Tuesday, July 31, 2012

வேலன்:-வீடியோ-ஆடியோ பார்மெட் எளிதில் மாற்ற


வீடியோ பைல்களாகட்டும் ஆடியோ பைல்களாகட்டும் நாம் விரும்பும் பார்மெட்டில் எளிதாக மாற்றி அமைக்க இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு உதவு கின்றது. 12 எம்.பி. கொள்ளளவு கெர்ண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 

இதில் நீங்கள் ஆடியோ பைலை மாற்ற விரும்புகின்றீர்களா அல்லது வீடியோ பைல்களை மாற்ற விரும்புகின்றீர்களா என முடிவு செய்து அதற்குண்டான ஆப்ஷனை டார்கெட் பார்மெட்டுக்கு மேல் உள்ளதை தேர்வு செய்யுங்கள். பின்னர் இதில் உள்ள +Add பட்டனை கிளிக் செய்யுங்கள்.தேவையான பைலை தேர்வு செய்யுங்கள்.வீடியோ பைல்களுக்கான பார்மெட்டுக்கள் கீழே உள்ளதை கவனியுங்கள். தேவையானதை தேர்வு செய்யுங்கள்.
எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தினை தேர்வு செய்யுங்கள். இறுதியாக கன்வர்ட் கிளிக் செய்யுங்கள். சில நிமிடங்களில் உங்களுடைய பைல் வேண்டிய பார்மெட்டுக்கு மாறியிருப்பதை பாருங்க்ள் இவ்வாறு பைல்களை விரும்பிய பார்மெட்டுக்கு மாற்றி பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

இதுவரையில் இந்தியாவில் பதவி வகித்த ஜனாதிபதிகள் நமக்கு தெரியும். ஆனால் அவர்கள் எந்த எந்த தேதிகளில் பதவி வகுத்தார்கள் என தெரியாது. எனது மகனின் பள்ளிக்கு கொடுப்பதற்காக  இந்த லிஸ்ட் தயாரித்தேன்;;. அதை அப்படியே நமக்காக பதிவிடுகின்றேன். தேவைப்படுபவர்கள் இதனை பதிவிறக்கி பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 
வாழ்க வளமுடன்.
வேலன்.

Friday, July 27, 2012

வேலன்:-ஈஸி இமேஜ் எடிட்டர்.

புகைப்படங்களை வேண்டியவாறு மாற்ற என்னற்ற சாப்ட்வேர்கள் இருந்தாலும் மிக சிறிய அளவில் சிறப்பான பணியினை இந்த ஈஸி இமேஜ் எடிட்டர் சாப்ட்வேர் செய்கின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள லோடு இமேஜில் உங்களிடம் உள்ள புகைப்பட பைல்களையோ போல்டர்களையோ தேர்வு செய்யுங்கள்.
இதில் editing,more,saving என மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் edit கிளிக் செய்ய உங்களுக்கு உங்களுடைய புகைப்படத்தினை அளவுகளை மாற்றவோ - ரோடேட் செய்யவோ முடியும். மேலும் நீங்கள் விரும்பிய வாட்டர் மார்க்கையும் இதில் இணைக்க முடியும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அதனைப்போலவே இதில் உள்ள More ஆப்ஷனை கிளிக் செய்ய புகைப்படங்களின் வரிசைகளை மாற்றுவதுடன் இதில் உள்ள தேதிகளையும் மாற்றமுடியும். மேலும் இதில் உள்ள Save ஆப்ஷனை கிளிக் செய்ய புகைப்படங்களின் பார்மெட்டினை மாற்ற முடியும். புகைப்படத்திற்கு பெயர்மாற்றம் செய்வது என பல பணிகளை இதில் செய்யலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

நீங்கள் தேர்வு செய்யும் புகைப்டங்களின் ப்ரிவியு இதன் அருகிலேயே நமக்கு தெரிவது இந்த சாப்ட்வேரின் கூடுதல் சிறப்பாகும்.மொத்தமாக பைல் பார்மெட் மாற்றுபவர்களுக்கும்-புகைப்படங்களின் அளவுகளை மொத்தமாக குறைப்பதற்கும் இந்த சாப்ட்வேர் பெரிதும் உதவும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Tuesday, July 24, 2012

வேலன்:-ஆங்கிலம்-உருது அகராதி.

நமது பதிவிற்கு இஸ்லாமிய நண்பர்கள் அதிகம். அவர்கள் பயன்படுத்த ஆங்கில வார்த்தைக்கு ஏற்ப உருது வார்த்தைகளை கண்டுபிடிக்க இந்த அகராதி உதவுகின்றது. 50 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஆங்கில எழுத்துக்கள் 26 ம் கொடுத்துள்ளார்கள்.வார்தைகளை தேர்வு செய்தும் உருது வார்ததையை கண்டுபிடிக்கலாம். அல்லது இதில் உள்ள சர்ச் பாக்ஸில் ஆங்கில வார்த்தையை தட்டச்சு செய்து அதற்கான உருது வார்ததையை கண்டுபிடிக்கலாம்.
நான் Home என்கின்ற வார்த்தையை தட்டச்சு செய்துள்ளேன்அதற்கான உருது வார்த்தை வந்துள்ளது. நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, July 22, 2012

வேலன்:-ஆறுவிதமான கணித சாப்ட்வேர்கள்.

கணிதத்தை பற்றி இணையத்தில் தேடிகொண்டிருக்கையில் இந்த வலைதளம் கிடைத்தது. கணிதத்தில் பயன்படுத்தப்படும் ஆறுவிதமான கணக்குகளை இந்த சாப்ட்வேர்கள் மூலம் எளிதில் அறிந்துகொள்ளலாம். இதனை பதிவிறக்கம செய்ய இங்கு கிளிக் செய்யவும்.முதலில் ஸ்கேயர் ரூட் பற்றி பார்க்கலாம். இதில் உள்ள என்டர் நம்பர் என்பதில் நமக்கு தேவையான எண்ணை தட்டச்சு செய்யவும். அநத எண்ணுடைய வர்க்க மூலம்;,வர்க்கம்,கியூப்.கியூப் ரூட் என எல்லாம் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.நான் 0.016 எண்ணை தட்டச்சு செய்துள்ளேன்.

Square (Root), Cube (Root) Calculator
Calculate Square and Square Root, Cube and Cube Root of any number easily.


அதனைப்போலவே 7 என்கின்ற எண்ணையும் தட்டச்சு செய்துள்ளேன்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அடுத்து டிவைசபிலிட்டி கால்குலேட்டர். ஒரு எண்ணை வகுக்க முடியுமா ? மீதி எவ்வளவு வரும் என எளிதில் கண்டுபிடிக்கலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
Divisibility Calculator
Calculate divisible of numbers and learn Divisibility Rules.







இதனைப்போலவே nth root calculator -ம் அறிந்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
  
nth Root Calculator
Calculate nth Root of any number easily.

அதப்போலவே Prime Factor Calculator அறிந்துகொள்ளலாம். 
Prime Factor Calculator
Calculate prime factors of any numbers.

 பகு எண்கள் -பகா-எண்களையும் அறிந்துகொள்ளலாம்.
Prime, Non-Prime Numbers
Calculate Prime and Non-Prime numbers.



 ஸ்டாப் வாட்ச்சும் இதில் உள்ளது. 
MBA Stopwatch
Stopwatch with split-seconds, seconds, minutes and hours.

மேலும் விவரம் அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.

பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, July 15, 2012

வேலன்:-டாக்டர் கையேடு.

எந்த ஒரு விஷயத்தையும் நாம் ஒரளவு அறிந்து கொள்வதுபோல் நமக்கு வரும் நோய்களையும் ஒரளவு அறிந்துகொண்டால் அதற்குஏற்ப நாம் வைத்தியம் செய்துகொள்ளலாம்.இநத வீட்டுடாக்டர் கையேடு நமக்கு பெரிதும் உதவுகின்றது. ஒவ்வொருவரின் வீட்டிலும் அவசியம் இருக்கவேண்டிய அவசியமான புத்தகம் இது..5 எம.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து ஓப்பன்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட புத்தகம் ஓப்பன் ஆகும்.
இதில் இந்த புத்தகத்தை எப்படி உபயோகிப்பதை என்பதனை விளக்கமாக சொல்லிஉள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
சாதாரணமாக நாம் ஜீரம் என்றால் அதன் அறிகுறிகள் என்ன என்ன? அதற்கு நாம் செய்யவேண்டிய முதலுதவி என்ன? மருத்துவர் எந்த மாதிரியான மருந்துகள்கொடுப்பார்கள் என விளக்கமாக கொடுத்துள்ளார்கள்.
ஆண்களுக்கு வரும் பிரச்சனைகள்.பெண்களுக்கு வரும் பிரச்சனைகள்,குழந்தைகளுக்கு வரும் பிரச்சனைகள்.பொதுவாக வரும் கண்.காது,மூக்கு.வயிறு என உடல்சார்நத் பிரச்சனைகளுக்கும் அதில் வரும் நோய்களைபற்றியும் விரிவாக பதிவிட்டுளார்கள்..பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்கவளமுடன்.
வேலன்.

Wednesday, July 11, 2012

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை விரைந்து பயன்படுத்த


இணையத்தில் -டெக்ஸ்டாப்பில் உள்ளதை நகலெடுக்க நாம் ஸகிரீன்பிரிண்ட் கீ யை உபயோகிப்போம். அதனை பின்னர் பெயிண்ட்டில் காப்பி செய்து பின்னர் வேண்டிய அளவிற்கு போட்டோஷாப்பிலோ -அலலது பெயிண்டிலோ ஆல்டர் செய்வோம். 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இநத சின்ன சாப்ட்வேர் நமக்கு பெரும்பாலான நேரத்தை சேமிக்கின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் https://getgreenshot.org/செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுடைய டாக்ஸ்பாரில இதனுடைய ஐ கான் வந்து அமர்ந்துகொள்ளும். இதனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதிலுள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் general - capture -output -destination -printer-plugins-expert  என 7 விதமான செட்டிங்ஸ் டேப்புகள் இருக்கும்.நமக்கு நாம் எடுக்கும் புகைப்படம் எந்த பைல் பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டினை நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.நேரடியாக பிரிண்ட் எடுக்கும வசதியும் இதில் உள்ளது.
நாம் பகீ போர்டில் உள்ள பிரிண்ட் ஸ்கிரீன் கிளிக் செய்திட நமக்கு பச்சைநிற கட்டம் வரும் கர்சர் மூலம் படத்தினை நாம் தேர்வு செய்திட்ட பின் நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதிலிருந்தும் நாம் தேவையான வசதியினை பெறலாம்.
இதில் உள்ள Open in image editor கிளிக் செய்திட நமக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்.இதில் வேண்டிய மாற்றங்ளையும் டெக்ஸ்டையும் நாம் எளிதில் சேர்க்கலாம்.
இதில் உள்ள effect கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் புகைப்படத்திற்கான பார்டெர் -ஷோடோ - டிசைன் எட்ஜ் மற்றும் கிரேஸ்கேல் இன்வர்ட் என எந்த எபெக்ட் வேண்டுமானாலும் கொண்டுவரலாம்.
டெக்ஸ்டாப்பிலிருந்தோ இணையத்திலிருந்தோ புகைப்படம் எடுத்து போடும் பிளாக் நண்பர்கள் இந்த சாப்ட்வேர் மூலம் தங்கள் பணியினை விரைந்து முடிக்கலாம். பயன்படுத்திப்பர்ருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, July 8, 2012

வேலன்:-கிரேட் போட்டோ

அனைத்துவிதமான போட்டோஷாப் பணிகளையும் குறைந்த அளவு கொளளளவில் திறம்பட இந்த சாப்ட்வேர் செய்கின்றது. 96 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் https://www.cyberlink.com/blog/photo-editing-best-software/327/best-free-photo-editors-windows செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.Open File -Open Folder என இரண்டு ஆப்ஷன்கள் தேர்வாகும் நம்மிடம் உள்ள புகைப்படத்தை இதன்மூலம் தேர்வு செய்யவும்.
 இதில் நமது புகைப்படத்தின் அனைத்துவிவரங்களும் தெரியவரும். அடுத்துள்ள Edit photo கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Image Enhancement -Higlight Fx.Basic Adjustment.Crop என நான்குவிதமான ஆப்ஷன்கள் கிடைக்கும். தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
நான் Crop தேர்வு செய்துள்ளேன். இதில் வேண்டிய அளவு நமக்கு பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் தேவையானதை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 மேலும் இதில் உள்ள எபெக்ட் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் போட்டோஷாப்பில் உள்ள அனைத்து எபெக்ட்டுக்களும் நமக்கு கிடைக்கும். ப்ரேம் எபெக்ட்டில் நான் பிலிம் ரோல் எபெக்ட் கொண்டுவந்துள்ளேன். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
 இதில் கலர் ப்ளாஷ் என்று ஒரு ஆப்ஷன் கொடுத்துள்ளார்கள். இதனை தேர்வு செய்தவுடன் நமக்கு நமது புகைப்படம் கருப்பு வெள்ளை படமாக மாறிவிடுகின்றது. பின்னர் அதில் நமக்கு எந்த இடம் மட்டும் கலரில் வேண்டுமோ அந்த இடத்தை மட்டும் பிரஷ் கொண்டு தேய்க்க அந்த இடம் மட்டும் கலரில் மாறிவிடும். 
 இறுதியாக காலேஜ் என்று ஒரு ஆப்ஷன் உள்ளது. இதில விதவிதமான ப்ரேம்கள் உள்ளது. இதில் தேவையான ப்ரேமை தேர்வு செய்து பின்னர் புகைப்படங்களை நாம் தேர்வு செய்யவேண்டும். புகைப்படங்களை அட்ஜஸ்ட் செய்யும் வசதியும் இதில் உள்ளது. நான் தேரவு செய்துள்ள படங்களை பாருங்கள்.

நாம் புகைப்படங்கள் உள்ள போல்டர்களை தேர்வு செய்தவுடன் நமக்கு நமது புகைப்படங்கள் தம்ப்நெயில் வியுவில் கீழே வரிசையாக வந்துவிடும். தேவையான படத்தினை தேர்வு செய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
 வேலன்.

Friday, July 6, 2012

வேலன்:-விவசாய பண்ணையில் பயிர்செய்யலாம் வாங்க -விளையாட்டு

ஒயாத சத்தம்.காற்று கூட நுழைய முடியாத வீடுகள் - இயந்திரதனமான வாழ்க்கை - டென்ஷன் மனது -இவைகளை தவிர்தது சுற்றிலும் விதவிதமான தோட்டங்கள் - எப்போழுதும் ஜில்லென்று காற்றுவீசும் காற்றோட்டமான வீடு..நகர வாழ்க்கையை தவிர்த்து இயற்கையாக வாழலாம் வாருங்கள்.இந்த பண்ணை வீட்டை உங்களுக்கு சொந்தமாக்கி கொள்ள .இங்கு கிளிக் செய்யவும்.






ஒருதோட்டத்தில் நீங்கள் என்ன என்ன வேலைகள் செய்வீர்களோ அந்த வேலைகள் அனைத்தும் இந்த தோட்டத்தில் நீங்கள்செய்து மகிழலாம்.உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றவரெல்லாம் தொழுதுண்டு பின்செல்லுவர்-என்ற குறளுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு விவசாயத்தை பற்றி சொல்லிகொடுக்கலாம்.எப்போழுதும் துப்பாக்கியில் சுடும் விளையாட்டு - கார் ரேஸ் விளையாட்டு-கிரிக்கெட் விளையாட்டு என விளையாடுவதை தவிர்த்து இதுபோல விளையாட்டுக்களை விளையாட சொல்வது மூலம் விவசாயத்தின் அருமைகளை அவர்களுக்கு உணர்த்தலாம். விளையாடிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்

Monday, July 2, 2012

வேலன்:-மேஜிக் காலண்டர்.

கடலில் முத்து எடுப்பவர்களுக்கு சில சமயம் விலை மதிப்பில்லா அரிய முத்து கிடைக்கும். அதுபோல் சாப்ட்வேர்களில் குறைந்த அளவில் நிறைய வசதிகளை கொண்ட இந்த சாப்ட்வேரினை சொல்லலாம். 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
Maths Utilities - சயிண்டிபிக் கால்குலேட்டர் முதல்கொண்டு  கணிதத்தில் வரும் அனைத்துவிதமான கால்குலேட்டர்களும் இதில் உள்ளது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மாணவர்களுக்கு பயன்படும் Geometry Calculator ல் பக்க அளவுகளை கொடுத்து அதன் ஏரியா -ஆங்கில் (கோணம்) -பரப்பளவு ஆகியவற்றை எளிதில் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
Magic Squares என்கின்ற காலத்தில் நீங்கள் 2 க்கு மேற்பட்ட எண்ணிக்கையை தட்டச்சு செய்யும் போது அதே எண்ணிக்கை கொண்ட காலம் மற்றும் ரோ அடங்கிய எண்கள் கிடைக்கும். அதன் கூட்டுத்தொகையை மேலிருந்து கீழாகவோ -வலமிருந்து இடமாகவோ -குறுக்கு வாட்டத்திலோ என எப்படி நீங்கள் கூட்டினாலும் அதில் கொடுக்கப்பட்டுள்ள தொகை உங்களுக்கு கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

Other Utilities என ஒரு டேபினை கொடுத்துள்ளார்கள். அதில் Sun and Moon Data -இதன் மூலம் அன்றைய சூரிய உதயம் -அஸ்தமனம் -நிலவின் நிலைகளை அறிந்தகொள்ளலாம். Average Speed.இதன் மூலம் ஓரு குறிப்பிட்ட இடத்திற்கு நீங்கள் எவ்வளவு வேகத்தில் சென்றால் எவ்வளவு நேரத்தில் அங்கு சென்று அடையலாம் என் எளிதில் கணக்கிடலாம்.Fuel Consumption -பெட்ரோல் விலை உயரும் இந்த காலத்தில் நீங்கள் எவ்வளவு பெட்ரோல் போட்டீர்கள் எவவளவு கிலோ மீட்டர் சென்றீர்கள்-உங்கள் வண்டியின் பெட்ரோல் கன்சப்ஷன் எவ்வளவு என எளிதில் அறிந்துகொள்ளலாம். Global Distances -நீங்கள் புதுமண தம்பதியராகவோ வேலைகாரணமாக வெளியூரில் வசிப்பவராகவோ இருக்கலாம்.உங்கள் பிரியமானவர்களுக்கும் உங்களுக்கும் இடைய உள்ள வான்வெளி தூரத்தை எளிதில் அறிந்துகெகாள்ளலாம். Travelling Salesman Problem - விற்பனை பிரதிநிதியின் ப்ராப்ளம் அறிந்துகொள்ளலாம்.Currency Converter - உங்களிடம் உள்ள கரண்சியின் மதிப்பை எளிதில் அறிந்துகொள்ளலாம்.Financial Calculator -பெருளாதாரத்தை கால்குலேட் செய்துகொள்ளலாம்.Paper Weight Converter - Unit Converter -அலகுகளை எளிதில் கன்வர்ட் செய்து கொள்ளலாம்.Bac Calculator -Biothem Calculator -BMI calculator -உங்கள் உயரம் -எடை கொண்டு நீங்கள் சராசரி உயராமானவரா -உங்கள் எடை சரியானதா என அறிந்துகொள்ளலாம்.Ovealtion Calculator -மகளிர் சம்பந்தமான கால்குலெட்டர்..Pregnancy Calculator -கருவுற்ற தேதியிலிருந்து குழந்தை பிறந்ககும் தேதியினை உத்தேசமாக அறிந்துகொள்ளலாம்.புதுமண தம்பதியினருக்கு அவசியமான ஒன்றாகும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 Sun and Moon Data -இதன் மூலம் அன்றைய சூரிய உதயம் -அஸ்தமனம் -நிலவின் நிலைகளை அறிந்தகொள்ளலாம்
Pregnancy Calculator -கருவுற்ற தேதியிலிருந்து குழந்தை பிறந்ககும் தேதியினை உத்தேசமாக அறிந்துகொள்ளலாம்.புதுமண தம்பதியினருக்கு அவசியமான ஒன்றாகும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
படிக்கும் மாணவர்கள் மற்றும் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும் மிகவும் பயன்தரும் காலண்டர் இது..பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, July 1, 2012

வேலன்:-மின்சார சேமிப்பிற்கான வழிமுறைகள்.

மின்கட்டண உயர்வையும் அதற்கான அட்டவணையையும் வெளியிட்டதில் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து பயனடைந்தனர். அதன் தொடர்ச்சியாக மின்சாரத்தை  எந்த எந்த வழிகளில் நாம் சேமிக்கலாம் என்று அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளை இங்கு பதிவிடுகின்றேன்.
வீடுகளுக்கான மின்சேமிப்பு வழிமுறைகள்
தொழிற்சாலைகளுக்கான மின் சேமிப்பு வழிகள் விவசாயிகளுக்கான மின்சேமிப்பு வழிமுறைகள்.


மேற்சொன்ன வழிமுறைகளை பயன்படுத்தி மின்கட்டணத்தை குறைக்க பாருங்கள்.நீங்கள் சேமிக்கும் 1 யூனிட் மின்சாரம் ஆனது 2 யூனிட் தயாரிக்கும் மின்சாரத்திற்கு சமமானது.


நன்றி:- தமிழ்நாடு மின்சார வாரியம். 


வாழ்க வளமுடன்
வேலன்.