Wednesday, November 30, 2011

வேலன்:-டெக்ஸ்டாப் ஐ-கான்களை மறையவைக்க

படிக்கும் காலங்களில் வகுப்பறை கரும்பலகைகளை மாணவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு துடைப்பார்கள்.அதுபோல நாம் நமது டெக்ஸ்டாப்பினை சுத்தமாக குறிப்பிட்ட நேரம்உபயொகிக்காமல் இருக்கும்போது அவ்வாறு செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நமது டெக்ஸ்டாப்பில் எந்த ஒரு ஐ-கானும் இருக்காது.2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும் அதில் எவ்வளவு நேரத்திற்குபின்னர் உங்களுக்கு டெக்ஸ்டாப்பில் உள்ள ஐ-கான்கள் மறையவேண்டுமோ அந்த நேரத்தை செட்செய்திடவும்.
ஒரு நிமிடத்திலிருந்து 20 நிமிடம் வரை நாம்நேரம் செட்செய்திடலாம்.அந்த நேரம் ஆனதும் உங்களுக்கு கீழ்கண்ட ஸ்லைடில் நேரம் நகர ஆரம்பிக்கும். குறிப்பிடட நேரம் ஆனதும் உங்களுக்கு டெக்ஸ்டாப்பில் உள்ள ஐ-கான்கள் மறைந்துவிடும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Tuesday, November 29, 2011

வேலன்:-சுற்றுலா புகைப்படங்களை ஸ்லைட்ஷோவாக மாற்ற

செல்போனுக்கு முறையாக ரீ-சார்ஜ் செய்தால் தான் அதன்பணிகளை முறையே செய்யும். அதுபோல் நமது உடலுக்கு மனதுக்கு ரீசார்ஜ் செய்தால்தான் வாழ்க்கை இனிமையாக அமையும். அதற்கு வெளியூரோ -வெளிநாடோ வருடத்திற்கு ஒருமுறை சுற்றுலா சென்றுவந்தால் மனம் மகிழ்ச்சிஅடைவதுடன் உடலும் மகிழும்.அவ்வாறான பயணங்களில் நாம் எடுக்கும் புகைப்படங்களை நம் உறவினர்களுக்கு -நண்பர்களுக்கு அனுப்பி வைக்கலாம். அவ்வாறு எடுக்கப்பட்ட சுற்றுலா புகைப்படங்களை ஸ்லைட்ஷோவாக மாற்ற இந்த தளம் நமக்கு உதவுகின்றது. இந்த தளம் காண நீங்கள் இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஸ்டார்ட் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட புகைப்படங்களின் டெம்ப்ளேட் கிடைக்கும். அதில் உங்களுக்கு விருப்பமானதை கிளிக் செய்யவும்.
அடுத்து உங்கள் புகைப்படங்களை தேர்வு செய்யவும். புகைப்படங்கள் பேஸ்புக்கிலோ - உங்கள் கணிணியிலோ - பிகாஸா மற்றும் பிளிக்கரிலோ இருக்கலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இப்போழுது உங்கள் ஸ்லைட் ஷோவிற்கு பெயரினை வையுங்கள்.ஸ்லைட்ஷோவிற்கு விருப்பபட்டால் இசையையும் சேர்ககலாம்..
அனைத்துபணிகளும் முடிந்தவுடன் அதனை நீங்கள் மற்றவர்களுக்கு இமெயில் மூலமாக எளிதில் பகிர்ந்துகொள்ளலாம்.கீழே நான் உருவாக்கிய ஸ்லைட்ஷோவினை பாருங்கள்.




ஸ்லைட்ஷோ உருவாக்கி பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, November 27, 2011

வேலன்:- 700 கோடி பேர்களில் நீங்கள் எத்தனையாவது நபர்?

ஆயிரத்தில் ஒருவன் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.700 கோடி மக்களில் நீங்கள் எத்தனையாவது மனிதர்என அறிந்துகொள்ள ஆசையா? பிரபல BBC NEWS உங்களுக்கான தகவல்களை தருகின்றது. இந்த தளம் காண நீங்கள் 
இங்கு கிளிக் செய்யவும். இங்கு உங்களுக்கு கீழ்கண்ட தளம் திறககும்.அதில் உள்ள தேதி - மாதம் -வருடம் உள்ள இடத்தில் உங்களுடைய பிறந்த தேதியை உள்ளீடு செய்யவும்.. 

உங்களுக்கான எண்ணிக்கை தெரிய வரும். 700 கோடி மக்களில்உங்கள் எண்ணை அறிந்துகொள்ளலாம்.. நான் 300 கோடி அளவில் வருகின்றேன்.

 உங்களுக்கான கிராப் படமும் கீழே கொடுத்துள்ளார்கள்.
 உலகில் உள்ள மக்கள் தொகையும் தினம் பிறப்பவர்களின் எண்ணிக்கையும் - மறைபவர்களின் எண்ணிக்கையும் டிஜிட்டலில் ஓடிக்கொண்டு இருக்கும்.
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு மணி துளிக்கும் 3,113 குழந்தைகள் பிறப்பதும் 1,114 பேர் மறைவதுமாக உள்ளார்கள்.

ஆண் - பெண் விகிதாசாரத்தில் பெண்களின் சதவீதம் அதிகமாக உள்ளது.
நமது பிறந்த நாளின் புள்ளிவிவரங்கள் அறிந்துகொள்ளவே இந்த பதிவு.உங்களுடைய பிறந்த தேதியையும் கொடுத்து 700 கோடி மக்களில் நீங்கள் எத்தனையாவது மனிதர் என்பதை அறிந்துகொள்ளுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.

Tuesday, November 22, 2011

வேலன்:-இமேஜ் ஸ்டுடியோ.

புகைப்படங்களில் மாற்றங்கள் செய்ய - வாட்டர் மார்க் செய்ய - எழுத்துருக்கள் சேர்க்க -பார்மெட் மாற்ற என பல வேலைகளை செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு வரும்விண்டோவில் தேவையான போல்டரை தேர்வு செய்யவும்.
 இதில் வாட்டர் மார்க்காக இதில் எழுத்துக்கள் எங்குவரவேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்யலாம்.கீ ழே உள்ள விண்டோவில பாருங்கள்.
 தேர்வு செய்யும் புகைப்படத்தை தேவைக்கு ஏற்ப வேண்டியவாறு மாற்றிக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
 படங்களை நாம் தம்ப்நேயில் வியுவிலோ -Pane.Gallery.Details எனஎதுவிருப்பமோ அதில் பார்க்கலாம்.கீழே உள்ள விண்டோவில்பாருங்கள்.
இதன் வலதுபுறம் நீங்கள் எந்த பணிசேய்யப்போகின்றீர்களோ அந்த ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளலாம்.
படங்களை பார்மெட் மாற்றும் வசதியும் உள்ளது. பயன்படுத்திப்பர்ருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Monday, November 21, 2011

வேலன்:-இலவச கவுண்டவுன் டைமர் -Free Countdown Timer.

சில நேரங்களில் காத்துக்கொண்டுஇருப்பதிலேயே தனி இன்பம்.நிச்சயமானபின திருமணத்திற்கு நாள் குறித்திருப்பார்கள்.தினம் தினம் காலண்டரில் நாட்களை எண்ணிவருவோம். விடுமுறையில் ஊருக்கு செல்ல இருப்போம். நாட்களை எண்ணிவருவோம்.வெளியூரிலிருந்து தந்தையோ - மகனோ - கணவரோ -வரலாம். அவர்கள் வரும் நாளை எண்ணிகொண்டிருப்போம்.இந்த மாதிரி அனேகசமயங்களில் நமக்கு கவுண்டவுன் காலண்டர் தேவைப்படும்.பிரசவத்திற்கு காத்திருக்கும் தாய்மார்கள் குழந்தை பிறக்கும் நாளை அவலுடன் எதிர்பார்த்துவருவார்கள. இவ்வாறு அனைத்துதேவைகளையும் நிவர்த்திசெய்யும் ஒரே சாப்ட்வேர் Free Countdown Timer தான. 2 எம்.பி.க்கும் குறைவான இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு ஆங்கில புதுவருடத்திற்கு இன்னும் எவ்வளவு நாட்கள்உள்ளது என்கின்ற தகவலுடன் விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் அன்றைய தேதிக்கு ஏதாவது நேரம்  செட் செய்வதானால் செய்துகொள்ளலாம். உதாரணமாக சமையல் செய்யும்போது - தண்ணீர்மோட்டர் போடும்போது என அலாரம் செட்செய்துகொள்ளலாம்.
குறிப்பிட்ட நாளினை தேர்வு செய்ய இதில் உள்ள Count till date and time கிளிக்செய்யவேண்டும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள Date and Time கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான நாளையும் -நேரத்தை நாம் செட்செய்துகொள்ளலாம்.
Sound என்கின்ற விண்டோவின கீழே விதவிதமான இசை தொகுப்புகள் உள்ளது. கால நேரத்திற்கு ஏற்ப இசையை நாம் அலாரமாக செட் செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோ வில் பாருங்கள். 
குறிப்பிட்ட நேரம் வந்ததும் அலாரம நமக்கு தகவலை தெரிவிக்கும்.
வேறு எதற்கெல்லம் இதனை பயன்படுத்தலாம் கீழே கொடுத்துள்ளவற்றை காணுங்கள்.
Here are some ideas for countdown clock:
  • Expert Tea Steeping
  • Appointment Reminder
  • Break Timer
  • Cooking Timer
  • Birthday Countdown Timer
  • Graduation Countdown Timer
  • Pregnancy Countdown Timer
  • Sports Countdown Timer
  • Vacation Countdown Timer
  • Wedding Countdown Timer
  • Christmas Countdown Timer
  • Halloween Countdown Timer
  • New Year Countdown Timer
  • Saint Patrick's Day Countdown Timer
  • Thanksgiving Countdown Timer
  • Valentine's Day Countdown Timer
நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.

வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, November 20, 2011

வேலன்:-வீடியோக்களை சுலபமாக பதிவிறக்கம் செய்ய







நன்றி..!.நன்றி..!!.நன்றி...!!!
தொழில்நுட்ப பதிவுகளை எழுதிவரும் என்னை 14.11.2011 முதல் 21.11.2011 வரை நட்சத்திர பதிவராக என்னை தேர்ந்தேடுத்த தமிழ்மணம் நெட். அவர்களுக்கு எனது சார்பாக நன்றி..தமிழ்மணம் மூலம் அதிகபடியான வாசகர்களும் -புதுபுது பாலோயர்ஸ்களும் கிடைத்துள்ளார்கள்.புதிய வாசகர்களுக்கும் -என்னை தேர்வு செய்த தமிழ்மணம் குழுவினருக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்...


இன்றைய பதிவு:-
வீடியோ பைல்களைபதிவிறக்கம் செய்ய எவ்வளவோ சாப்ட்வேர்கள் இருந்தாலும் மிக சுலபமானதாகவும் -இலவச மென்பொருளாகவும் இந்த வீடியோ டவுண்லோடர் கிடைக்கின்றது.1 எம்.பிக்கும் குறைவான இந்த சாபட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில மேல்புறம் உங்களுக்கு On-Off என சின்ன விண்டோ இருக்கும். அதைகிளிக் செய்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில்எங்கு பதிவிறக்கம் செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களோ அந்த தேவையான இடத்தை செட் செய்துகொள்ளலாம்.
 நீங்கள் பதிவிறக்கம் செய்யும் பைல் எந்த வகையில் பதிவிறக்கம் ஆகவேண்டுமோ அதனையும் நீங்கள் செட் செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோ வில் பாருங்கள்.
நீங்கள் பார்க்கும் வீடி யோவின் இணையதள முகவரியை URL காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்தால் போதுமானது.பதிவிறக்கம் ஆகிவிடும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள.
ஆபாச இணையதள முகவரிகளையும் இதில் பதிவிறக்க முடியாமல் தடைசெய்யலாம் என்பது இதில் கூடுதல் வசதியாகும.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.

Saturday, November 19, 2011

வேலன்:-டிரம்ஸ் சுலபமாக கற்றுகொள்ளலாம் வாங்க

கொஞ்சும்சலங்கை படத்தில் ஒரு வசனம் வரும்-ஏன் நிறுத்திவிட்டாய் ராதா - உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் ஒடோடி வந்த என்னை ஏமாற்றலமா? என ஜெமினிகணேசன் சாவித்திரி அவர்களை கேட்பார். அதைப்போல இந்த சின்ன சாப்ட்வேரில் நீங்கள் இசை பயின்றால் உங்கள் வீட்டில் உள்ளவர்களும் இதே வசனத்தை உங்களிடம் கேட்பார்கள்.80 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் கீபோர்டில் எந்த எந்த கீ எந்த டிரம்ஸ் இசைக்கு வரும் என உங்களுக்கு டிஸ்பிளே காண்பிக்கும்.. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மேல்புறம் எண்களுக்கான கீ களும உங்களுக்கு கிடைக்கும்.
 வலது புறம் உங்களுக்கு தேவையான செட்டிங்ஸ்கிடைக்கும். உங்கள் தேவைக்கு ஏற்ப இதனை தேர்வு செய்துகொள்ளலாம்.
 அதைப்போலவே இடதுபுறம் டிரம்ஸ் பின்புற நிறம் - மேட் டிசைன் என தேர்வு செய்யலாம்.
கூடுதல் இணைப்பாக Xilophone உள்ளது. தேவையானால் அதனையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
எனது மகனுக்கு இதனை இன்ஸ்டால் செய்து விளையாட கொடுத்தேன்.குஷியாக விளையாடிக்கொண்டு இருக்கின்றான்.புதுபுது இசையை வாசித்துகாண்பிக்கின்றான்.நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
எனது முந்தைய பியானா - டிரம்ஸ் சம்பந்தப்பட்ட பதிவுகள் கீழே:-
கீபோர்டடில் பியானோ
டிரம்ஸ் அடிக்கலாம் வாங்க

Friday, November 18, 2011

வேலன்:-புகைப்படங்களை பிடிஎப் பைலாக எளிதில் மாற்ற

சில நேரங்களில் நம்மிடம் உள்ள புகைப்படங்களை PDF பைல்களாக மாற்றும் தேவை ஏற்படலாம். அந்த சமயங்களில் நம்மிடம் உள்ள புகைப்படங்களை எளிதாக பிடிஎப் பைல்களாக மாற்றி மற்றவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். 236 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள் இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 இதில் உள்ள Add Files உங்கள் புகைப்படங்களை தேர்வு செய்யவும். அடுத்து மேலே உள்ள Unit Measure --ல் உங்கள் புகைப்படத்திற்கான அலகை தேர்வு செய்யவும்.இதனை நீங்கள் எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தினை Output Path -ல் குறிப்பிடவும்.புகைப்படங்கள் உங்களுக்கு தனிதனி பிடிஎப் பைல்களாக வேண்டுமா-அல்லது ஓரே பிடிஎப் பைலாக வேண்டுமா என தேர்வு செய்யுங்கள்.
மார்ஜின் பார்டர் முதல்கொண்டு பேப்பர் அளவு வரை நாம் அமைத்துக்கொள்ளலாம்.மேலும் பிடிஎப் பைலில் நமது புகைப்படம் நடுவில் வரவேலன்டுமா அல்லது ஒரத்தில் வரவேண்டுமா என்பதனையும் தேர்வு செய்து இறுதியில் Save PDF கிளிக் செய்யவும. நொடியில் உங்கள் புகைப்படம் ரெடி.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.கீழே நான் இணைத்துள்ள பிடிஎப் பைலை பாருங்கள்.
PDF Output


வாழ்க வளமுடன்
வேலன்.

Thursday, November 17, 2011

வேலன்:-விதவிதமான போட்டோ ஆல்பம் நாமே உருவாக்க.

புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க போட்டோஷாப்பில் என்னற்ற PSD டிசைன் பைல்கள் உள்ளன.ஆனால் நமது விருப்பதற்கேற்ப - திருமணம்-பிறந்தநாள்-காலண்டர்-அன்னையர் தினம் - குழந்தைகள் தினம் - காதலர்தினம் என விருப்பத்திற்கேற்ப ஆலபம் தயாரிக்கலாம். 15 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உங்களுக்கு Scropbook.Greeting Card.Calendor.என எது நமக்கு தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளளலாம்.
Scrapbook ல் உப தலைப்புகளாகHoliday.Birthday.Family.baby.Kids.Wedding.விண்டோக்கள் இருக்கும். நமக்கு எது தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளலாம்.
தேர்வு செய்யப்பட்ட விண்டோவில் நமக்கு அதிக அளவு டிசைன்கள் இருக்கும். நமது டேஸ்ட்டுக்கு ஏற்றவாறு டிசைனை தேர்வு செய்து அதனை டவுண்லோடு  செய்துகொள்ளலாம்.
டிசைனை தேர்வு செய்தபின்னர் நாம் நமது விருப்பபடி நாம் புகைப்படங்களை தேர்வு செய்துகொள்ளலாம்.புகைப்படங்களை Autofill முறையிலும் தேர்வு செய்து கொள்ளலாம்.ஓவ்வொரு புத்தகத்திலும் ஐந்து டிசைன்கள் இருக்கும். தேவைப்பட்டால் நாம் டிசைன்களை அதிகப்படியாக சேர்த்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
ஒவ்வொரு புகைப்படத்தையும் நாம் வேண்டிய டிசைனுக்குள் புகைப்படம் வருவதுபோல் செட் செய்துகொள்ளலாம் .கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அவர்கள் கொடுத்துள்ள டிசைன்கள் நமக்கு போதவில்லையென்றால் அதிகப்படியான டிசைன்களை நாம் இணைத்துக்கொள்ளலாம்.அழஅழகான பூங்கொத்துக்களை கொடுத்துள்ளார்கள். தேவையானதை தேவையான இடத்தில் இணைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்..
அதைப்போலவே ஒவ்வொரு புகைப்படத்திற்கும் நாம் கார்டூன் புகைப்படங்களை கொண்டுவரலாம்.கீழேஉள்ள விண்டோவில் பாருங்கள்.
சிம்பிளான -அழகான டிசைன் கீழே:-
நாம் உருவாக்கும் டிசைனை தனியோ சேமித்துவைத்துக்கொள்ளலாம்.பிரிண்ட் எடுக்கலாம்.மெயில் அனுப்பபலாம்.நாம் நம்மிடம் உள்ள புகைப்படங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தி ஆல்பமாக சேமித்துவைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பர்ருங்கள.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Wednesday, November 16, 2011

வேலன்:-எல்லா அலகுகளையும் எளிதில் மாற்ற -Convertall

அந்தகால படிப்பில் 5 ஆம் வகுப்பு வரை வாய்ப்பாடு சொல்லிதருவார்கள்.. ஒன்றிலிருந்து 20 வரை எழுதிகாண்பிக்கவேண்டும். காலங்கள் மாறும்சமயம் வாய்பாடும் மறைந்துவருகின்றது..வேலையை சுலபமாக்க இந்த Convertall என்கின்ற இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது. 6 எம்.பி.கெர்ளளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் A முதல் Z வரையில் நமக்கு யுனிட்டுகள் உள்ளது. நமக்கு தேவையான அலகினை தேர்வு செய்துகொள்ளலாம்.இதில் உள்ள யுனிட் பைன்டர் என்பதனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான அலகினை தேர்வு செய்துகொள்ளலாம்.அதைப்போலவே இதில் Preferences கொடுத்துள்ளார்கள்.. அதனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான டெசிமல் எண்ணிக்கையையும் கடைசியாக பயன்படுததிய அலகின் எண்ணிக்கை அளவையும் நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.அதைப்போலவே இதில் உள்ள அலகின் நிறத்தையும் - எழுத்துக்களின் நிறத்தையும் நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.; படித்துகொண்டு இருப்பவர்களுக்கும் - மாணவர்களுக்கும் - தொழில் முனைவருக்கும் இந்த சின்ன சாப்ட்வேர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.