Thursday, January 29, 2009

ஆங்கில எழுத்தின் சக்திகள்-பாகம்-1.

வேலன்:- ஆங்கில எழுத்தின் சக்திகள்-பாகம்-1.


எண்ணும் எழுத்தும் எனது இரு கண்கள்

என குறிப்பிடுவர்.ஆங்கில எழுத்துக்கள்

26 க்கும் ஒவ்வொரு ஒலிஅலைகளும்,

வர்ணங்களும், சக்திகளும் உண்டு. 

அந்த ஒலி அலைகளும் , வர்ணங்களும், 

சக்திகளும் நமது பெயரில் என்ன என்ன

மாற்றங்களை உண்டாக்குகின்றது என

பார்ப்போம்.  நாம் இப்போது

நமது பெயரின் முதல் எழுத்தின் தலை

எழுத்து எவ்வாறு உள்ளது என பார்ப்போம்.

ஆங்கில எழுத்துக்களின் பலன்கள் வித்திய

சமான பெயர்கொண்ட வெளிமாநிலத்தவர்கள்,

வெளிநாட்டவர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

ஆங்கில எழுத்தில் உள்ள பவர் (சக்தி) அறியலாம்.


நமது பெயரின் முதல் எழுத்தை பொறுத்தே

நமது தலையெழுத்தும் அமையும். முதல்

எழுத்தின் குணங்கள் நமது குணங்களுடன்

எந்த அளவு ஒன்றுசேர்கிறது என பார்ப்போம்.

முதலில் ஆங்கில எழுத்தான A - விலிருந்து 

ஆரம்பிப்போம்.


A

A-  இதுவே மூல சக்தியாகும். இந்த எழுத்துக்கு

அற்புதமான சக்திகள் உண்டு. மிக மிக உயர்ந்த

நிலைக்கு அழைத்துச்செல்லும். கீழ் நிலையை

அடையாமல் தடுத்து நிறுத்தும். ஒன்று சேர்க்கின்ற

சுபாவமே தவிர அழிக்கின்ற குணமில்லை.

பெயரின் முதல் எழுத்தாக வந்தால் பெயருடையவர்

சிறந்த ரோஷக்காரர். தாராளமான குணமிருக்கும்.

புது புது உத்திகள் மனதில் உதித்துக்கொண்டு 

இருக்கும். நல்ல நிர்வாக திறன் இருக்கும்.

மேலான நிலையில் இருந்தாலும் , கீழான 

நிலையில் இருந்தாலும் இந்த A எழுத்தை 

பெயராக உடையவர் அபரிதமான மூளை 

உள்ளவாரக இருப்பார். இந்த எழுத்தின் 

நிறம் லேசான மஞ்சள் நிறமாகும். 

இந்த பெயரை முதல் எழுத்தாக உள்ள 

பிரபலங்கள்:-

அலேக்சாண்டர், அசோகர், அக்பர்,

(வரலாற்று மன்னர்கள்) அன்னை

தெரசா,மற்றும் ....................(விடுபட்ட

இடத்தில் உங்கள் பெயர் முதல் எழுத்து

A -வில் ஆரம்பித்தால் நிரப்பிக்கொள்ளுங்

கள்.)

அடுத்ததாக B.

B

B-  நன்மைகளின் இருப்பிடம். வெளியிடு

வதை காட்டிலும் அதிகமான எண்ணங்களும்

உணர்ச்சிகளும் உள்ளே இருக்கும். ஆனால்

சில நேரங்களில் மனதில் உள்ளதை வெளியிட

முடியாமல் தவிப்பார்கள். கடவுள் பக்தியில்

ஆழ்ந்த ஈடுபாடு இருக்கும். நேர்மையான 

முறையில் எதையும் சாதிக்க விரும்புவார்கள்.

சமாதன பிரியர்கள். சக்திகளையும் , பொருள்

களையும் வீணாக்க மாட்டார்கள். தமது 

வாழ்க்கையை ந்னறாக அமைத்துக்கொள்

வார்கள். மேன்மை குணங்கள் அமையாவிட்டால்

சிறந்த சண்டைக்காரராக ஆவார்கள். 

இந்த பெயரில் உள்ள பிரபலங்கள்:-

பாபர், பாரதி, பாரதிதாசன், பால சுப்ரமணியம்.

(பாடகர்). இந்த எழுத்துக்கான வண்ணம் 

ஆழ்ந்த ஊதா நிறம்.

அடுத்ததாக C.

C
c- படைக்கும் சக்தியையும் , ஆளக்கூடிய 

பலத்தையும குறிக்கும். வன்மையையும்

ஆண்மையையும் குறிக்கிறது. எந்த தொழில்

செய்தாலும் அதில் உயர்வையும், அபரிதமான

சாதனைகளையும் மேதாவிதனமு்ம் அமையும்.

துறு துறுவென இருக்கும் இவர்கள் பிறர் 

சோம்பேறிகளாக இருப்பதை பார்த்தால் 

பொறுக்கமாட்டார்கள். கைகளினால்- உடலால்

வேலை செய்து பிழைப்பதை வெறுப்பார்கள்.

முன்னேற அதிக ஆர்வம் இருக்கும். மேன்மை

யான இலட்சியத்தை அமைத்துக்கொண்டு

வாழ்வது அவசியம். இல்லாவிடில் மற்றவர்

களால் இவர்கள் கொடுமைகாரர்கள் என 

சொல்லப்படுவார்கள். கலைகளிலும், சாஸ்திர

சம்பிராதத்திலும் தீவிர ஆர்வம் இருக்கும்.

எந்த காரியத்திலும் முடிவை அறிய துடிப்பதில்

ஆர்வமிருக்கும். இந்த எழுத்தின் உகந்த நிறம்

சிகப்பு ,வயலட் மற்றும் ஆரஞ்சு.

இந்த பெயரின் பிரபலங்கள்:-

சாணக்கியர்,சார்லி சாப்ளின், சார்லஸ்.


பதிவு நீளம் காரணமாக இத்துடன் முடித்துக்

கொள்கின்றேன். அடுத்த எழுத்துக்கள் 

தொடர்ந்து வரும். இதில் வரும் நல்ல

விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.


வலைப் பூவில் உதிரிப் பூ
உங்களிடம் உள்ள அனைத்து சாப்ட்வேர் சி.டி.க்களுக்கும் ஒரு டுப்ளிகேட் சி.டி. எடுத்து வைக்கவும். ஒரிஜினல் பழுதானாலும்,நண்பர்கள் வசம் தந்து திரும்பிவராமல் சென்றாலும் டுப்ளிகேட் சி.டி.நமக்கு சமயத்தில் பயன்படும்.

7 comments:

  1. என்ன திடீரென Topic change..?

    Any have quite interesting..

    Keep it up..

    ReplyDelete
  2. என்ன திடீரென Topic change..?

    Any have quite interesting..

    Keep it up..//


    கற்றது கை மண் அளவு - கல்லாதது உலகளவு.களவும் கற்று மற என சொல்லுவார்கள். நமக்கு தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். மற்றவர்கள் அதனால் பயனடைந்தால் மகிழ்ச்சியே..

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. Another Subbiah Sir is Coming.. hmmm

    ReplyDelete
  4. Another Subbiah Sir is Coming.. hmmm//

    நண்பரே ..என்னை வம்பில் மாட்டிவிட்டுவிடாதீர்கள். அவர் கடல். நான் சிறு மழை துளி அவ்வளவுதான்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  5. அவர் கடல். நான் சிறு மழை துளி அவ்வளவுதான்.


    Funny..

    ReplyDelete
  6. இதன் அடுத்தடுத்த பாகங்களை வெளியிடுங்கள் அன்பரே!

    தத்துவம் அருமை!
    //பிறக்கும்போது கொண்டுவந்ததில்லை,இறக்கும்போதும் கொண்டு போவபோதில்லை. இடையில் சேர்க்கும் செல்வம் நீ தந்ததென்று ஏன் புரிவதில்லை-இறைவனே?

    ReplyDelete