Thursday, April 30, 2020

வேலன்:-வீடியோ கட்டர் -CutoMe Video Cutter.

வீடியோ பைல்களை வேண்டிய இடங்களில் வெட்டி அதனை முகநூல்.யூடியூப்.வாட்ஸ்அப் போன்றவற்றில் பயன்படுத்த இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்   செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்குகீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்.


இதிலுள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்ய உங்களுக்கு வரும் விண்டோவில் Default.Whatsapp.Facebook.Youtube.Gif என எந்த பார்மெட்டுக்கு வீடியோ வேண்டுமொஅந்த பார்மேட்டுக்கு எதிரில் உள்ள ரேடியொ பட்டனை கிளிக் செய்திடவும்.வீடியோவினை சேமிக்கும்இடத்தினையும்தேர்வு செய்திடவும்.
இதன் கீழ்புறத்தில் நீங்கள் வீடியோவிற்கு தேவையான இடத்தினை தேர்வு செய்திடலாம்.மேலும் ஸ்னாப் ஷாட் எடுப்பதற்கும் வசதிசெய்யப்பட்டுள்ளது. தேவையான வீடியோவின் ஆரம்ப இடத்தினையும் வீடியொ முடிவுறும் இடத்தினையும்தேர்வு செயதிடவும். பின்னர் இதிலி; உள்ள கட்டர் கிளிக் செய்திடவும்.
 




உங்களுக்கான வீடியோ கட்டாகி சேமிப்பு வேலை நடைபெறும்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு வீடியோ வெட்டப்பட்டதற்கான தகவல் உங்களுக்கு கிடைக்கும்.பின்னர் உங்கள் வீடியோவானது நீங்கள் சேமித்த இடத்தில் இருக்கும்.
நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்வையிடலாம் பயன்படுத்திக்ககொள்ளலாம். 
வாழ்கவளமுடன்
வேலன்.

Wednesday, April 29, 2020

வேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Ummy Video Converter.

நமது கணினியில் உள்ள வீடியோ பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட இநத மென்பொருள் பயன்படுகின்றது. இந்த இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்தபின் ஒப்பன்செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.



இதில் டிராக் அன்ட் டிராப் முறையிலோ பைல்களை டிரைவிலிருந்து தேர்வு செய்தோ தேர்ந்தெடுக்கவும்.
இதன் கீழே உள்ள கன்வர்ட் என்பதனை கிளிக் செய்ய விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நம்மிடம் உள்ள செல்பேசிக்கு வகையை தேர்வு செய்யலாம் வீடியோ பார்மெட்டில் 9 வகை பைல்கள் கொடுத்துள்ளார்கள்.
அதில் ஒன்றினை தேர்வு செய்து ஒ.கே. தரலாம் சில விநாடிகள் காத்திருப்பிற்கு பின்னர் நமக்கான வீடீயொவானது வேண்டிய பார்மெட்டுக்கு மாறி உள்ளதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Tuesday, April 28, 2020

வேலன்:-இலவச ஆடியோ ப்ளேயர் -M4A Player.

சில பாடல்கள் M4A பார்மெட்டக்களில கிடைக்கும் அந்த மாதிரியான பாடல்களை கேட்க இந்த M4A ப்ளேயர் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
நமது ஹார்டிஸ்கில் உள்ள பைலினை தேர்வு செய்திடவும். பின்னர் இதில் உள்ள ப்ளே பட்டனை கிளிக் செய்திட நமக்கான பாடல்கள் ஒலிக்க தொடங்கும். அதிகபடியான பாடல்கள் இருந்தால் அதனை ப்ளேலிஸ்ட்டில் சேர்த்து ஒலிபரப்ப கேட்கலாம் பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Monday, April 27, 2020

வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டெடுக்க -Easy Photo Recovery

கணிணி,கேமரா.பென்டிரைவ்.செல்போன் என நாம் பயன்படுத்துகையில் சிலசமயம் மறந்து அதில் உள்ள போட்டோக்களை டெலிட் செய்துவிடுவோம். அவ்வாறு டெலிட் செய்த புகைப்படங்களை மீண்டும்கொண்டுவர இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதன் இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உஙக்ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 நீங்கள் எதிலிருந்து புகைப்படங்களை தேர்வு செய்ய விரும்புகின்றீர்களோ அதனை தேர்வு செய்திடவும். கணிணியாக இருந்தால் டிரைவினை தேர்வு செய்திடவும்.

 வரும் விண்டோவில் தேவையானதை தேர்வு செய்திடவும்.
 பின்னர் இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்திடவும. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
மீட்டெடுத்த பைல்களை தேவையான டிரைவிலோ அல்லது தனியாகவோ சேமிக்கலாம்.
பின்னர் தேவையான இடத்தில் சென்று நாம் டெலிட் செய்த பைல்களை பார்வையிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, April 26, 2020

வேலன்:-அசைவுப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள -Giphy

நம்மிடம் உள்ள அசைவுப்படங்களான அனிமேஷன் படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள பேஸ்புக் எனப்படும்முகநூல் மற்றும் வாட்ஸ்அப்பில் பதிவேற்றம் செய்திட இந்த இணையதளம் உதவுகின்றது. இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக்   செய்திடவும். உங்களுக்கான விண்டோ திறக்கும்.
 இதில் அப்லோடு என்பபதனை கிளிக் செய்து உங்களிடம்உள்ள அசைவுபடங்களை தேர்வு செய்திடவும்.
 உங்கள் படங்கள் தேர்வானதும உங்களுக்கு பச்சைநிற ஸ்லைட் நகர்வதை காணலாம்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கான படம் உங்களுக்கு தெரியும். 
இதன் வலதுபுறம் படத்தினை நீங்கள் பதிவிறக்கம் செய்திட படத்தினை காப்பி செய்திட எம்ப்ர்டட் காப்பி செய்திட பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் என நீங்கள் காப்பி செய்திட இதில் இணைப்பு கொடுத்துள்ளார்கள். தேவையானதை எடுத்து காப்பி செய்து நீங்கள் பயன்படுத்தலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Saturday, April 25, 2020

வேலன்:-அனிமேஷன்படங்களில் உள்ள படங்களை தனிதனி படங்களாக பிரிக்க -Split Animation-Ezgif.com

அசைவுப்படங்கள் எனப்படும் gif படங்களை பார்த்திருப்பீர்கள். பல படங்களின் மொத்த தொகுப்பே உங்களுக்கு ஒரே அசைப்படமாக தெரியும். நாம் பார்க்கும் அசைவுப்படங்களுக்குள் நிறைய படங்கள் இருக்கும். அவ்வாறு நாம் காணும் அசைவுப்படங்களில் உள்ள படங்களை பிரித்து பார்வையிட இந்த இணையதளம் பயன்படுகின்றது. இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட இணையபக்கம் திறக்கும்.


 அதில ;நம்கணினியில உள்ள அனிமேஷன் எனப்படும் அசைவுப்படத்தினையோ இணையத்தில் உள்ள அசைவுப்படத்தினையோ தேர்வு செய்திடவும்.நான் பறக்கும் கழுகுபடத்தினை தேர்வு செய்துள்ளேன்.
 இப்போது வரும் விண்டோவில் கீழே உள்ள ஸ்பிலிட் என்கின்ற ஆப்ஷனை தேர்வு செய்திடவும். சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் அசைவு படத்தில் -அனிமேஷன் படத்தில் எத்தனை ப்ரேம்கள் பயன்படுத்தினார்களோ அநத்தனை ப்ரேம்களும் உங்களுக்கு தெரியவரும்.
இதன் மூலம் நீங்கள் உங்களுக்கான அனிமேஷன்படங்களை தனிதனி படங்களாக பிரித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Friday, April 24, 2020

வேலன்:-வீடியோக்கள் பதிவிறக்கம் செய்திட மாற்றிட -Apowersoft video downloader.

இணையத்தில இருந்து வீடியோ-ஆடியோ பைல்களை பதிவிறக்கம் செய்திடவும்.வேறு பார்மெடடுக்கு மாறறிடவும. இணைய வீடியோக்களில் வேண்டியதை தேடவும். இணைய வீடியொக்கள் மொத்தத்தினையும் பார்வையிடவும். வீடியோ ஆடியோ பைல்களை ரெக்கார்ட் செய்திடவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும்.இதனன் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நமது வீடியோ பைலின்  யூஆர்எல முகவரியை தேர்வு செய்து இதில் பேஸ்ட் செய்திடவும்.
இதில உள்ள டிஸ்கர்ட் கிளிக ;செய்ததும் இணையத்தில உள்ள வீடீயோதளங்கள் உங்களுக்கு கிடைக்கும் தேவையானதை நீங்கள் தேர்வு செய்து விருப்பமான வீடியோவினை பதிவிறக்கம் செயயலாம்.
இதில ;உள்ள லைப்ரவரி கி ளிக் செய்திட உங்களுக்கு வரும் விண்டோவில் அதிகம்பேர் பார்வையிட்ட வீடியோக்கள். பாப்புலரான வீடியோக்கள்.உங்களுக்கு விருப்பமான வீடியோக்கள் மட்டுமல்லாது நீங்கள் விருப்பும் வீடியோவினையும் தேடிபெறலாம்.
அதுபோல நீங்கள் பயன்படுத்தும் வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை நாம் ரெக்கார்ட் செய்திடலாம்.ரெக்கார்ட் செய்ததை சேமித்துவைத்து தேவைப்படும் சமயம் பயன்படுத்தலாம்.
வீடியோ பைல்களை நீங்கள் விரும்பிய பார்மெட்டுக்குமாற்றிடலாம் இதில் கன்வர்ட் டேப் கொடுத்துள்ளார்கள் அதனை கிளிக் செய்ய விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் வீடியோ பைல்களை டிராக் அன்ட் டிராப் முறையிலோ பைல்களை தேர்வு செய்தோ இதில கொண்டவரலாம். இதன் ப்ரிவியூ பக்கத்தில் தெரியும்.ஒரே மென்பொருளில் 5 விதமான பணிகளை செய்யும் இந்த மென்பொருளை பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Thursday, April 23, 2020

வேலன்:-கணினி மற்றும் செல்போனில் பண்பலை பாடல்கள் கேட்டு மகிழ -Radio Garden.

கணினியிலோ - செல்போனிலோ  பாடல்கள் கேட்காதவர்கள் மிக குறைவு. இணைய இணைப்பிருந்தால் 24 மணிநேரமும் நாம் பாடல்கள் கேட்டு மகிழலாம். அதுபோல செல்போனில் பண்பலை பாடல்கள் கேட்க நாம் ஹாட்போனினை இணைப்பு கொடுக்கவேண்டும் ஆனால் இந்த இணையதளத்தில் நீங்கள் செல்போனில் தேர்வு செய்தால் போதுமானது. பாடல்கள் உங்களுக்கு கேட்கும்.இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.இந்த இணையதளம் சென்றதும் உங்களுக:கு உலக உருண்டை தேர்வாகும்.


பிறகு இந்தியாவினை தேர்வு செய்திடவும். பின்னர் தமிழ்நாட்டினை தேர்வு செய்திடவும்.
தமிழ்நாட்டில் நீங்கள் சென்னையை தேர்வு செய்ததும் உங்களுக்கு 40க்கும் மேற்பட்ட பண்பலை நிலையங்கள் தெரியவரும்.
வரும் பண்பலை நிலையங்களில் இருந்து நீங்கள் தேவையான பண்பலை நிலையத்தினை தேர்வு செய்ய உங்களுக்கு விருப்பமான பாடல்கள் ஒலிப்பரப்பாகும்.
பழைய .புதிய.பாடல்கள். இளையராஜா.ஏ.ஆர் ரகுமான் இசையமைத்த பாடல்கள்.எஸ்பிபி.ஜேசுதாஸ் பாடிய பாடல்கள். பக்தி பாடல்கள் என உங்களுக்கு விருப்பமான பாடலை தேர்வு செய்து கேட்டு மகிழலாம். இலங்கை போன்ற பக்கத்து நாட்டின் பண்பலை பாடல்களையும் நீங்கள் கேட்டு மகிழலாம்.கணினி மற்றும் செல்போனில் பண்பலை பாடல்கள் கேட்க சிறந்த இணையதளம் இதுவாகும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Wednesday, April 22, 2020

வேலன்:-அதிகமான பைல்களை கிளிப்:போர்டில் காப்பி செய்திட -Clip Angel.

நமது கணினியில் புகைப்படங்கள் .டாக்குமெண்டுகள் காப்பி செய்து மற்றோர் இடத்தில் பேஸ்ட் செய்வோம்.அவ்வாறு காப்பி செய்யப்படும் பைல்கள். புகைப்படங்கள் கிளிப்போர்டில் சேமிப்பாகும். ஆனால் அவ்வாறு சேமிப்பாகும் பைல்கள் ஒன்றுதான் சேவாகும். மற்றும் ஒரு பைலினை நீங்கள் காப்பி செய்தால் முன்னர் காப்பி செய்த பைல் மறைந்துவிடும். ஆனால்இந்த மென்பொருளில் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் காப்பி செய்திடலாம். அவ்வாறு காப்பி செய்யப்படும் ;பைல்கள் இந்த மென்பொருளில் சேமிப்பாக இருக்கும். தேவைப்படுவதை தேர்வு செய்து நாம்பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் இணையதளம் செல்ல  இங்கு கிளிக் செய்யவும்.  இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் ;செய்ததும்உங்களுக்கு விண்டோ ஓப்பன்ஆகும்.
 நீங்கள் காப்பி செய்யும் பைல்கள் இங்குள்ள விண்டோவில ஒவ்வொன்றாக சேமிப்பாகும் நீங்கள் காப்பி செய்யும் பைல்களில் இதில் தேதி மற்றும் நேரமும் உங்களுக்கு தெரியவரும்.
இரண்டுவிதமான டெக்ஸ்ட் பைல்களை நாம் ஒப்பிடு செய்துபார்க்கலாம். மேலும் நமக்கு விருப்பமான டெக்ஸ்ட் பைலோ - புகைப்படமோ தேர்வு: செய்து தேவைப்படும் இடத்தில் பேஸ்ட்செய்துகொள்ளலாம். அடிக்கடி பயன்படுத்தும் டெக்ஸ்ட் மற்றும் புகைப்படத்தினை புக்மார்க் செய்துகொண்டு தேவைப்படும் இடத்தில் பேஸ்ட் செய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Tuesday, April 21, 2020

வேலன்:-ஒளிப்படங்களை மற்றவர்களுடன ;பகிர்நதுகொள்ள:-Amazing Slider.

நவீன  யுகத்தில் இப்போது ஒளிப்படங்கள் நிறைய எடுக்கின்றோம். அதனை எஃபெக்ட்டுடன் சேர்த்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இந்த முகவரிக்கு செல்லவும். இதனை நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ திறக்கும்.
இதில் 5 வகையான படிகள் கொடுத்துள்ளார்கள்.
நம்மிடம் உள்ள  ஒளிப்படங்களை தேர்வு செய்யுங்கள். ஃபோல்டரில் உள்ள மொத்த ஒளிப்படங்களையும் தேர்வு செய்திடலாம்.
ஒளிப்படங்களை தேர்வு செய்தபின்னர் உங்களுக்கான விண்டோ திறக்கும்.அதில் நீங்கள் தேர்வு செய்த ஒளிப்படங்களை காணலாம்.
ஒளிப்படங்கள்  ஒன்றிலிருந்து மற்ற படத்துக்கு மாறும் நிலையில் வேண்டிய ஃஎபெக்ட்கள் கொண்டுவரலாம். உங்களுக்கான ஃஎபெக்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமானதை தேர்வு செய்ய அதன் எதிரில் உள்ள ரேடியோ  பட்டனை கிளிக் செய்திட உங்களுக்கான ஃஎபெக்ட் தேர்வாகும்.
 படங்காளுக்கான பின்புல படத்தினை நீங்கள் தேர்வு செய்திட கீழே உள்ள விண்டோவில் பா ருங்கள்.
 நீங்கள் தேர்வு செய்திடும் படங்கள் உங்களுக்கு முன்னோட்டமாக பக்கத்தில் உள்ள விண்டோவில் தெரியவரும்.
ஒளிப்படங்களில் எழுத்துரு சேர்க்கவும் யூடியூப் வீடியோக்களை சேர்க்கவும் இதில் வசதி செய்யப்பட:டுள்ளது.எல்லா பணிகளும் முடிந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோவில் உங்களுடைய மொத்த ஒளிப்படங்களும் பணி முடிந்த ஒளிப்பட விவரங்களும் தெரியவரும்.

  
ஒளிப்படங்களின் முன்னோட்டத்தினை நாம் காணலாம். 
இறுதியாக நீங்கள் ஒளிப்படங்களின் தொகுப்பினை உங்கள் கணினி ஹார்ட்டிஸ்கில் சேமிக்கலாம்.
இதில் உள்ள செட்டிங்ஸ ;படடனை கிளிக் செயதிடவும். மேலும் இதில் உள்ள பப்ளஷ் பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கான யுஆர்எல் முகவரிகிடைக்கும். அதனை மற்றவர்களுக்கு அனுப்பி உங்களுடைய ஒளிப்படங்களை மற்றவர்களுடன் பார்த்து மகிழலாம். பயன்படுத்திப்பர்ருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.



Monday, April 20, 2020

வேலன்:- போலியான பைல்களை கண்டுபிடிக்க -Duplicate File Remover.

கணினி பயன்படுத்துகையில் சிலசமயம் புகைப்படங்கள்.வீடியோக்கள்.டாக்குமெண்ட்கள்.பைல்கள் என தெரியாமல் இரண்டு மூன்று முறை காப்பி செய்திருப்போம்.அவையாவும் சேர்ந்து கணினியின் ஹார்ட்டிஸ்க்கின் சேமிப்பு இடத்தினை அடைத்துக்கொள்ளும். அவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட பைல்களை நீக்கிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை இணையதளம் செல்ல  இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.


இதில் நீங்கள் நீக்கவேண்டிய பைல்களின் வகைகளை தேர்வு செய்திடவும்.பிறகு இதில்உள்ள அடுத்து பட்டனை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஓப்பன்ஆகும்.
இதில் உங்கள் கணினியில் உள்ள அனைத்து டிரைவ்களும் காண்பிக்கும் இதில் எந்த எந்த டிரைவ்களில் உங்களுக்கு போலியான பைல்கள் உள்ளன என நீங்கள்எண்ணுகின்றீர்களோ அந்த டிரைவ்களைதேர்வு செயதிடுங்கள்.
உங்கள் டிரைவ் ஸ்கேன் செய்கையில் தூப்பாக்கி ஏந்திய இந்த பொம்மை நகர்ந்துசெல்வதை காண்பீர்கள்.
உங்கள் கணினி ஸ்கேன் செய்யப்படுகின்றது.
போலியான பைல்களின் வகைகள் உங்களுக்கு தெரியவரும்.
போலியான -உங்களுக்கு தேவையில்லாத பைல்க்ளை நீங்கள் நீக்கிவிடலாம்.
நீக்கப்பட்ட விவரங்களை நீங்கள் ரிப்போர்ட்டாக சேமிததும் வைக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.