கள் வந்துள்ளது. படமும் வந்துள்ளது.விளையாட்டும் பல உள்ளது. அதில் அருமையாக உள்ள விளையாட்டு ஒன்றை இன்று பார்க்கலாம். 80 எம்.பி. கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நமது பெயரை தட்டச்சு செய்யவும்.பிளே கொடுக்கவும்.
குருவிகள் கலர் கலராக வரிசையாக வரும். அதில் கீழே சின்ன தொட்டியில் கலர்கலராக குருவிகள் வரும். அவ்வாறு வரிசையில் வருகின்ற குருவிகளில் நமது தொட்டியில் உள்ள குருவி எந்த நிறமோ அந்த நிற குருவியுடன் சேர்க்கவும்.மூன்று குருவிகள் சேர்ந்ததும் பறந்து சென்றுவிடும். 
 அடுத்தடுத்த நிறங்கள் ஒன்று சேர்ந்தால் நமக்கு கூடுதல் பாயிண்ட்கள் கிடைக்கும்.
 வரிசையாக வரும் குருவியின் பாதையின் முடிவில் பூனையின் குகை இருக்கும்.தெரியாத தனமாக ஒரு குருவி உள்ளே நுழைந்துவிட்டால் அனைத்து குருவிகளையும் கடகடவென பூனை சாப்பிட்டுவிடும்.அதனால் பூனை சாப்பிடாமல் கவனமாக விளையாடவேண்டும்.
இவ்வாறாக ஒவ்வொரு நிலையாக போய்கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு நிலைக்கும் பாதைகள் வெவ்வேறாக இருக்கும்.விளையாடி பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

Thursday, January 20, 2011

வேலன்-இரவில் இலவச பதிவிறக்க நேரத்தை செட் செய்ய

24 மணிநேரமும் இணைய இணைப்பு இலவசம் என்றில்லாமல் இரவு 2 மணி முதல் காலை 8 மணிவரை இலவச பதிவிறக்கம் அனுபவிப்பவர்கள் ஏராளம். அதிகாலை 2.15 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து கம்யூட்டரை ஆன்செய்துவிட்டு மீண்டும் உறக்கத்தை தொடருவார்கள். காலை 7.45 க்கு இணைய இணைப்பை துண்டித்துவிடுவார்கள். எப்பொழுதாவது என்றால் சரி..தினசரி அவ்வாறு எழுந்து டவுண்லோடிங் போட்டுவிட்டு படுப்பது என்றால் சிரமம். அதுபோல்வெளியில் எங்காவது சென்றாலும் - இரவு பணிக்கு சென்றலாலும் டவுண்லோடு செய்வது கடினமே. அந்த கடினமான பணியை சுலபமாக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண் டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள செட்டிங்ஸ் படி நாம் பதிவிறக்கம் செய்யும் நேரத்தை நிர்ணயிக்கலாம். அதிகாலை 2 மணியிலிருந்து இலவசம் என்றாலும் நாம் 2.15 மணியை செட் செய்வதே நமக்கு பயன்தரும்.அதுபோல் காலை 8 மணிவரை இலவச நேரம் இருந்தாலும் 15 நிமிடம் முன்னரே முடித்துவிடவேண்டும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இந்த சாப்ட்வேரை பற்றி நண்பர் பதிவிட்டுள்ளார். அவர்பிளாக்கில் பதிவிட்டுள்ள பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.விரிவான விளக்கம் கொடுத்துள்ளதால் மேலும் நான் விளக்கவில்லை...இந்த சாப்ட்வேர் முக்கியமாக பிஎஸ்என்எல் -BSNL -சந்தாதரர்களுக்கு மிகவும் பயன்படும்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
நன்றி - Sarath Cholayil

வாழ்க வளமுடன்.
வேலன்.



Wednesday, January 19, 2011

வேலன்-MP4 கட்டர் உபயோகிப்பது எப்படி?

இணையத்தில் வெளிவருகின்ற வீடியோக்களில் சில mp4 பார்மெட்டிலே வெளிவரும்.அதில் குறிப்பிட்ட காட்சியைமட்டும் தனித்துபிரித்து பார்க்க இந்த சாப்ட்வேர் உதவும்.7 எம்.பி.. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஓப்பன் என்பதில் உங்கள் ஹார்ட்டிஸ்கில் உள்ள படத்தை தேர்வு செய்யுங்கள்.Play பட்டனை அழுத்துங்கள்.குறிப்பிட்ட காட்சி வரும் வரை காத்திருக்கவும். தேவையான இடம் வந்ததும் Select Start கிளிக் செய்யவும். காட்சி முடியும் வரை காத்திருக்கவும். இப்போது Select End கிளிக் செய்யவும். சில நிமிடங்கள் காத்திருக்கவும. உங்கள் விருப்பமான இடத்தில் சேமிக்கவும். சேமித்ததை பிளே செய்தும் பார்க்கலாம். அதைப்போல ஸ்கிரீன் அளவினையும் தேவைபோல் வைத்துக்கொள்ள்வும்.பயன்படுத்த சுலபமாக இருக்கின்றது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துககளை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
கடைசியாக ஒரு முறை பாடத்தை படித்துபார்ப்போம்...இல்லையென்றால் இப்படியே மாடுமேய்க்க சென்றுவிடலாமுனு நினைக்கின்றேன்...என்ன சொல்றீங்க...?

Tuesday, January 18, 2011

வேலன்-போட்டோஷாப்-போட்டோவில் ஸ்டிக்கர் செய்ய


நமது புகைப்படத்தை ஸ்டிக்கர் மாடலில் கொண்டுவருவதை இன்று பார்க்கலாம்.ஸ்டிக்கர் இல்லாத இடங்களே இல்லை எனும்போது நாமும் நமது புகைப்படத்தை ஸ்டிக்கர்மாடலில் டிசைன்செய்துகொள்ளலாம். 20 கே.பி.அளவுள்ள இந்த ஆக்ஷன் டூலை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இப்போது தேவையான புகைப்படத்தை தேர்வு செய்துகொள்ளவும்.சாதாரண குருவிப்புகைப்டததை தேர்வு செய்துள்ளேன்.கீழே உள்ள படத்தை பாருங்கள்
ஸ்டிக்கராக மாற்றியபின் வந்துள்ள படம் கீழே-
இப்போது இந்த பறவைகளின் புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன்.
உங்களுக்கு வட்டத்திற்கு உள் படம் கிடைக்கும்.கர்சர் மூலம் படத்தை நான்கு புறமும் வட்டத்தை தொடுவதுபோல் கொண்டுவந்து பின்னர் என்டர் தட்டு்ங்கள்.
இப்போது அழகிய படம் ரெடி.
பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
என்ன அப்படி பார்க்கறீங்க.....நாம் இருவர் நமக்கு ஒருவர்ன்னு சொன்னது எங்களையும் சேர்த்துதான்......!

Sunday, January 16, 2011

வேலன்-டிரைன் ஓட்டலாம் வாங்க

ரயில் பயணங்களில் போவது இனிய அனுபவம் என்றால் அதை ஒட்டுவது ஒரு திரில்லிங்கான அனுபவம் ஆகும்.பொங்கலுக்கு கார்ட் ஊருக்கு சென்றுவிட்டதால் தற்காலிகமாக நமக்கு ஒரு டிரைனை கொடுத்துள்ளார்கள்.வாங்க நாமும் ரயிலை ஒட்டிப்பார்ககலாம்.நீங்கள் ரயிலை ஒட்டதயாராகிவிட்டீங்களா...? வாங்க ரயிலைஒட்டி பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் அருமை நண்பர்களை பயணிகளாக ஏற்றிக்கொண்டு டிரைனை இயக்க தொடங்குங்கள்.இதில் உள்ள டிரைவர் மோடை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அம்பு குறிகள் தான் உங்கள் கண்ட்ரோல்.உங்கள் கண்ட்ரோலுக்கு ஏற்ப வண்டி நகர்வதைகாண்பீர்கள்.
ஸ்டேஷன் வந்ததும் பிரேக் போட்டு நிறுத்திவிடுங்கள். இரண்டு முன்று முறை வண்டி ஸ்டேஷன் ப்ளாட்பார்ம் தள்ளி நிற்க்கும். நண்பர்கள் தானே அட்ஜ்ஸ்ட் செய்துகொள்ள சொல்லுங்கள்.இதில் நல்லா டிரைனிங் எடுத்துக்குங்க...அடுத்த பொங்கல் ஸ்பெஷலுக்கு ரயில்வே அமைச்சரிடம் சொல்லி கார்ட்போஸ்டிங் வாங்கிக்கலாங்க....

வாழ்க வளமுடன்.
வேலன்.

Saturday, January 15, 2011

வேலன்-கற்பனை உருவங்கள் உருவாக்கும் விளையாட்டு

ஒரே களிமண்தான். அதில் விதவிதமான கடவுள் உருவஙகள் உருவாக்குவதில்லையா...அதுபோல் விதவிதமான கற்பனை உருவங்களை உருவாக்கி விளையாடும் விளையாட்டை இன்று காணலாம்.7 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
அதில் நியு கேம் கிளிக் செய்தால் பல தலைப்புகளில் பல உருவங்கள் கிடைக்கும். ஒவ்வொன்றாக கிளிக் செய்ய பக்கத்தில் உள்ள கட்டத்தில் உருவங்கள் தெரியும். ஓ. கே. தாருங்கள். நான் அனிமெல்ஸ்ல் ஆடு உருவம் தேர்வு செய்துள்ளேன்.
பக்கத்தில் உள்ள கட்டத்தில் இருந்து துண்டுகளை எடுத்து உருவத்தில் பொருத்த வேண்டும்.
உருவங்களின் அளவுக்கு ஏற்ப துண்டுகளை சுழற்றும வசதியும் உள்ளது. துண்டின் மேல் ரைட் கிளிக் செய்ய விண்டோ ஓன்று ஓப்பன் ஆகும். அதில் விதவிதமான போசிஷனில் துண்டுகள் இருக்கும். தேவையானதை கிளிக் செய்து கட்டத்தில் பொருத்தவேண்டும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள ஆப்ஷனை தேர்வு செய்து நிறங்கள் - பின்புற நிறங்கள் -அளவுகள் என தேவையானதை தேர்ந்தெடுக்கலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
நாம் கற்பனைக்கு ஏற்றவாறும் டிசைன் செய்து ஒரு பெயரை அதற்கு கொடுத்து அதனை சேமிக்கலாம். நானே டிசைன் செய்துவைத்துள்ள உருவத்தை கீழே பாருங்கள்.
சரியான நீங்கள் பொருத்திவிட்டால் பாராட்டு விண்டோ ஒன்று உங்களுக்கு  தோன்றும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பதிவினை பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 

வாழ்க வளமுடன்.
வேலன்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Friday, January 14, 2011

வேலன்-விதவிதமான டெக்ஸ்டாப் பேக்கிரவுண்ட் கொண்டுவர

டெக்ஸ்டாப்பில் விதவிதமாக நமது புகைப்படங்களை பேக்கிரவுண்ட்டில் தானே மாற்றுவதை இன்று காணலாம். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு டாக்ஸ்க்பாரில் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள பேக்கிரவுண்ட செட்டிங்ஸ் கிளிக்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நமது புகைப்படங்கள் உள்ள போல்டரை தேர்வு செய்யவும்.
இதில் நான்காவதாக உள்ள காலண்டரை தேர்வு செய்யவும். விதவிதமான மாடல்களில் காலண்டர் உங்களுக்கு கிடைக்கும்.அதில் விருப்பமான பெயரை தட்டச்சு செய்துகொள்ளலாம்.
இதில ஹாட் கீ வசதி உள்ளதால் தேவையானதை தேர்வு செய்துகொள்ளவும்.
இறுதியாக உள்ள tap-ல் உள்ள miscellaneous செட்டிங்ஸ் கிளிக் செய்து தேவையான ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
விதவிதமான போட்டோக்களை பேக்கிரவுண்ட் ஆக வைத்துக்கொள்ளுங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

வாழ்த்தலாம் வாங்க பதிவில் சிறந்த சமூக சேவைக்காக விருது வாங்கிய திரு.கோவை சக்தி அவர்களை வாழ்த்தலாம் வாங்க.