Friday, July 27, 2012

வேலன்:-ஈஸி இமேஜ் எடிட்டர்.

புகைப்படங்களை வேண்டியவாறு மாற்ற என்னற்ற சாப்ட்வேர்கள் இருந்தாலும் மிக சிறிய அளவில் சிறப்பான பணியினை இந்த ஈஸி இமேஜ் எடிட்டர் சாப்ட்வேர் செய்கின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள லோடு இமேஜில் உங்களிடம் உள்ள புகைப்பட பைல்களையோ போல்டர்களையோ தேர்வு செய்யுங்கள்.
இதில் editing,more,saving என மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் edit கிளிக் செய்ய உங்களுக்கு உங்களுடைய புகைப்படத்தினை அளவுகளை மாற்றவோ - ரோடேட் செய்யவோ முடியும். மேலும் நீங்கள் விரும்பிய வாட்டர் மார்க்கையும் இதில் இணைக்க முடியும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அதனைப்போலவே இதில் உள்ள More ஆப்ஷனை கிளிக் செய்ய புகைப்படங்களின் வரிசைகளை மாற்றுவதுடன் இதில் உள்ள தேதிகளையும் மாற்றமுடியும். மேலும் இதில் உள்ள Save ஆப்ஷனை கிளிக் செய்ய புகைப்படங்களின் பார்மெட்டினை மாற்ற முடியும். புகைப்படத்திற்கு பெயர்மாற்றம் செய்வது என பல பணிகளை இதில் செய்யலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

நீங்கள் தேர்வு செய்யும் புகைப்டங்களின் ப்ரிவியு இதன் அருகிலேயே நமக்கு தெரிவது இந்த சாப்ட்வேரின் கூடுதல் சிறப்பாகும்.மொத்தமாக பைல் பார்மெட் மாற்றுபவர்களுக்கும்-புகைப்படங்களின் அளவுகளை மொத்தமாக குறைப்பதற்கும் இந்த சாப்ட்வேர் பெரிதும் உதவும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

8 comments:

  1. பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா!

    ReplyDelete
  2. நல்லா இருக்கு அண்ணா நன்றி

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்


    நன்றி,
    http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  4. வரலாற்று சுவடுகள் said...
    பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா!//

    நன்றி நண்பரே...தங்கள் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  5. sakthi said...
    நல்லா இருக்கு அண்ணா நன்றி

    நன்றி சக்தி சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  6. திண்டுக்கல் தனபாலன் said...
    பகிர்வுக்கு நன்றி.ஃஃ

    நன்றி தனபாலன் சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  7. Easy (EZ) Editorial Calendar said...
    பயனுள்ள தகவல்


    நன்றி,
    http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    தகவலுக்கு நன்றி நண்பரே..பயன்படுத்திக்கொள்கின்றேன்.

    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete