Sunday, January 11, 2009

32ஆவது புத்தக கண்காட்சி-4ஆம் நாள்.

32 ஆவது புத்தகக் கண்காட்சி - 4ஆம் நாள்.







வருடம் வருடம் தவறாமல் புத்தக

 கண்காட்சி சென்றுவருகின்றேன்.

( காயிதே மில்லத் கல் லூரியில் புத்தகக்

கண்காட்சி போடும் காலத்தில் இருந்தே).

 அப்பொழுது எல்லாம்இரண்டு ரூபாய்

 நுழைவுக்கட்டணம் வசூலித்தார்கள்.

 இப்போது அதை ஐந்து ரூபாய்

 ஆக உயர்த்திவிட்டார்கள்.ஞாயிறுக்கிழமை

 என்பதால் காலை முதலே கூட்டம் அதிகம்

வர ஆரம்பித்து விட்டது. காலை 11.30

 மணிக்கே முதல் மூன்றுடிக்கட்

 கவுண்டரில் டிக்கட் விற்றுவிட்டது

 என்று சொன்னார்கள்.ஒவ்வொரு

 கவுண்டராக சென்று கடைசி கவுண்டரில்

 டிக்கட்வாங்கி சென்றேன். மொத்தம்

 ஒன்பது வரிசைகள். வரிசையின் 

இரு புறமும் கடைகள் . கடைக்கு

 இருபுறமும் வாசல்கள். முதலில்

வரிசையாக பார்த்துக்கொண்டு

 சென்று மீண்டும் வரிசையாக 

பார்த்துக்கொண்டு வரும்சமயம்

 நமக்கு குழப்பமே உருவாகின்றது.

ஒரு ஸ்டாலுக்கு சென்று புத்தகம்

 பார்த்து அதை வாங்கிக்கொண்டு

அடுத்த ஸ்டாலுக்கு செல்லும் 

சமயம் இடப்பக்கம் செல்வதா - வடப்

பக்கம் செல்வதா என குழப்பம்

 வருகின்றது. அதுபோல் ஸ்டாலின்

வரிசை எண்களும் வரிசையாக

 வரவி்ல்லை.(சென்னையில் வீட்டு

நம்பரை கண்டுபிடித்து செல்வது

போல் உள்ளது. சென்னை மக்களுக்கு

இது பழகிய விஷயமாக இருக்கலாம்.

 ஆனால் புதிதாக வருபவர்கள்

நிச்சயம் குழம்பிபோய் விடுவார்கள். )

 பார்க்கும் ஸ்டால்கள் பார்த்தது 

போலும் உள்ளது பார்க்காதது போலும்

 உள்ளது.  வழக்கமான ஸ்டால்களில்

 புத்தகம் வாங்குபவர்களுக்கு 10%  தள்ளுபடி உண்டு.

விகடன் பதிப்பகத்தில் சிறப்பு வாசகர்களாக 

இருந்தால் 15% தள்ளுபடி உண்டு.. ஆனால் 

வழக்கமான தள்ளுபடியுடன் சிறப்பு தள்ளுபடி

சேர்த்து (10%+15% =25%) கேட்டால் தள்ளு - படி

நம்மை செய்து விடுவார்கள். அதுபோல் 

கீதா பதிப்பகத்தில் புத்தகங்கள் மலிவாக

உள்ளது. அதில் பகவத்கீதை தமிழில்

விளக்க உரை 1024 பக்கங்கள் பைன்டிங்

செய்து ரூ.90.00க்கு விற்கின்றார்கள்.

முதியவர்களுக்கு பரிசளிக்க நல்ல 

புத்தகம். அடுத்து தண்ணீர் வசதி பற்றி

சொல்ல வேண்டும். மொத்தம் 5 வாசல்

கள். பத்து வாட்டர் கேன்கள். ஆனால்

அனைத்து கேன்களிலும் தண்ணீர் 

இல்லாமல் இருந்தது. ஆனால் சீல் 

பிரிக்காமல் நிறைய கேன் இருந்தது.

பழைய கேன் எடுத்து புதிய கேன் ரிபிள்

செய்ய ஆள் இல்லை யென நினைக்கின்றேன்.

அதுபோல் கேன்டின் பற்றியும் சொல்ல

வேண்டும். 20 ரூபாய்க்கு 2 இன்ச்சில் 2 தயிர்

வடை என்கிற பேரில் மோர்வடை தருகிறார்

கள். வாங்கியவர்கள் எல்லாம் முகம் சுளித்த

படி சாப்பிட்டு சென்றார்கள்.புத்தக 

அரங்கத்துக்கு நுழையும் முன்னரே ரத்த

தான நோட்டீஸ் தந்தார்கள். 10.01.2009 

அன்று மட்டும் 83 பேர் ரத்ததானம் 

செய்தார்களாம் .(ரத்ததானம் செய்தவர்களுக்கு

வாழ்த்துக்கள்). அரங்கத்தில் கனிசமான 

அளவு குழந்தைகளையும் பார்க்க முடிந்தது.

சிறு வயதிலேயே புத்தகம் படிக்கும் பழக்கம்

கொண்டுவருவது நல்ல விஷயம் தான்.

மூன்றுமணிநேரம் அரங்கை சுற்றியபின்

கால்கள் வலியெடுக்கவே வாசல்நோக்கி

விரைந்தேன். அடுத்த புத்தக கண்காட்சி

யில் மீண்டும் பார்க்கலாம்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

No comments:

Post a Comment