Monday, March 15, 2010

வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க

நாம் கஷ்டப்பட்டு போட்டோக்கள் எடுத்து பதிவில் பதிவிடுவோம். நோகாமல் நோன்பு கும்பிடுபவர்கள் நமது புகைப்படங்களையே எடுத்து வேறு பதிவாக பதிவிட்டுவிடுவார்கள். அவ்வாறு அவர்கள் பதிவிடாமல இருக்க நமது புகைப்டங்களில் நமது பெயர் - அல்லது படங்களை வாட்டர் மார்க்காக வைத்து வெளியிடலாம்.சமையல் மற்றும் கோலங்கள் பதிவிடும் சகோதரிகள் -அனைவருக்கும இது பயன்படும் என எண்ணுகின்றேன்.இந்த சாப்ட்வேர் சின்னதுதான்.இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கம் செய்தும உங்கள் கணிணியில் நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதன் இடதுபுறம் பார்த்தீர்களேயானால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஇருக்கும்.
அதில் முதலில் உள்ள Source கட்டத்தில நீங்கள் வாட்டர் மார்க் செய்ய வேண்டிய புகைப்படத்தை உங்கள் கணிணியில் இருந்து தேர்வு செய்யுங்கள்.அதைப்போல நீங்கள் வாட்டர்மார்க் செய்த படத்தை சேமிக்க விரும்பும் இடத்தை யும் தேர்வு செய்யுங்கள்.உங்கள் புகைப்படம் எந்த பார்மட்டில் வேண்டுமோ அந்த பார்மட்டையும் தரத்தையும் நிர்ணயம் செய்துகொள்ளுங்கள். இப்போது அதற்கு கீழே கவனியுங்கள்.உங்களுக்கு கீழ்கணட் விண்:டோ இருக்கும்.
Resize image -ல் நீங்கள் படத்தின் அளவுகளை மாற்றவேண்டியிருந்தால் மாற்றி கொள்ளுங்கள்.அதன் கீழே பாருங்கள்.Transparancy-ல் உங்கள் பெயரோ - புகைப்படமோ எந்த சதவீதத்தில் வரவேண்டுமோ அதை வைத்துக்கொள்ளுங்கள். சதவீதத்தை மாற்றுவதன் மூலம் புகைப்படத்தில் வாட்டர் மார்க்குகள் குறைவது - அதிகமாவதை காணலாம். அடுத்து அதன் கீழே பாருங்கள். வாட்டர் மார்க லெகேஷன். இதில உங்கள் பெயரோ - புகைப்படமோ  எந்த இடத்தில் வரவேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்துகொள்ளுஙகள். படத்தில் நடுவிலா - ஒரத்திலா - மேல்புறமா என முடிவுசெய்து அதில் உள்ள பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்போது வலதுபுறம் பாருங்கள். கீழே உள்ள விண்டோ உங்களுக்கு தெரியும்.
இதில் இரண்டு வகைகள் உள்ளது. நீங்கள் பெயர் கொண்டுவரப்போகின்றீர்களா - அல்லது எழுத்தை கொண்டுவரப்போகின்றீர்களா என:  முடிவு செய்து கொள்ளுயுஙகள்.பெயரை புகைப்படத்தில் கொண்டுவருவதானால் Use Test என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள். அடுத்து உங்கள் பெயரை தட்டச்சு செய்து கொள்ளுங்கள். கீழே உங்களுக்கு பாண்ட் வகைகளும் - அளவுகளும்,எழுத்து வரும் ஆங்கில்களும்,எழுத்தின் நிறமும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.இதன் கீழே உள்ள பிரிவியு மூலம் உங்கள் எழுத்துக்களை சரிசெய்து கொள்ளலாம்.அதைப்போலவே நமது புகைப்படம் வாட்டர் மார்க்காக வரவேண்டுமானால் புகைப்படத்தை தேர்வு செய்துகொள்ளுஙகள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது கீழே உள்ள ஸ்டார்ட் பட்டனை அழுத்துங்கள். உங்களுடைய படம் ஒவ்வொன்றாக மாறுவதை ப்ரிவியுவில் காணுங்கள். மொத்தம் முடிந்ததும் நீங்கள் சேமித்துவைத்துள்ள இடத்தில் சென்று பார்த்தீர்களே யானால் உங்கள் படங்கள் மாறியிருப்பதை காணலாம். என்ன சுலபமாக இருக்கின்றதா..? சாம்பிளுக்கு சில படங்கள் கீழே கொடுத்துள்ளேன்.
Lower Right -ல் சிகப்பு நிற பெயர் போட்டு படம் கீழே:-

Upper Right -மஞ்சள் நிற பெயர் போட்ட படம் கீழே:-
மற்றும் ஒரு படம்கீழே:-
வெள்ளை நிறத்தில் பெயர் போட்டு வந்த படம் கீழே:-
மற்றும் ஒரு படம் கீழே:-
புகைப்படத்தை வாட்டர்மார்க்காக கொண்டுவந்த படம் கீழே:-
மற்றும் ஒரு படம் கீழே:-
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.பதிவினை பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
 நன்றி .
 வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
அப்பாடா...இன்னிக்கு யாரும் இங்கு இல்லை...ஜாலியா ஒரு குளியல் போட்டுவிட வேண்டியதுதான்.......
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

35 comments:

  1. வழக்கம் போல பிரமாதம் மாப்ள!
    நிறைய பேருக்கு பயன்படும்.
    Thanks 4 sharing!

    ReplyDelete
  2. நல்ல பதிவு சகோ!! நான் பிகாசாவில் பெயர் போட்டுடுவேன்.

    ReplyDelete
  3. தலைவரே, நீங்க சொல்வது சரிதான் ஆனால் படத்தின் குவாலிடியையே (அழகையே ) கெடுத்து விடுமே !!!.

    ReplyDelete
  4. நன்றி வேலன் எனக்கு தேவையான பதிவு.. பகிர்வுக்கு நன்றி...;)

    ReplyDelete
  5. பயனுள்ள பதிவு. நிச்சயம் பயன்படும். நன்றி

    ReplyDelete
  6. அட! போங்க வேலன். ஏன் எங்க பொளப்புல கந்தகத்த தூவுறீங்க ?!

    ReplyDelete
  7. கக்கு - மாணிக்கம் கூறியது...
    வழக்கம் போல பிரமாதம் மாப்ள!
    நிறைய பேருக்கு பயன்படும்.
    Thanks 4 sharing!//

    நன்றி மாம்ஸ்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  8. Chitra கூறியது...
    very nice photos! :-)//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  9. Mrs.Menagasathia கூறியது...
    நல்ல பதிவு சகோ!! நான் பிகாசாவில் பெயர் போட்டுடுவேன்//

    நன்றி சகோதரி...இந்த சாப்ட்வேரையும் உபயோகித்துப்பாரு்ங்களேன்.வருகைக்கும்கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  10. Dr.Rudhran கூறியது...
    thank you, once again.//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டாக்டர்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  11. ஜெய்லானி கூறியது...
    தலைவரே, நீங்க சொல்வது சரிதான் ஆனால் படத்தின் குவாலிடியையே (அழகையே ) கெடுத்து விடுமே !!!//

    ஆம்...ஆனால் என்ன செய்வது..வேண்டுமானால் வாட்டர்மார்க் மெல்லியதாக தெரியும் படி செய்யலாம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேல்ன.

    ReplyDelete
  12. Bavan கூறியது...
    நன்றி வேலன் எனக்கு தேவையான பதிவு.. பகிர்வுக்கு நன்றி...;)//

    நன்றி பவன் அவர்களே..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  13. Dr.எம்.கே.முருகானந்தன் கூறியது...
    பயனுள்ள பதிவு. நிச்சயம் பயன்படும். நன்றி//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டாக்டர்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  14. பொற்கோ கூறியது...
    அட! போங்க வேலன். ஏன் எங்க பொளப்புல கந்தகத்த தூவுறீங்க ?//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பொற்கோ..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  15. வலை பதிவு நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு நன்றியுடன் வாசகன்

    ReplyDelete
  16. அருமையான பயனுள்ள பதிவு வேலன் சார் , உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. நல்ல பதிவு வேலன் சார்.

    மேனகா பிகாசாவில் போட்டாலும் திருடுபவர்கள் திருடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்

    ReplyDelete
  18. தெளிவான விளக்த்துடன்கூடிய மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  19. ஏலே மக்கா யாருனு தெரியுதால ???????????????


    மீண்டும் வருவான் RDX ANNIYAN !

    ReplyDelete
  20. நல்ல பகிர்வு .
    மீண்டும் வருவான் பனித்துளி !

    ReplyDelete
  21. நமது சொந்த புகைப்படங்களுக்கு இது சரியானது .ஆனா நண்பரே நீங்கள் கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்த கதைமாதிரி கூகுளில் எடுத்த படத்துக்கெல்லாம் தன் பெயரை போட்டு நான் திருடன் இல்ல மற்றவன் தான் திருடன் என்பது சரியில்லை .ஆனாலும் நீங்கள் ப்ளாக் கிங் தான் சாமி .நன்றி நண்பரே .கண்டிப்பாக இந்த கருத்தை வெளியிடுவேர்கள் என எண்ணுகிறேன்

    ReplyDelete
  22. karthik கூறியது...
    வலை பதிவு நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு நன்றியுடன் வாசகன்//

    நன்றி கார்த்திக்...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  23. சசிகுமார் கூறியது...
    அருமையான பயனுள்ள பதிவு வேலன் சார் , உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

    நன்றி சசிகுமார்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  24. Jaleela கூறியது...
    நல்ல பதிவு வேலன் சார்.

    மேனகா பிகாசாவில் போட்டாலும் திருடுபவர்கள் திருடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்//

    நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  25. naganagamani கூறியது...
    Thanks//

    நன்றி நாகநகமணி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  26. சசிகுமார் கூறியது...
    உங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்
    http://vandhemadharam.blogspot.com/2010/03/blog-post_9950.html//

    வந்தேன். பதிவையும் எழுதிவிட்டேன் நண்பரே..பதிவெழுத வாய்ப்பளித்தமைக்கு நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  27. ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...
    தெளிவான விளக்த்துடன்கூடிய மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் !//

    நன்றி பனித்துளி சங்கர் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  28. ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...
    ஏலே மக்கா யாருனு தெரியுதால ???????????????


    மீண்டும் வருவான் RDX ANNIYAN !//

    நிச்சயமாக தெரியவில்லை..வாழ்கவளமுடன்,வேலன்.

    ReplyDelete
  29. ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...
    நல்ல பகிர்வு .
    மீண்டும் வருவான் பனித்துளி !//

    வருகையை எதிர்பார்க்கின்றேன் பனித்துளி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  30. PalaniWorld கூறியது...
    நமது சொந்த புகைப்படங்களுக்கு இது சரியானது .ஆனா நண்பரே நீங்கள் கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்த கதைமாதிரி கூகுளில் எடுத்த படத்துக்கெல்லாம் தன் பெயரை போட்டு நான் திருடன் இல்ல மற்றவன் தான் திருடன் என்பது சரியில்லை .ஆனாலும் நீங்கள் ப்ளாக் கிங் தான் சாமி .நன்றி நண்பரே .கண்டிப்பாக இந்த கருத்தை வெளியிடுவேர்கள் என எண்ணுகிறேன்//
    இந்த குறிப்பு சமையல் பதிவு எழுதும் சகோதரிகளுக்காக பதிவிட்டது.மேலும் நான் எவ்வளவு சொந்த படங்களையே போடுவது...ஆனால் நீங்கள் சொல்வது போல் குகூளில் எடுத்து போடவில்லை.உங்கள் புகைப்படங்கள் அனுப்புங்கள்..எனக்கு போட்டோஷாப்பிற்கு நிறைய படங்கள் ்தேவைபடுகின்றது.எடுத்து உபயோகித்துக்கொள்கின்றேன்.தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  31. அன்பான வேலன் அவர்களுக்கு,
    ஒரு தமிழனின் படைப்பை உலகுக்கு தெரிவிக்க தமிழனாகிய உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்.

    எனது படைப்பு : http://saalram.com

    என்னை பற்றி : http://saalram.com/venki

    நன்றி!

    ReplyDelete
  32. Saalram கூறியது...
    அன்பான வேலன் அவர்களுக்கு,
    ஒரு தமிழனின் படைப்பை உலகுக்கு தெரிவிக்க தமிழனாகிய உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்.

    எனது படைப்பு : http://saalram.com

    என்னை பற்றி : http://saalram.com/venki

    நன்றி!ஃ//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும ்நன்றி..புதுவை நண்பர்கள் அதிகம் உள்ளனர்...முடிந்தஅளவு உதவுகின்றேன்.வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  33. உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    M.RAJESH

    ReplyDelete