Thursday, January 30, 2020

வேலன்:-ஒரு ஆப்ரேடிங் சிஸ்டத்திலிருந்து மற்றோன்றுக்கு சுலபமாக மாற-Windows operating system

ஒரு சிலர் கணிணியில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ் கணிணியில் வைத்திருப்பார்கள். தேவைப்படும் சமயம் ஒன்றிலிருந்து விலகி மற்றோன்றை ஒப்பன் செய்துகொள்வார்கள். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் சுலபமாக ஒன்றிலிருந்து மற்றும் ஒன்றுக்கு மாறிகொள்ளலாம். இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்தது கொள்ளுங்கள்.


நீங்கள் ஒன்றிலிருந்து மற்றோன்றுக்கு மாற விரும்பினால் டாஸ்பாரில் உள்ள ஐகானை கிளிக் செய்திடுங்கள். உங்களுக்கு மேலே உள்ள விண்டோ ஓப்பன் ஆகும்.மாற விரும்பும் ஆபரேட்டிங் சிஸ்டத்திற்கு உடனடியாக மாறி கொள்ளுங்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Monday, January 27, 2020

வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium

இணையத்தில் நாம் தனிப்பட்ட கணக்கில் நுழைந்திட நமது தனி கணக்கிற்கு பாஸ்வேரட் முக்கியமானது. அந்த பாஸ்வேர்டினை கடினமாக அமைத்தால் தான் மற்றவர்கள் நமது கணக்கில் உள் நுழைய முடியாது. நமது பாஸ்வேர்ட் எவ்வளவு வளிமையானது என்பதனையும் வளிமையான பாஸ்வேர்டினையும அமைத்துக்கொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 இதில் உள்ள பாஸ்வேர்ட் பார்மெட்டினைகிளிக்செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும். இதில் எழுத்துக்கள் மட்டுமா -எண்கள் மட்டுமா- எழுத்துக்களும் எண்களும் சேர்ந்தா என நிறைய டேப்புகள கொடுத்துள்ளார்கள். நமக்கு தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.அடுத்து பாஸ்வேர்ட் எத்தனை எண்ணிக்கையில் வரவேண்டுமோ அதனை எண்களாக தட்டச்சு செய்யவும் அடுது;து இதில் உள்ள ஜெனரேட்டர் கிளிக் செய்திட நமக்கு புதிய பாஸ்வேர்ட் கிடைக்கும்.
 நீங்கள் ஏற்கனவே பாஸ்வேர்ட் பயன்படுத்துவராக இருந்தால் இதில் இரண்டாவதாக உள்ள Strength Checker கிளிக் செய்து நமது பாஸ்வேர்டினை உள்ளீடு செய்யவும். இப்போது உங்கள் பாஸ்வேர்டின் உறுதி தன்மை தெரியும். நான் தமிழ் கம்யூட்டர் என பாஸ்வேர்ட் கொடுத்தேன். அதன் உறுதி தன்மையை கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நீங்கள் புதியதான பாஸ்வேர்ட உருவாக்குவதானாலும் சரி..இருக்கும் பாஸ்வேர்டின் உறுதி தன்மையை அறிந்துகொள்ளவதானாலும் சரி. இந்த சின்ன சாப்ட் வேரினை பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Friday, January 24, 2020

வேலன்:-முக்கிய பைல்கள்.புகைப்படங்கள்.வீடியோக்களை பாஸ்வேர்ட் கொடுத்து மறைத்து வைக்க-Encrypt Care

நம்மிடம் உள்ள புகைபப்டங்கள்.வீடியோக்கள்.டாக்குமெண்ட்கள்.முக்கிய பைல்கள் ஆகியவற்றை நமது கணிணியிலேயே மற்றவர்கள் திறந்து பார்வையிடாமல் இருக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 1 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உஙக்ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள + பட்டனை கிளிக் செய்து நாம் ரகசியமாக மறைத்துவைக்க விரும்பும் புகைப்படமோ,வீடியோவோ.பைலோ.அல்லது இவை அனைத்தும் உள்ளடக்கிய போல்டரோ எதுவாக இருந்தாலும் அதனை தேர்வு செய்திடவும். 
இதில் உள்ள என்கிரிப்ட் பட்டனை கிளிக் செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட எச்சரிக்கை தகவல் வரும். 


இப்போது மேலே உள்ள மெனுபாரின் கீழெ பாஸ்வேர்ட் எனகொடுக்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள் என்ன பாஸ்வேர்ட் கொடுக்கவிரும்புகின்றீர்களோ அதனை தட்டச்சு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
 

இப்போது மீண்டும் என்ஸ்கிரிப்ட் கிளிக் செய்யுங்கள் எங்களுடைய பைல்கள் எந்த போல்டரில் எந்த டிரைவில் தேவையோ அதனை தேர்வு செய்திடுங்கள்.இப்பொது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


உங்களுடைய பைல்கள் முழுவதும் என்ஸ்கிரிப்ட் ஆகியவுடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது நீங்கள் சேமிதத் இடத்தில் சென்று பார்த்தால் உங்களுடைய பைல்கள் இருக்கும். ஆனால் அதனை திறந்து பார்க்க முடியாது. இப்போது மீண்டும் இந்த சாப்ட்வேரினை திறந்துகொள்ளுங்கள். நீங்கள் மறைக்க விரும்பிய பைலினை தேர்வு செய்யுங்கள். பாஸ்'வேர்ட் கொடுங்கள். அன்என்ஸகிரிப்ட் தேர்வு செய்து தேவையான டிரைவின தேர்வு செய்யுங்கள். உங்களுடைய பைல்கள் சாதாரண பைல்களாக மாறிவிடும். இப்போது அந்த டிரைவினை திறந்து பார்த்தால் உங்களுடைய பைல்கள் கிடைக்கும். ரகசியமாக பைல்களை வைத்துகொள்ள விரும்புவர்கள் இதனை தாராளமாக பயன்படுத்திப்பார்க்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Thursday, January 23, 2020

வேலன்:-தேவையற்ற மின்அஞ்சல்களை இன்பாக்ஸிற்கு வராமல் தடுத்திட-Lock unwanted e-mail

புத்தகக்கண்காட்சி.பொருட்காட்சி மற்றும் சில பொருட்களை வாங்கும் சமயம் நமது இமெயில் முகவரியை கேட்பார்கள். அவ்வாறு நாம் கொடுக்கும் முகவரிகளை சிலர் அவர்களுடைய விளம்பரங்களை வெளியிட பயன்படுததிக்கொள்வார்கள். சில சமயம் நமக்கு பயன்பட்டாலும் பெரும்பாலான சமயங்களில் நமக்கு அது எரிச்சலையே ஏற்படுத்தும். அவ்வாறு தேவையில்லாமல் வரும் இமெயில்களை நமது இன்பாக்ஸில் வராமல் நேரடியாக டெலிட் செய்திட நமது இமெயிலில் சின்ன செட்டிங்ஸ் செய்தால் போதுமானது. அதனை எவ்வாறு செய்யலாம் என காணலாம். முதலில் உங்கள் இமெயிலினை திறந்துகொள்ளுங்கள்.அதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து வரும் விண்டோவில் பில்டர் கிளிக் செய்யுங்கள். அதில் கிரியேட் நியூ பில்டர் கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழே உள்ள விண்டோ ஒப்பன் ஆகும்.
 அதில் யாருடைய இமெயில் நமக்கு வரவேண்டாம் என நினைக்கின்றோமோ அவர்களுடைய முழு முகவரியையும் தட்டச்சு செய்யுங்கள். மற்ற விவரங்கள் தேவைப்பட்டால் தட்டச்சு செய்து பின்னர் கிரியேட் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நிறைய ஆப்சன்கள் கொடுத்திருப்பார்கள்.தேவையானதை நாம் தேர்வு செய்யலாம். உங்களுக்கு நிரந்தரமாக டெலிட் செய்தவிடவேண்டமென்றால் டெலிட் பட்டனை கிளிக் செய்து இறுதியாக கிரியேட் பில்டர் கிளிக் செய்து வெளியேறவும்.
இப்போது பில்டர் விண்டோவில் நீங்கள் தேர்வு செய்த இமெயில் முகவரி இருக்கும் தேவைப்பட்டால் இந்த வசதியை நீக்கிவிட்டு எப்போதும் போல நமக்கு இன்பாக்ஸில் மெயில் வரவழைக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Wednesday, January 22, 2020

வேலன்:-பவர்புல் கிளினர் -More Powerful Cleaner.

More Powerful Cleaner என்கின்ற இந்த சின்ன சாப்ட்வேர் நமது கணிணியில் உள்ள தேவையற்ற ஜங்க் பைல்களை முழுவதுமாக நீக்கி விடுகின்றது. 6 எம்பிகொள்ளவு கொண்ட இந்த சாப்ட்:வேரினை பதிவிறக்கம் செய்திடவும் சாப்ட்வேரினை பற்றி முழுவதும் அறிந்துகொள்ளவும்  இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள செக் நௌ கிளிக் செய்திடவும்.உங்களுக்குகீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
கணிணியில் உள்ள வீடியோ ஆடியொ ஜங்க் பைல்கள் விளையாட்டு சாப்ட்வேர்களின் ஜங்க்பைல்கள் என மொத்தம் 12 விதமான அப்ளிகேஷன்களின் தேவையற்ற பைல்களை நீக்கிவிடும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 அனைத்து தேவைற்ற ஜங்க் பைல்களை நீக்கியபின்னர் நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Tuesday, January 21, 2020

வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader

பிடிஎப்.இ பப்.மோபி போன்று காமிக்ஸ் புத்தகங்களை படிக்க இந்த காமிக்ஸ் புக் ரீடர் -Comic Book Reader பயன்படுகின்றது.மேலும் இது காமிக்ஸ் வகை  பைல்களான  *.cbz, *.cb7, *.cbt and *.cba பைல்களையும் படிக்க வல்லது. 2 எம்.பி.க்கும் குறைந்த கொள்ளளவான இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களிடம் உள்ள காமிக்ஸ் வகை பைல்களை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
இதில் ஒவ்வொரு பக்கங்களையும்ப்ரிவியூ பார்ப்பதுடன் அதனை நாம் பெரியதாக்கியும் பார்க முடியும். காமிக்ஸ் கதைகளில் புகழ்பெற்ற இரும்பு கை மனிதன்.மாயாவி போன்ற கதைகளை படித்து மகிழுங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Monday, January 20, 2020

வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3

யூடியூப் வீடியோக்களில் நாம் வீடியோ தவிர்த்து ஆடியோ மட்டும் கேட்போம். ஆனால் அதற்கென தனி தனியாக சாப்ட்வேர்களை பயன்படுத்தவேண்டும் ஆனால் அவ்வாறு இல்லாமல் யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம்செய்யும் சமயமே அதனை எம்பி3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர்பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமக்கான யூஆர்எல் முகவரியை பேஸ்ட் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Performance கிளிக் செய்திட வரும் விண்டோவில் வேண்டிய செட்டிங்ஸ் நாம் சுலபமாக தேர்வு செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இறுதியாக சேவ் செட்டிங்ஸ் கொடுத்து பின்னர் ஒ.கே.கொடுத்தீர்களே யானால் சில வினாடிகள் காத்திருப்புக்கு பின்னர் நமக்கான யூடியூப் வீடியோ பைல்கள் ஆடியோ பைலான எம.பி.3 ஆக மாறிஉள்ளதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, January 19, 2020

வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix

சில திரைப்படங்கள்.வீடியோ பைல்களில் சப் டைடில் வீடியோவுடன் இணைந்து வரும்.சமயத்தில் நமக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அவ்வாறான சப் டைடிலை எளிதில் நீக்கிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும். இதில் டிராக் அன்ட்டிராப் முறையில் வீடியொ பைலினை இழுத்துவிடவும்.
 இதில் உங்களுக்கு கீழ்கண்டவாறு விண்டோ தோன்றும். இதில் கடைசியாக உள்ள சப்டைடில் என்கின்ற ரேடியோ பட்டனை கிளிக் செய்திடவும்.
 பின்னர் ஸ்டார்ட் கன்வர்சன் கிளிக் செய்திடவும் இப்போது உங்களுக்கான வீடியோவானது சப் டைடில் இல்லாமல் காப்பி ஆகும்.
சப் டைடில் நீக்க பணி முடிந்ததும் உஙகளுடைய ஹார்ட்டிரைவில் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியோ பைலானது சப் டைடில் நீக்கி காணப்படும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Friday, January 17, 2020

வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days

இரண்டு  தேதிகளுக்கு  இடைப்பட்ட நாட்களை கணக்கிடவும். இன்றைய தேதியிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில்வருகின்ற தேதியை அறிந்துகொள்ளவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இன்றைய தேதியிலிருந்து குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் நாளினை கணக்கிடலாம். கீழே உள்ள தேதி விண்டோவில் நாம் நாட்களை குறிப்பிட இன்றைய தேதியிலிருந்து அடுதது வரும் தேதியை நமக்கு ஐலைட் செய்து காண்பிக்கும். மேலும் கீழே உள்ள விண்டோவில் இன்றைய தேதியும் அடுத்து வர உள்ள தேதியும் நமக்கு கிடைக்கும்.
 அதுபோல இன்றைய தேதியை தேர்வு செய்து நமக்கு விருப்பமான தேதியை இதில் உள்ள காலண்டரில் தேர்வ செய்திட இரண்டு நாட்களுக்கு இடைப்பட்ட தேதி நமக்கு கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
திருமணம்.தேர்வு குழந்தைபிறப்பு.போன்ற முக்கிய நாட்களுக்கு இன்றைய தேதியிலிருந்து இன்னும் எவ்வளவு நாட்கள் இடைப்பட்டுள்ளது என எளிதில் அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன். 

Wednesday, January 15, 2020

வேலன்:-புகைப்படத்தில குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறிப்பிட்டு காண்பிக்க-Artensoft Tilt Shift Generator

சில புகைப்படங்களில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறிப்பிட்டு காண்பிக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. கூட்டமாக உள்ள புகைப்படத்தில் குறிப்பிட்ட ஓருவரைமட்டும் ஹைலைட் செய்து காண்பிக்கலாம். புகைபடத்தின் மற்ற இடங்கள் ப்ளர் செய்து காண்பிக்கப்படும்.10 எம்.பிகொள்ளவு கொண்டஇதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கான புகைப்படத்தினை தேர்வு செய்யவும். இதில் இடது புறம் கீழ்கண்ட விண்டோ இருக்கும்.அதில் எந்த பகுதி வேண்டுமொ புகைப்படத்தில் அந்த பகுதியை மட்டும் தேர்வு செய்யவும். மேலும் - கீழும். வலதுபுறம் இடதுபுறம் புகைப்படத்தின் அளவு மற்றும் புகைப்படத்தின் பிரைட்நஸ் என நமக்கு தேவையானதை தேர்வு செய்யலாம்.
 மேலும் புகைப்படத்தில் உருவங்கள் எந்த வகையில் வேண்டுமோ நமக:குதெரியவேண்டுமோ அந்த உருவத்தினையும் நாம் தேர்வு செய்யலாம். கீழே விதவிதமான உருவங்கள் கொடுத:துள்ளார்கள்ி.
 புகைப்படத்தில் குறிப்பிட்ட பகுதியைமட்டும் விட்டுவிட்டு மற்றபகுதியை ப்ளர் செய்துவந்துள்ள படம் கீழே.
நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.பயன்படுத்த சுலபமாக உள்ளது.
வாழ்க வளமுடன்
வேலன்.

Tuesday, January 14, 2020

வேலன்:-மவுஸ் இல்லாமல் கணிணி பயன்படுத்த-NeatMouse

சில சமயங்களில் நம்மிடம் உள்ள மவுஸ் வேலை செய்யாமல் பழுதாகிவிடும். அந்த மாதிரி சமயங்களில் மவுஸ் இல்லாமல் கணிணி பயன்படுத்த இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து கீபோர்டில் உள்ள நம்பர் கீகளை நாம் மவுஸ் செட்டிங்ஸ் பதில் பயன்படுத்திக்கொள்ளலாம். மவுஸ் கர்சர் மேலே கீழே பக்கவாட்டில் .ரைட்கிளிக் லெப்ட் கிளிக்.சென்டர்வீல் என ஒவ்வொரு ஆப்ஷனுக்கும் ;ஒவ்வொரு எண்ணை நாம் செட்டிங்ஸ் பாக்ஸில் செட் செய்துவிடலாம். 



பின்னர் நாம் கீபோர்டில் நம்பர் செட்டிங்ஸ் கிளிக்செய்திட மவுஸ் இல்லாமல் நாம் மவுஸ் செய்திடும் வேலைகளை சுலபமாக செய்திடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Monday, January 13, 2020

வேலன்:-கூகுள் தீமில் நம்முடைய புகைப்படம் வரவழைக்க-My Chrome Theme

கூகுளிலில் சாதாரண தீம்கள்தான் இருக்கும்.அதில்  பயன்படுத்தும் தீம்களை நாம் விருப்பபடி மாற்றிடவும் நாம் விரும்பும் புகைப்படத்தினை தீமாக இணைத்திடவும் இந்த இணையதளம் உதவுகின்றது. இதனை பயன்படுத்திட இங்கு கிளிக் செய்யவும். 
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில்  Start making your theame  என்பதனை கிளிக் செய்யவும்.,இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் அப்லோடு இமேஜ் கிளிக் செய்யவும். (உங்கள் புகைப்படம் 5 எம்பி க்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்)
இப்போது உங்களுக்கான புகைப்படம் கிடைக்கும. இதில் மாற்றங்கள் ஏதும் செய்யஇருப்பின் செய்திடவும். 
இறுதியாக நீங்கள் உருவாக்கிய தீம்க்கு  ஒரு பெயரை வைத்து விட்டு ஒ,கே. தரவும். 
இப்போது உங்கள் புகைப்படம் கூகுளில் தீமாக உள்ளதை காணலாம. ஒரே தீமாக பார்த்திருப்பதிலிருந்து வித்தியாசமான தீம் நமக்கு உற்சாகத்தினை தரும்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, January 12, 2020

வேலன்:-ஆன்லைனில் புகைப்படங்களின் ஓரங்களை மடிக்க-Roundpic

நம்மிடம் உள்ள புகைப்படங்களின் ஓரங்களை நாம் ரவுண்ட்டாக மாற்ற போட்டோஷாப் பயன்படுத்துவோம். ஆனால் இந்த இணையதளம் நம்மிடம் உள்ள புகைப்படங்களை ஆன்லைனில் வேண்டிய அளவிற்கு ரவுண்டாக மாற்றிகொடுக்கின்றது.இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இந்த தளம் சென்றதும் உங்களுக்கான புகைப்படத்தினை கணிணியில் இருநது தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள ரவுண்ட் இட் பட்டனை கிளிக் செய்யவும்.அதில் உங்களுக்கான புகைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கும்..

 கீழ்கண்ட விண்டோ வரும் அதில் புகைப்படத்தில் உள்ள நான்கு மூலைகளில் எந்த இடத்தில் புகைப்படத்தினை மடிக்க வேண்டுமோ அந்த இடத்தினை தேர்வு செய்யவும். நான்கு புறமும் வேண்டும் என்றால் அனைத்து மூலைகளையும் தேர்வு செய்திடவும்.மூலை எந்த அளவிற்கு வளைவு வேண்டுமோ அதற்கான ஸ்லைடரை நகர்த்துவது மூலம் படத்தின் அளவினை நாம் தேர்வு செய்திடலாம்.அனைத்து பணிகளும் முடிந்ததும் இதில் உள்ள ரவுண்ட் ஐகானினை கிளிக் பண்ண சில நொடிகளில் உங்களுக்கான புகைபடம் ரவுண்ட் ஷெப்பில் வந்துவிடும். ரவுண்ட் அதிகமாகவும் புகைப்படங்களின் அளவுகளில் மாற்றங்கள் தேவையேன்றாலும் நாம் இதில் உள்ள  ஸ்லைட் பாரினை நகர்த்துவது மூலம் சரிசெய்துகொள்ளலாம்

மடிக்கப்பட்ட ஓரங்களில் பின்புறத்திற்கு எந்த நிறம் நமக்கு பிடித்துள்ளதோ அந்த நிறத்தினை   தேர்வு  செய்யலாம்.
சில மாதிரி புகைப்படங்கள் கீழ் உள்ளது:-

. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Saturday, January 11, 2020

வேலன்:-கம்யூட்டர் டைரி-Sticky Note Diary

புதுவருடம் பிறந்ததும் அனைவரும் டைரி கேட்பார்கள். நாமும் புதுவருடத்திற்கு இந்த கம்யூட்டர் டைரியை கொடுக்கலாம். 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.. 
இதில் உங்களுக்கான காலண்டர் இடதுபுறம் இருக்கும். இதில் அன்றைய தேதி சிறிய முக்கோணத்தில் உங்களுக்கு தெரியவரும். இதில் உள்ள டைரி பக்கத்தில் உங்களுக்கு தேவையான தகவல்களை உள்ளீடு செய்யலாம்.
டைரியின் பக்கத்தில் அன்றைய நிகழ்வின் புகைப்படத்தினையும் டாக்குமெண்ட் இருந்தால் டாக்குமெண்டையும். ஆபிஸ் பைல்களையும். பிடிஎப்பைல்களையும் இணைக்கலாம். அந்த நிகழ்வின் தகவல்களையும் நீங்கள் பதியவைக்கலாம்.
தகவல்கள் மற்றவர்கள் பார்க்காமல் இருக்க இதில் பாஸ்வேர்ட் வசதியும் கொடுத்துள்ளார்கள். இதன்மூலம் மற்றவர்கள் நமது தனிப்பட்ட தகவல்களை பார்வையிடுவதை தவிர்க்கலாம்.
இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து ஆரம்ப தேதி மற்றும் நேரங்களை செட் செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
டைரியின் பக்கத்தின் நிறத்தினையும் பாண்ட் அளவினையும் நாம் வேண்டிய அளவிற்கு செட்செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
தகவல்களையும்.புகைப்படத்தினையும் உள்ளீடு செய்த டைரியின் பக்கத்தினை கீழே உள்ள விண்டோவில் பாருங்கள. மேலும் இந்த டைரியினை இம்போர்ட் மற்றும் ;எக்ஸ்பேர்ட் செய்யலாம்.
புகைப்படங்கள். டாக்குமெண்ட்கள் இணைத்துக்கொள்ளக்கூடிய வசதிகளுடன்  பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்ககும் வசதி உள்ளதால் இந்த டைரி யை நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Friday, January 10, 2020

வேலன்:-பைல்களை விரைந்து பகிர்ந்துகொள்ள-ShareByLink

நம்மிடம் உள்ள பைல்கள் போட்டோக்கள் முதலியவற்றை நாம் மற்றவர்களுக்கு கொடுக்க விரும்பினால் இந்த சாப்ட்வேர் மூலம் விரைவாகவும் சுலபமாகவும் கொடுக்கலாம் இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இந்த சாப்ட்வேரினை டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நம்மிடம் உள்ள பைல்களை டிராக் அன்ட் டிராப் முறையில் இழுத்துவந்து போடவும். அல்லது அனுப்பவேண்டிய பைலினை ரைட்கிளிக் செய்தால் வரும் விண்டோவில் ஷேர்லிங்க் கிளிக் செய்தால் சில நொடிகளில் உங்களுக்கு பைலானது இணைய இணைப்பிற்கு சென்று அதற்கான டவுண்லோடு லிங்க் உங்களுக்கு கிடைக்கும்.
அந்த பைலுக்கான டவுண்லோடு லிங்க்கை காப்பி செய்து நீங்கள் யாருக்கு அனுப்பவிரும்புகின்றீர்களோ அவர்களுக்கு அனுப்பி வைக்கவும். லிங்கை அவர்கள் கிளிக் செய்தால் அவர்களுக்கான பைலானது டவுண்லோடு ஆகி அவர்களுக்கு கிடைக்கும். சுலபமாகவும் விரைவாகவும் கிடைப்பதால் பயன்படுததிப்பாருங்கள். 
வாழ்கவளமுடன்
வேலன்.