Monday, June 10, 2019

வேலன்:-போல்டர்களில் எழுத்துக்கள் மற்றும் வேண்டிய நிறங்கள் கொண்டுவர -Folder Marker

கணினியில் நாம்பயன்படுத்தும் போல்டர்கள் மஞ்சள்நிறத்திலேயே டீபால்டாக காணப்படும். ஆனால் போல்டருக்கு நாம் விதவிதமான நிறங்களையும் எண்கள் மற்றும் எழுத்துக்களை கொண்டுவரவும் விரும்பிய ஐகானை கொண்டுவரவும் இந்த மென்பொருள் நமக்கு பயன்படுகின்றது. இதனை பதிவிறக்க்ம் செய்திட இங்கு கிளிக் http://foldermarker.com/en/ செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் தேவையான போல்டரினை தேர்வு செய்திடவும். பின்னர் உங்களுக்கு தேவையான எழுத்துருவினை தேர்வு செய்யவும். உதாரணமாக அலுவலக போல்டர்எனில் அதற்கு O என்கின்ற எழுத்துருவினை தேர்வு செய்திடலாம்.ஒரு பைல் பணி முழுவரும் முடிவடைந்தது.பாதிவேலை முடிந்தது.வேலை முடியாதது.முக்கியமான பைல்.முக்கியம் அல்லாதது என விருப்பமான பெயர்களை கொடுக்கலாம்.அதுபோல எண்களையும் நாம்தேர்வு செய்திடலாம்.
 இதன் மேல்புறம் விதவிதமான போல்டரின் ;நிறங்கள்கொடுத:துள்ளார்கள் வேண்டிய நிறத்தினை நாம் தேர்வு செய்திடலாம். மேலும் இதன்மேல்புறம் உள்ள டேபில் ABC.Colour.Everyday.Main.User Icons என நிறைய ஆப்ஷன்களுடன் டேப்புகள் கொடுத்துள்ளார்கள். தெவையானதை கிளிக்செய்திட அதற்கான விண்டோ ஓப்பன் ஆகும்.மேலும் நீங்கள்ஒவவொரு போல்டரினை நேரடியாக திறந்து அதற்கு வேண்டிய நிறத்தினைகொடுக்கலாம். நீங்கள் விரும்பும்போல்டரை ரைட்கிளிக்செய்திடவும் வரும்விண்டோவில் Mark Folder என்கின்ற டேபினை கிளிக் செய்திட உங்களுக்கு பாப்அப் விண்டோ ஒப்பன் ஆகும்.
இதன்மூலம் நமக்கு விருப்பமான போல்டரினை நிறம் கொடுத்து பிரிப்பது மூலம் பைல்களை தேடுவது சுலபமாக இருக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

No comments:

Post a Comment