Friday, August 12, 2011

வேலன்-டைம் டூ ஹரி - விளையாட்டு(Time to Hurry)


குழந்தைகளுக்கு இன்னும் பாடபுத்தகங்கள் வந்துசேரவில்லை. அதுவரையில் விளையாட்டினை தொடரட்டும். இந்த டைம் டூ ஹரி விளையாட்டு சற்று பெரிய விளையாட்டு. 80 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில ஒரு அறையில நிறைய பொருட்கள் இருக்கும். இதில நான்கு பேர் தோன்றுவர். அவர்கள் கேடகும் பொருளை கண்டுபிடித்து தரவேண்டும்.உடனே கண்டுபிடித்து கொடுத்தால் உங்களுக்கு 14 டாலர் கிடைக்கும். நான்கு பேரும் மாற்றி மாற்றி கேட்பார்கள். அவர்கள் கேட்கும் பொருட்களை விரைந்து தேடிஎடுத்துகொடுக்கவேண்டும்.கிடைக்கும் டாலர்களை கொண்டு நாம் விருப்பமான இடங்கள் வாங்கிகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இதற்கு அடுத்த லெவல் Puzzle game இதில் கலைந்துள்ள படத்தினை ஒன்று சேர்க்க வேண்டும்.அதற்கும் டாலர்கள் உண்டு.
 விளையாட்டு சம்பந்தமான பொருட்கள் இருக்கும். அவர்கள் கேட்கும் பொருளை எடுத்து தரவேண்டும். இதன்மூலம் சின்ன சின்ன விளையாட்டு பொருட்களின் பெயர் எளிதில் தெரியவரும்.
 இவர்களுக்கு கண்டுபிடித்து தரும் அதே சமயம் சில பொருட்களின் பினனால் டாலர்கள் மறைந்துஇருக்கும் அதனையும் நாம் சேகரித்துவைத்துக்கொள்ளலாம்.
 கலைந்துள்ள படங்களை ஒன்று சேர்க்கவேண்டும்.
இது சற்று பெரிய விளையாட்டு ஆதலால் இது தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும். பொருட்களை கண்டுபிடித்தல் - பசல் கேம்- மீண்டும் பொரு்ட்களை கண்டுபிடித்தல் - ஒரே மாதிரியான பொருளை கண்டுபிடித்தல் - என்று மாறி மாறி சென்றுகொண்டே இருக்கும்.ஞாபகசக்தி அதிகமாவதுடன் தெரியாத பொருட்களின் பெயர்களையும் - புதுபுது பெயர்களையும் அறிந்துகொள்ளலாம்.
நீங்களும் விளையாடிப்பாருங்கள். குழந்தைகளுக்கும் விளையாட கொடுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

18 comments:

  1. very good and usual game, thanks velan sir

    ReplyDelete
  2. Bala said...
    very good and usual game, thanks velan sir
    ஃஃ

    நன்றி பாலா சார்..
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  3. Chitra said...
    interesting game. :-)
    ஃஃ
    நன்றி சகோதரி..எங்களுக்கு காளிமார்க் கடலைமிட்டாய கிடையாதா?
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  4. அருமையான பயனுள்ளதாக உள்ளது.
    எங்களுக்காகவே கஷ்டப்பட்டு தேடி விதவிதமான விளையாட்டை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி சார்.

    ReplyDelete
  5. துப்பறியும் விளையாட்டு என்று நீங்கள் அறிமுகப்படுத்திய Hide and Secret 4 The Lost World அருமை, இதேபோல் வேறு துப்பறியும் விளையாட்டு இருந்தால் சொல்லுங்கள் சார் நன்றி.

    ReplyDelete
  6. Thomas Ruban said...
    அருமையான பயனுள்ளதாக உள்ளது.
    எங்களுக்காகவே கஷ்டப்பட்டு தேடி விதவிதமான விளையாட்டை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி சார்.
    ஃஃ

    நன்றி தாமஸ்..உங்கள் போன்றோரின் ஆசிதான் என்னை மேலும் மேலும் எழுத துாண்டுகின்றது..நன்றி..
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  7. Thomas Ruban said...
    துப்பறியும் விளையாட்டு என்று நீங்கள் அறிமுகப்படுத்திய Hide and Secret 4 The Lost World அருமை, இதேபோல் வேறு துப்பறியும் விளையாட்டு இருந்தால் சொல்லுங்கள் சார் நன்றி.
    ஃஃ

    சற்று பெரிய 200 எம.பி.கொள்ளளவு கொண்ட பைக் ரேஸ் விளையாட்டு ஒன்று உள்ளது.அதற்கு அடுத்து துப்பறியும் விளையாட்டினை பதிவிடுகின்றேன் நண்பரே..
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  8. //சற்று பெரிய 200 எம.பி.கொள்ளளவு கொண்ட பைக் ரேஸ் விளையாட்டு ஒன்று உள்ளது.அதற்கு அடுத்து துப்பறியும் விளையாட்டினை பதிவிடுகின்றேன்//

    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  9. ஆஹா... ஞாபக சக்தியை அதிகரிக்கும் விளையாட்டு பயனுள்ளதாக இருக்கும்.. நன்றி சகோ.... டாலர் கிடைப்பது விளையாட்டில் மட்டுந்தானா ... ஹா ஹா நிஜத்திலும் கிடைக்குமா...ஹா ஹா ஹா ... நல்லதொரு பயனுள்ள பொழுதுபோக்கு பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  10. அருமையான ,பயனுள்ள பதிவு சார் .குளந்தைகள் கணக்கு போடுவது மாதிரி கேம்ஸ் இருக்கிறதா ?

    ReplyDelete
  11. அன்புள்ள அண்ணா ,
    உண்மையான டாலர் தருவாங்களா ?இல்லாவிட்டால் உங்களை அணுகவா? ஹா ,ஹா , ஆஹா

    அன்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  12. Thomas Ruban said...
    //சற்று பெரிய 200 எம.பி.கொள்ளளவு கொண்ட பைக் ரேஸ் விளையாட்டு ஒன்று உள்ளது.அதற்கு அடுத்து துப்பறியும் விளையாட்டினை பதிவிடுகின்றேன்//

    மிக்க நன்றி சார்.
    ஃஃ

    நன்றி தாமஸ் ரூபன் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. மாய உலகம் said...
    ஆஹா... ஞாபக சக்தியை அதிகரிக்கும் விளையாட்டு பயனுள்ளதாக இருக்கும்.. நன்றி சகோ.... டாலர் கிடைப்பது விளையாட்டில் மட்டுந்தானா ... ஹா ஹா நிஜத்திலும் கிடைக்குமா...ஹா ஹா ஹா ... நல்லதொரு பயனுள்ள பொழுதுபோக்கு பகிர்வுக்கு நன்றி நண்பரே
    //
    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  14. ஸாதிகா said...
    சூப்பர்.
    //

    நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. palane said...
    அருமையான ,பயனுள்ள பதிவு சார் .குளந்தைகள் கணக்கு போடுவது மாதிரி கேம்ஸ் இருக்கிறதா ?
    ஃஃ

    ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் நண்பரே...
    வேறு ஏதாவது இருக்கின்றதா என்று பார்க்கின்றேன்.
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. sakthi said...
    அன்புள்ள அண்ணா ,
    உண்மையான டாலர் தருவாங்களா ?இல்லாவிட்டால் உங்களை அணுகவா? ஹா ,ஹா , ஆஹா

    அன்புடன் ,
    கோவை சக்தி
    ஃஃ

    சக்தி சார்...உண்மையான டாலர்ன்னா அவங்களை கேளுங்கள். முருகன் படம்.பிள்ளையார் படம் போட்ட டாலர் வேண்டுமானால் என்னிடம் உள்ளது.நான் தரட்டுமா சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete