Wednesday, August 10, 2011

வேலன்-டெக்ஸ்ட் பைலை படித்துகாட்ட

புதிய திரைப்படங்கள் ரிலீஸ் அன்றே பார்ப்பதில் தனி இன்பம். அதைப்போலவே புதிய சாப்ட்வேரினை ரிலீஸ் செய்த அன்றே உபயோகித்துப்பார்ப்பதில் தனி சுகமே உள்ளது். இந்த சின்ன சாப்ட்வேர் நேற்று 09.08.2011 அன்று வெளியிட்டார்கள். அதனை இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சிஅடைகின்றேன். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அதன் முகவரிதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். 55 கே.பி. அளவுள்ள இதன் சின்ன சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் ஏற்கனவே உள்ள டெக்ஸ் பைலை தேர்வு செய்யலாம். அல்லது நாமே புதிய டெக்ஸ்ட் பைலை உருவாக்கிடலாம். பின்னர் இதில் உள்ள பிளே பட்டனை அழுத்தினால் அதில் உள்ள டெக்ஸ்ட் ஒலியாக நமக்கு கிடைக்கும். அதனை நாம் வேவ் பைலாகவும் சேமித்துவைத்துக்கொள்ளலாம். நம்மிடம் வேர்ட் பைல் இருந்தாலும் அதனையும் டெக்ஸ்ட் பைலாக மாற்றி படித்துப்பார்க்கலாம்.அதனைப்போலவே படிக்கும் வேகத்தையும் இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவதன் மூலம் அமைத்துக்கொள்ளலாம்.எந்த பைலினையும் நாம் வேவ் பைலாக மாற்றி ஒலி வடிவில் கேட்கலாம்.நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

6 comments:

  1. சகோதரரே.. உடனே செய்து பார்த்தேன் ஆங்கிலம் டைப் செய்தால் நீங்கள் சொன்னது போல் ஒலிக்கிறது... நன்றாக இருக்கிறது... ஆனால் இது தமிழ் ஃபாண்டில் வேலை செய்ய வில்லை என நினைக்கிறேன்..சகோ

    ReplyDelete
  2. மாய உலகம் said...
    சகோதரரே.. உடனே செய்து பார்த்தேன் ஆங்கிலம் டைப் செய்தால் நீங்கள் சொன்னது போல் ஒலிக்கிறது... நன்றாக இருக்கிறது... ஆனால் இது தமிழ் ஃபாண்டில் வேலை செய்ய வில்லை என நினைக்கிறேன்..சகோ
    ஃஃ
    ஆம் நானும் முதலில் தமிழ்தான் ்தட்டச்சு செய்துபார்த்தேன். அதுகண்டுகொள்ளவே இல்லை. ஆனால ஆங்கிலம் நன்றாக வருகின்றது. தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி நண்பரே...
    வாழக் வளமுடன்.
    வேலன.

    ReplyDelete
  3. Chitra said...
    Thank you.ஃஃ

    நன்றி சகோதரி...
    தங்கள் வ்ருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  4. 'பரிவை' சே.குமார் said...
    Good one... Thanks for Sharing.

    நன்றி குமார் சார்...
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete