சில மாதங்களாக எனது மனதிற்குள் பெரும் குழப்பம்.எனது பதிவு மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றதா? அதனால் மற்றவர்கள் உண்மையிலேயே பயனடைகின்றார்களா ? தொழில்நுட்பம் என்னும் சிறிய வட்டத்தித்திற்குள் நம்பதிவுகளை போடுவதா, ? மருததுவம் - கல்வி -போட்டோஷாப் -தொழில்நுட்பம் என எல்லாதரப்பு மக்களும் பயனடையும் பதிவுகளை பதிவிடுவதா?
தொழில்நுட்பத்தில் பல ஜாம்பவான்கள் இருக்கையில் என்னாலும் முதல் இடம் பிடிக்க முடியும் என இந்த மாதம் ஆரம்பத்தில் முதல் இடம் பிடித்துவிட்டேன்.அதற்கான ஸ்கிரீன்ஷாட் கீழே-
ஜீலை மாதம் என்னுடைய பிளாக் 5 வது இடத்தில் இருந்தது.
ஆகஸ்ட் மாதம் திரு.பிரபு அவர்கள் வெளியிட்ட பாராட்டு கீழே-
எந்த பதவியில் இருந்தாலும் முதல் இடத்தில் இருக்கும் போதே விலகிவிடுவதுதான் சிறந்தது. நிரந்தர முதல்வர் போல் இந்த இடம் நிரந்தரமாக பிடிக்கும் ஆவல் எனக்கு இல்லை.இந்த இடம் தக்கவைத்துக்கொள்ள நான் தொழில்நுட்ப பதிவுமட்டும்தான் போடவேண்டும். மருத்துவம் - கல்வி--தொழில்நுட்பம் - அரசு சார்ந்த பதிவுகள் -போட்டோஷாப் -அனிமேஷன் - என பலவிஷயங்களை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளமுடியாது.(இதன் காரணமாக நான் வெளியிட்ட முந்தைய தொழில்நுட்பம் இல்லா பதிவுகள் சுமார் 25 பதிவுகளை நான் நிறுத்தி வைத்துள்ளேன் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்).பல தரப்பட்ட வாசகர்களும் எனது பதிவிற்கு வருகின்றார்கள்.அவர்கள் வெறும் தொழில்நுட்பத்திற்காக மட்டும் வருவதில்லை. என்னிடம் பல புதிய விஷயங்களை எதிர்பார்க்கின்றார்கள்.நண்பர்களுக்குள் போட்டி -பொறாமை வரக்கூடாது .புதியவர்கள் இந்த இடத்தை தாராளமாக பிடித்துக்கொள்ளட்டும்.எனக்கு தெரிந்த விஷயங்களை -தொழில்நுட்பங்களை -தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆவலிலேயே எனது சொந்த செலவில் பதிவிட்டுவருகின்றேன்.போகும் போது என்ன கொண்டுபோகபோகின்றோம் - ஒன்றுமில்லை.....இணைய உலகத்தில் வேலன் என்கின்ற பெயர் அனைவரின் மனதில் இருந்தால் அதுவே எனக்கு போதும்.அதனால் இனி வரும் பதிவுகளில் 90 சதவீதம் தொழில்நுட்பத்துடனும் 10 சதவீதம் இதர தகவல்களுடன் பதிவிடவுள்ளேன்
இந்த பதிவினால் யார்மனதாவது புண்பட்டிருந்தால் தயவு கூர்ந்து மன்னிக்கவும்.எனது இந்த முடிவுக்கு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.எனது பதிவுலக பயணம் தொடர அது உதவும்.
வாழ்க வளமுடன்.வேலன்.