Monday, September 30, 2013

வேலன்:-உங்கள் குழந்தை முகஜாடை அறிய.

திருமணம் முடிந்ததும் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது தமக்கான வாரிசை தான் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி...யார் ஜாடையி்ல் குழந்தை இருக்கும என ஆவலாக இருக்கும். இந்த கவலையை நீக்க இந்த சின்ன் சாப்ட்வேர் பயன்படுகின்றது. 18 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும  உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் முதலில் அப்பாவின்(ஆண்) புகைப்படத்தினையும் அடுத்துஅம்மாவின்  ( பெண்) புகைப்படத்தினையும் தேர்வு செய்யவும். அடுத்து குழந்தை உங்களுக்கு ஆணா பெண்ணா என்பதனையும் தேர்வு செய்யவும்.
 ஒகே.கொடுங்கள். சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் இறுதியாக உங்களுக்கான குழந்தை புகைப்படம் வெளியாகும்.
நீங்களும் உங்கள் துணைவியாரும் உருவத்திற்கு  ஏற்ப உங்களுக்காக குழந்தையின் புகைப்படத்தினை காணலாம்.நான் எனது புகைப்படத்தினையும் எனது துணைவியாரின் புகைப்படத்தினையும் பயன்படுத்தினேன்.எனது மகன் ஜாடையில் புகைப்படம்  வந்துள்ளது.நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள. 
வாழ்க வளமுடன்
வேலன்.

Friday, September 27, 2013

வேலன்:-டிஸ்க் அலைன்மென்ட் டெஸ்ட்

நமது கணிணியில் உள்ள டிஸ்க்கில் அலைன்மென்ட் சோதனை செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 800 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால்  செய்து ஓப்பன் செய்ததும் உங்களு்க்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதனை கிளிக் செய்திட கீழ்கண்ட தகவல் உங்களுக்கு கிடைக்கும்.
 இதில் நம் கணிணியில் உள்ள அனைத்து டிரைவ்களும் காண்பிக்கப்படும் மேலும் பென்டிரைவ் நீங்கள் இணைத்திருந்தாலும் அதனையும் இந்த சாப்ட்வேர் காண்பிக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இதில் இரண்டாவதாக உள்ள Switch Test கிளிக் செய்திட இங்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஒவ்வொரு டிரைவினையும் விவரமாக குறித்துள்ளார்கள். இதில் டிரைவின அளவு,காலியாக உள்ள இடம்,பைல் சிஸ்டம் மற்றும் கிளஸ்டர் சைஸ் என அனைத்து விவரங்களும் கொடுத்துள்ளார்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன் 
வேலன்.

Wednesday, September 25, 2013

வேலன்:-இமெயில் குறிப்பிட்ட நேரத்தில் தானாக அனுப்பிவிட

ஞாபக மறதி அனைவருக்கும் உரித்தானது. சிலருக்கு ஞாபகமாக கடிதம் எழுத நினைத்திருப்போம் வேலை பளுவில் அதனை மறந்திருப்போம். காலம் கடந்தபின்னர்தான் அது நினைவிற்கு வரும். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் இ -மெயில் அனுப்பிவிட இந்த இணையதளம் நமக்கு உதவுகின்றது. இந்த தளத்திற்கான முகவரி:-http://www.lettermelater.com.இந்த தளம் சென்றதும் உங்களுக்கான இ-மெயில் முகவரி கொண்டு லாக்ஆன் செய்யவும்.  பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் அனுப்பவேண்டிய முகவரியை தட்டச்சு செய்யவும். வழக்காமாக நீங்கள் அட்டச் மெண்ட் செய்வதோ புகைப்படங்களை இணைப்பதோ செய்யவும்.
இதில் உள்ள When to Send காலத்திற்கு பக்கத்தில் உங்களுக்கான காலண்டர் இருக்கும். அதில் தேதியையும் கீழே அனுப்பவேண்டிய நேரத்தினையும் செட் செய்து இறுதியாக இதில் உள்ள Schedule to be Sent கிளிக் செய்திடவும். அவ்வளவுதான உங்களுக்கான நேரத்தில் சரியாக மெயில் சென்று சேர்ந்துவிடும். நல்லது இருக்கும் இதில் ஏமாற்ற இருப்பவர்களுக்கு வசதியும் இருக்கின்றது. குறிப்பிட்ட நேரத்தில் நாம் சினிமாவிற்கோ அல்லது வெளியிலோ சென்று இருந்து அந்த சமயத்தில் நாம் அலுவலகத்தில்தான் வேலைசெய்துகொண்டு  இருந்தோம் என இந்த மெயிலை அவர்களுக்கு அனுப்புவது மூலம் நிருபிக்கலாம்  பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன் 
வேலன்.

Monday, September 23, 2013

வேலன்:-போட்டோ ஷாட்டர்

புகைப்படங்களை நாம் விரும்பியவாறு தேதி -மாதம் -வருடம் என போல்டரில் மாற்றிக்கொளள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நபர்கள் தங்கள் வசம் உள்ள புகைப்படங்களை இவ்வாறு தேதி -மாதம் -வருடம் என பிரித்துக்கொள்வதால் வாடிக்கையாளர்கள் கேட்கும் சமயம்  மீண்டும் எடுத்துக்கொடுக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.4எம்.பி.கொள்ளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் https://easy-photo-sorter.apponic.com/ செய்யவும் இதனை பதிவிறக்கம் செய்து  இன்ஸடால் செய்ததும் உங்கக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்

இதில் உள்ள Add Folder கிளிக் செய்து உங்களிடம் உள்ள புகைப்படங்களின் போல்டரை தேரவு செய்யவும்.இதில் உள்ள Next Step கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நாம் விரும்பும் வருடம் தேதி மூதம் எனவும் விரம்பிய டெக்ஸ்டை யும் நாம் கொண்டுவரலாம்.
templates:
TemplateSample folder structure
Year/Year-Month/Year-Month-Day2011/2011-11/2011-11-01
Year/Year-Month-Day2011/2011-11-01
Year/Year-Month2011/2011-11
Year/Month/Day2011/11/01
Year/Month2011/11
Month/Day11/01
Year-Month-Day2011-11-01
Year-Month2011-11
Month-Day11-01
Year2011
Month11
Day01

தேவையான விவரம் பூர்த்தி செய்ததும் 
கடைசியாக இதில் உள்ள Next Step கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

கடைசியாக இதில் உள்ள காப்ி பைல் மற்றும் மூல் பைல் என ஏதாவது ஒன்றினை தேர்வு செய்து இறுதியாக Start Sorting கிளிக் செய்துிட படங்கள் மாறிய மாற்றங்கள் அடைந்து நாம் சேமித்த இடத்தில் சேமிப்பாகும். அங்கு சென்று நமது புகைப்படங்களை பார்வையிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை சுறுங்கள்.
வாழ்க வளமுடன் 
வேலன்.

Friday, September 20, 2013

வேலன்:-பைல்-போல்டர் -யூஎஸ்பி டிரைவ்களை மறைத்திட

மற்றவர்கள் பார்வையிலிருந்து படாமல் மறைத்துவைக்க மேலும் ஒரு சிறந்த சாப்ட்வேர் கிடைத்துள்ளது. பைல்,போல்டர் மட்டும் அல்லாது நமது யூஎஸ்பி டிரைவினையும் இதில் மறைத்து வைக்கலாம்.2 எம்.பி.க்குள் கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய கணிணியில்  முற்படுகையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.நீங்கள் உங்கள் பைல் மற்றும் பொல்டர்களுக்கு பாஸ்வேர்ட் கொடுக்கவேண்டும். உங்கள் பைல் மற்றும் போல்டர்கள் மறைந்துவிடுவதால் கவனமாக பாஸ்வேர்ட் கொடுப்பதுமட்டுமல்லாது நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
 உங்களுக்கு இன்்ஸ்டால்  செய்து முடிந்ததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் பைல் - போல்டர் -யூஎஸ்பி என மூன்று டேப்புகள் கொடுத்திருப்பார்கள்.
தேவையானதை தேர்வு செய்து மறைத்துவிடுங்கள். மற்றவர்கள் இந்த சாப்ட்வேரினை பயன்படுத்தி திறந்துவிடுவார்களோ என அச்சம் உங்களுக்கு இருப்பின் இதில் உள்ள பாஸ்வேர்ட் கொடுத்து லாக் செய்துவிடுங்கள்.பாஸ்வேர்ட் கொடுக்கும் சமயம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 ஒ.கே.கொடுத்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 பாஸ்வெர்ட் மாற்றவிரும்பினால் இதில் உள்ள ஆப்பரேஷன் கிளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 உங்கள் பைல்களை மறைவிலிருந்து வெளியே கொண்டுவர unhide கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். பாஸ்வேரட் கொடுத்து ஒ.கே.தரவும்.
பைல்கள்் போல்டர்கள் போல் நம்மிடம் உள்ள யூஎஸ்பி டிரைவினையும் நாம் லாக்செய்துவிடலாம்.இதனால் மற்றவர்கள அதனை உபயேர்கிப்பதனை எளிதில் தடுத்துவிடலாம்.


பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள. 
வாழ்க வளமுடன் 
வேலன்.

Tuesday, September 10, 2013

வேலன்:-பேவரைட் பைல்களை உடனடியாக திறக்க

சில வகை பைல்களை நாம் அடிக்கடி பயன்படுத்துவோம். குறிப்பிட்ட பைலை திறக்க நாம் டிரைவினை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் போல்டரை தேர்வு செய்யவேண்டும். பிறகு குறிப்பிட்ட பைல் உள்ள ல்டரில்; குறிப்பிட்ட பைலை திறந்து பயன்படுத்த வேண்டும். ஆனால் அந்த சின்ன சாப்ட்வேரில் நாம் நமக்கு விருப்பமான பைலினை உடனடியாக திறந்துகொள்ளலாம்.
8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்;டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள Add Files கிளிக் செய்து நமக்கு அடிக்கடி தேவைப்படும் பைல்களை தேர்வு செய்து இறுதியாக இதில் உள்ள அப்ளை கொடுத்து .கே.தந்து வெளியேறவும்.

இப்போது உங்கள் விண்டோக்களை முடிவிடுங்கள். மை கம்யூட்டரினை திறங்கள். இப்போது இடதுபுறந மூலையில் மினிமைஸ் பட்டனுக்கு அருகில இரண்டு புதிய ஐகான்கள் வந்துள்ளதை காண்பீர்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

இதில் நட்சத்திர ஐகான் மீது கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.



இதில் நமக்கு அடிக்கடி உபயோகிக்கும் பைல்கள் வரிசையாக இருக்கும் தேவையான பைலினை கிளிக் செய்திட நேரடியாக பைலானது ஓப்பன் ஆகிவிடும். பைலினை சுலபமாக பயன்படுத்தலாம். அதுபோல இதில் நடசத்திர ஐகானுக்கு பக்கத்தில் உள்ள ஐகானினை கிளிக் செய்திட நீங்கள் உபயோகித்த பைல்களின் ஹிஸட்ரி உங்களுக்கு டிஸ்பிளே ஆகும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்
வாழ்க வளமுடன்
வேலன்.

Friday, September 6, 2013

வேலன்:-திருக்கழுக்குன்றம் திருக்குடமுழுக்கு விழா

சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வருகின்ற 15.09.2013 ஞாயிறுக்கிழமை அன்று திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெறுவதால் அன்பர்கள் நண்பர்கள்.பக்தர்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கின்றேன்.கடந்த நான்கு வருடங்களாக நடந்த கும்பாபிஷேகப்பணிகள் தற்போது முடியும் தறுவாயில் உள்ளது.பணியின் போது எடுத்த புகைப்படங்கள் கீழே:-



பணி முடிந்து கும்பாபிஷேகத்திற்காக காத்திருக்கும் கோபுரம் கீழே:-
ஆலயம் சார்பாக வெளியிட்டுள்ள அழைப்பிதழ் கீழே:-


மேலும் விரிவான விவரங்கள் அறிய இங்கு கிளிக் செய்யவும்.இவ்விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்து இறைவன் அருளைப்பெற வேணுமாய் கேட்டுக்கொள்கின்றோம்.                                                                                 வாழ்க வளமுடன்                                                                                                                            வேலன்.

Wednesday, September 4, 2013

வேலன்:-கம்யூட்டரின அனைத்து பணிகளையும் ஒரே சாப்ட்வேர் மூலம் செய்திட

ஒரே ஒரு சாப்ட்வேர்..கம்யூட்டரில் உள்ள அனைத்து வேலைகளையும் இதன் மூலம் செய்ய முடியும். ஒன்று அல்ல இரண்டல்ல சுமார் 270 வேலைகளை இந்த சாப்ட்வேர் நமக்காக செய்து முடிக்கின்றது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 முக்கியமான 17 பணிகளின் வகைப்படுத்தி கொடுத்துள்ளார்கள். நமக்கு தேவையானதை கிளிக் செய்ய அதன் விண்டோவில் உள்ள அப்ளிகேஷன்கள் நமக்கு தெரியவரும் உதாரணமாக நான் கன்ட்ரோல் பேனல் கிளிக் செய்திட வரும் பாப்அப்மெனுவில் கன்ட்ரோல் பேனலில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் நமக்கு திறக்கும் தேவையானதை தேர்வு செய்து கிளிக் செய்தால் போதுமானது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 விண்டோஸ் போல்டரை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகியது. அதில் உள்ள முக்கியமான அப்ளிகேஷன்கள் ்திறந்துபயன்படுததலாம்.
 விண்டோஸ் சிஸ்டம் கிளிக் செய்ய அதில் உள்ள பாப்அப் மெனுக்களின் விவரம்  தெரியவரும்.ரீ ஸ்டாட் முதற்கொண்டு இமெயில் அனுப்புவதுவரை நாம் பணிகளை மேற்கொள்ளலாம்.
 விண்டோஸ் மேனேஜ்மெண்ட் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
எந்த ஒரு வேலையையும் நாம் இந்த ஒரே ஓரு சாப்ட்வேர் மூலம் சுலபமாக முடித்துக்கொள்ளலாம்.ஒவ்வொன்றுக்கும் தனிதனியே சென்று பணி முடிப்பதை விட ஒரே இடத்தில் இருந்து அனைத்து பணிகளையும் முடி்ப்பது சுலபமில்லையா..!பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள. 
வாழ்க வளமுடன் 
வேலன்.

Monday, September 2, 2013

வேலன்:- 3 -1 அல்ஜீப்ரா,கல்குலஸ்.ப்ரிகல்குலஸ் புத்தகங்கள்.

கணக்கு என்றாலே காததூரம் ஓடுபவர்களா நீங்கள். உங்களுக்காகவே எளிய முறையில் அல்ஜீப்ரா,கால்குலெஸ்.ப்ரிகால்குலெஸ் என மூன்று முத்தான புத்தகங்கள் கொடுத்தூள்ளார்கள்.மூன்று புத்தகங்களும் சேர்த்து 6 எம்.பி. கொள்ளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு மூன்று தலைப்புகளில் புத்தகம் கிடைக்கும்.அல்ஜிப்ரா ஆரம்ப முதல் எளிய முறையில் விள்க்கம் கொடுத்துள்ளார்கள்.




புத்தகங்களிலேயே விளங்கங்கள் கொடுத்துள்ளதால் தனியாக விளங்கங்கள்கொடுக்கவில்லை. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன் 
வேலன்.