Wednesday, January 28, 2009

வேலன்-அடோப் ரீடர் தானே படித்து காட்ட


வேலன்:-அடோப் ரீடர் தானே படித்து காட்ட


நாம் பெரும்பாலானவர்கள் பி.டி.எப். பைல்களை

அடோப் ரீடர் மூலம் திறந்து பார்ப்போம். ஆனால் 

அந்த அடோப் ரீடரிலேயே படிக்கும் வசதி இருப்பது

பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. நம்மிடம்

உள்ள கட்டுரைகள், பாடங்கள், டாக்குமென்டுகள் என

பி.டி.எப். பைல்களாக எது எது உள்ளனவோ அது

அனைத்தையும் அடோப் ரீடர் படித்துக்காட்டும்.

பள்ளி , கல்லூரி படிக்கும் மாணவர்கள் இந்த

வசதியை பயன் படுத்துவது மூலம் பாடங்கள் 

எளிதில் மனப்பாடம் ஆகும்.தூய தமிழில் பேசுவது

போல் தூய ஆங்கிலத்தில் அடோப் ரீடர் பேசுவதை

நாம் கேட்கலாம். இனிஇந்த வசதியை எப்படி

பயன்படுத்துவது என பார்க்கலாம்.

முதலில் நீங்கள் படித்துக்காட்டவேண்டிய

பைலை ஓப்பன் செய்துக்கொள்ளவும். பிறகு

அதில் view எனும் காலத்தை தேர்வு செய்யவும்.

உங்களுக்கு கீழ்கண்ட வாறு ஒரு காலம் 

தோன்றும்.

அந்த காலத்தில் கடைசியில் உள்ள Read Out Loud

ஐ செலக்ட் செய்யவும். பின்னர் வரும் உப காலத்தில்

Activate Read Out Loud  அல்லது Shift+Ctrl+Y அழுத்தவும்.

இப்போழுது உங்களுக்கு கீழ்கண்ட வாறு காலம் 

மீண்டும் திறக்கும்.



அதில் நீங்கள் தேர்வு செய்த பக்கம் மட்டும் படித்துக்

காட்ட வேண்டுமா அல்லது மொத்த பக்கங்களையும்

படித்து காட்ட வேண்டுமா என உங்கள் விருப்பத்திற்கு

ஏற்ற வாறு தேர்வு செய்யுங்கள்.



தேர்வு செய்து முடித்ததும் அடோப்ரீடர் உங்களுக்கு 

நீங்கள் தேர்வு செய்த பக்கத்தை படித்துக்காட்ட

ஆரம்பிக்கும். படிப்பதை தற்காலிகமாகநிறுத்தவோ

 அல்லது நிறந்தராமாக நிறுத்தவோ முடியும்.


அடோப் ரீடர் இருந்தும் அதில் இந்த வசதி பற்றி

தெரியாதவர்களுக்காக பதிவிட்டுள்ளேன்.

ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

வலைப் பூவில் உதிரிப் பூ
ப்பவும் சி.டி.யை துடைக்கும் சமயம் நடுவிலிருந்து வெளிவரை பிறகு வெளிப்புறமஇருந்து உள்புறம் வரை துடைக்கவும். வட்ட வட்டமாக
வட்டப்பாதையில் சி.டி.யை துடைக்க கூடாது.

12 comments:

  1. //வாரம் ஒரு முறை உங்கள் நிலத்தின் உரிமை நகல் பார்ப்பது உங்களுக்கு நல்லது.//

    repeattu

    senthil, bahrain

    ReplyDelete
  2. //வாரம் ஒரு முறை உங்கள் நிலத்தின் உரிமை நகல் பார்ப்பது உங்களுக்கு நல்லது.//

    repeattu//

    தங்கள் கருத்துக்கு நன்றி செந்தில் அவர்களே.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. Very useful info. That too at exam times will be much useful for students.

    I am recommending your blog to all my friends.

    Thanx Velan.

    ReplyDelete
  4. Very useful info. That too at exam times will be much useful for students.

    I am recommending your blog to all my friends.

    Thanx Velan.//

    தங்கள் உதவிக்கு நன்றி வண்ணத்துப்பூச்சியாரே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  5. Dear Velan,

    Can I have your e mail ID plz..??

    ReplyDelete
  6. Dear Velan,

    Can I have your e mail ID plz..??//
    எனது இ-மெயில் முகவரி:-

    velanmeera@gmail.com

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. Vow.



    //வட்ட வட்டமாக

    வட்டப்பாதையில் சி.டி.யை துடைக்க கூடாது.

    ReplyDelete
  8. Vow.



    //வட்ட வட்டமாக

    வட்டப்பாதையில் சி.டி.யை துடைக்க கூடாது.//
    கருத்துக்கு நன்றி நண்பரே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  9. hallo velan vannakkam.nan akila austrliyavil ullan.ungal blog thidranthu parthu varukiran.6.2.09 antru ezthiya ringtone exit.start.use pantrathu nan try panninan.browse pannina.song o.k akalai.nan enna seeanum.sollunga.bya.akila.brisbane.

    ReplyDelete
  10. Great Info ( Adobe reader- Reads itself)

    But it will read only few languages.
    Please tell me anything for tamil/

    Senthil, Bahrain

    ReplyDelete
  11. "அடோப் ரீடர் படிக்க பக்கத்தை திறக்கும் பொழுது There was an error processing a page. There was a problem reading this document (135) இந்த error வருகிறது இந்த error வராமலிருக்க என்ன செய்வது என்று கூறவும்

    ReplyDelete
  12. "அடோப் ரீடர் படிக்க பக்கத்தை திறக்கும் பொழுது There was an error processing a page. There was a problem reading this document (135) இந்த error வருகிறது.file இருப்பதை படிக்க முடியவில்லை. இந்த error வராமலிருக்க என்ன செய்வது என்று கூறவும்.

    ReplyDelete