Tuesday, August 9, 2011

வேலன்- புகைப்படங்களை கேலி சித்திரங்களாக மாற்ற

லட்டு மூக்கு.சப்பை மூக்கு.குண்டு கண்,நீண்ட காது என கேலி சித்திரங்களாக கார்டூன் பிரியர்கள் பிரபலாமான தலைவர்கள்-நடிகர்களை விதவிதமான கேலி சித்திரங்களாக -கார்ட்டூன்களாக மாற்றிவிடுவார்கள். பார்க்க வேடிக்கையாக இருக்கும். நாமும் நமக்கு தெரிந்தவர்கள் புகைப்படங்களை இவ்வாறு விதவிதமான கேலி சித்திரங்களாக மாற்றி பார்க்கலாம்.
500 கே.பி் அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ரைட் கிளிக் செய்து படங்களை தேர்வு செய்யுங்கள்.
இதில் படத்தில் நீங்கள் எங்கு கர்சரை வைக்கின்றீர்களோ அங்கு படம் பெரியதாவதை உணர்வீர்கள். மேலே உள்ள சிலைடரை நகர்த்த படம் மேலும் பெரியதாக மாறும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மேலும் சில படங்கள் கீழே-
 பூனைக்கண் பாருங்கள் எவ்வளவு பெரியதாக மாறிவிட்டது்.
நீங்கள் படத்தில் மாற்றங்கள்செய்து முடித்ததும் அதை .bmp .Jpeg பைல்களாக 
சேமித்துக்கொள்ளலாம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

12 comments:

  1. அருமை .

    கேலிச்சித்திரங்கள் வரைவதைப் பற்றி
    பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே .

    ReplyDelete
  2. ஆஹா தேவையான பதிவு..விரைவில் எனது தளத்தில் பல படங்கள் கேலிசித்திரங்களாக தங்களால் மிளிர போகிறது.... நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே

    ReplyDelete
  3. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம கலாட்டாவா இருக்குதே....

    ReplyDelete
  4. Engernthu sir neenga ithellam pudikkireenga!!!! I ve been readin your blog for the past 3 hrs!!!! Superb stuff!!!! Hats Off sir!!!

    ReplyDelete
  5. வேலன் சார்,
    எனக்கு ஒரு சந்தேகம். உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.
    நாம் மற்றவர்கள் மெயிலுக்கு புகைப்படங்கள் அனுப்பினால்..
    அவர்கள் அந்த புகைப்படங்களை view செய்தோ அல்லது download
    செய்தோ தான் பார்க்க முடிகிறது. அப்படி இல்லாமல், மெயிலை
    open செய்ததும் நேரிடையாக பார்ப்பது எப்படி?
    - ரவிதங்கதுரை

    ReplyDelete
  6. M.R said...
    அருமை .

    கேலிச்சித்திரங்கள் வரைவதைப் பற்றி
    பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே ஃஃ

    நன்றி ராஜேஷ் சார்...
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  7. மாய உலகம் said...
    ஆஹா தேவையான பதிவு..விரைவில் எனது தளத்தில் பல படங்கள் கேலிசித்திரங்களாக தங்களால் மிளிர போகிறது.... நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரேஃஃ

    ஏற்கனவே ஸ்லைட்ஷோவில் துள் கிளப்புகின்றீர்கள். இதிலும் பட்டையை கிளப்புங்கள்.
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  8. Chitra said...
    ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம கலாட்டாவா இருக்குதே....
    ஃஃ

    நன்றி சகோதரி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. 'பரிவை' சே.குமார் said...
    ஹா...ஹா...ஹா.


    அருமை.ஃஃ

    நன்றி குமார் சார்..
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. உங்கள் தோழி கிருத்திகா said...
    Engernthu sir neenga ithellam pudikkireenga!!!! I ve been readin your blog for the past 3 hrs!!!! Superb stuff!!!! Hats Off sir!!!
    ஃஃஃ

    நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. tHE bOSS said...
    வேலன் சார்,
    எனக்கு ஒரு சந்தேகம். உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.
    நாம் மற்றவர்கள் மெயிலுக்கு புகைப்படங்கள் அனுப்பினால்..
    அவர்கள் அந்த புகைப்படங்களை view செய்தோ அல்லது download
    செய்தோ தான் பார்க்க முடிகிறது. அப்படி இல்லாமல், மெயிலை
    open செய்ததும் நேரிடையாக பார்ப்பது எப்படி?
    - ரவிதங்கதுரை
    புகைப்படங்களை அட்டாச் செய்யாமல் நேரடியாக டிராப் செய்து தகவல் எழுதும் இடத்தில் விட்டுவிடவும். இப்பேர்து மெயில ்திறக்கும்போதே உங்களுக்கு படம் தெரியும்.
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete