Wednesday, April 11, 2012

வேலன்:-குழந்தைகள் குதுகலமாக வரைந்துமகிழ

விடுமுறை விட ஆரம்பித்துவிட்டார்கள். குட்டி குழந்தைகள் இனி வீட்டில் சும்மா இருக்கமாட்டார்கள்.விதவிதமாக சுவரில் படங்களை வரைந்துவைப்பார்கள்.அவர்கள் சுவரில் விதவிதமாக படங்களை வரையாமல் கணிணியில் வரைய இந்த சின்ன சாப்ட்வேர் உதவும்.20 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஓப்பன் புக் என்னும் டேபை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள படத்தை தேர்வு செய்து அருகில் உள்ள டிக் மார்க்கை கிளிக் செய்யுங்கள்.
புகைப்படம் ரெடி.இப்போது ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நிறத்தை நிரப்பவும். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
நீங்கள் வண்ணங்களை நிரப்ப உங்களுக்கு பக்கெட் டூல் .கிரையான் டூல்கள் உள்ளது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் Songs என்னும் டேபை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள 6 பாடல்களில் எதை கிளிக் செய்கின்றோமோ அதற்கேற்ப பாடல் நமது கர்சர் மூவ்க்கு ஏற்ப ஒலிக்க ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு பாடலுடன் படம் வரைவது மகிழ்ச்சியை அளிக்கும்.
இதில் ஸ்டாம்ப் டூலும் உள்ளது. விதவிதமான ஸ்டாம்ப் கொண்டுவருவதுடன் விதவிதமான அளவிலும் கொண்டுவரலாம்.
விலங்குகள் என எடுத்துக்கொண்டால் விதவிதமான விலங்குகள் உள்ளது.ஒவ்வொன்றையும் கலர்கொடுத்து மகிழலாம்..அதைப்போல ஏஞ்சல் என எடுத்துக்கொண்டால் விதவிதமான தேவதைகள் படங்கள் கிடைக்கும். அனைத்தையும் கலர்கொடுத்து மகிழலாம். சேமிக்கலாம்.பிரிண்ட் எடுத்துகொள்ளலாம்.அப்புறம் என்ன - குழந்தைகளுக்கு டவுண்லோடு செய்து விளையாட கொடுங்கள.நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.;
வாழ்க வளமுடன்
வேலன்.

9 comments:

  1. பயனுள்ள மென்பொருள் \\பகிர்வு நன்றி வேலன் சார்

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு. நன்றி சார்!

    ReplyDelete
  3. நல்ல மென்பொருள்.

    நன்றி சார்

    ReplyDelete
  4. wesmob said...
    பயனுள்ள மென்பொருள் \\பகிர்வு நன்றி வேலன் சார்ஃஃ

    நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  5. atchaya said...
    பயனுள்ள பதிவு. நன்றி சார்!ஃஃ

    நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  6. மச்சவல்லவன் said...
    நல்ல மென்பொருள்.நன்றி சார்ஃஃ

    நன்றி மச்சவல்லவன் சார்..
    தஙகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  7. ஜெ.ஜெயக்குமார் said...
    very nice siஃஃ

    நன்றி ஜெயக்குமார் சார்.
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  8. பயனுள்ள பதிவு அண்ணா
    கோவை சக்தி

    ReplyDelete