நம்மிடம் உள்ள புகைபப்டங்கள்.வீடியோக்கள்.டாக்குமெண்ட்கள்.முக்கிய பைல்கள் ஆகியவற்றை நமது கணிணியிலேயே மற்றவர்கள் திறந்து பார்வையிடாமல் இருக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 1 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உஙக்ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள + பட்டனை கிளிக் செய்து நாம் ரகசியமாக மறைத்துவைக்க விரும்பும் புகைப்படமோ,வீடியோவோ.பைலோ.அல்லது இவை அனைத்தும் உள்ளடக்கிய போல்டரோ எதுவாக இருந்தாலும் அதனை தேர்வு செய்திடவும்.
இதில் உள்ள என்கிரிப்ட் பட்டனை கிளிக் செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட எச்சரிக்கை தகவல் வரும்.
இப்போது மேலே உள்ள மெனுபாரின் கீழெ பாஸ்வேர்ட் எனகொடுக்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள் என்ன பாஸ்வேர்ட் கொடுக்கவிரும்புகின்றீர்களோ அதனை தட்டச்சு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இப்போது மீண்டும் என்ஸ்கிரிப்ட் கிளிக் செய்யுங்கள் எங்களுடைய பைல்கள் எந்த போல்டரில் எந்த டிரைவில் தேவையோ அதனை தேர்வு செய்திடுங்கள்.இப்பொது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களுடைய பைல்கள் முழுவதும் என்ஸ்கிரிப்ட் ஆகியவுடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது நீங்கள் சேமிதத் இடத்தில் சென்று பார்த்தால் உங்களுடைய பைல்கள் இருக்கும். ஆனால் அதனை திறந்து பார்க்க முடியாது. இப்போது மீண்டும் இந்த சாப்ட்வேரினை திறந்துகொள்ளுங்கள். நீங்கள் மறைக்க விரும்பிய பைலினை தேர்வு செய்யுங்கள். பாஸ்'வேர்ட் கொடுங்கள். அன்என்ஸகிரிப்ட் தேர்வு செய்து தேவையான டிரைவின தேர்வு செய்யுங்கள். உங்களுடைய பைல்கள் சாதாரண பைல்களாக மாறிவிடும். இப்போது அந்த டிரைவினை திறந்து பார்த்தால் உங்களுடைய பைல்கள் கிடைக்கும். ரகசியமாக பைல்களை வைத்துகொள்ள விரும்புவர்கள் இதனை தாராளமாக பயன்படுத்திப்பார்க்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்