Wednesday, March 17, 2010

வேலன்:-எனக்கு பிடித்த 10 பெண்கள்(தொடர் பதிவு)

என்னை கவர்ந்த 10 பெண்கள்.
தொடரந்து தொழில்நுட்ப கட்டுரையாக எழுதிகொண்டு வரும்சமயம் நாளை எந்த சாப்ட்வேர்பற்றி என்ன பதிவிடலாம் என நினைத்துக்கொண்டு இருந்த சமயம் சசிகுமாரிடம் இருந்து கருத்து வந்தது.  எனக்கு  பிடித்த 10 பெண்கள் பதிவு எழுத அழைத்தார்...சரி ரத்த சொந்தங்களை பற்றி எழுதி அவர்களுக்கு ஐஸ் வைத்து  எழுதிவிடாலாம் என பார்த்தால் முதல் நிபந்தனையே அவர்கள் நமக்கு உறவினர்களாக இருக்க கூடாது என்று இருக்கு....சரி..நம்ப பெண் பதிவர்கள் பற்றி போடலாம் என்றால் அவர்களும் 10 பேருக்கு மேல் உள்ளார்கள்.சரி துறைக்கு ஒருவரை தேர்வு செய்யலாம் என்று எனக்கு பிடித்த 10 மகளிரை பட்டியலிட்டு உள்ளேன்.எனக்கு ஏன் அவர்களை பிடித்திருந்தது என்கின்ற காரணத்தையும் தெரியபடித்தியுள்ளேன். உங்களுக்கும் நான் சொல்லும் காரணம் பிடித்திருந்தால் ....!பிடித்திருந்தால் .....?.அட மறக்காமல் ஒட்டுப்போட்டு போங்கள என சொல்லவருகின்றேன். சரி பிடித்தவர்களை பற்றி பார்க்கலாமா...
1. அன்னை தெரசா:-




அன்னை தெரசாவை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. 26.08.1910 -ல் பிறந்து 05.09.1997 ல் மறைந்தவர்.தொண்டாற்றவே பிறந்த“அன்னை தெரசா” நிச்சயம் புனிதராவார்.  அவர் புனிதராகும் இப்பூவுலகில் அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்வது பெரும்பேறு அல்லவா?
கூடுதல் தகவலாக அவருக்கு கிடைத்த விருதுகள் :
•  1962 – பத்ம ஸ்ரீ விருது
•  1971 – 23வது போப் ஜான் அமைதி விருது
•  1971 – குட் சமரிட்டன் விருது
•  1971 – கென்னடி விருது
•  1972 – சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது
•  1973 – டெம் பிள்டன் விருது
•  1977 – இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
•  1979 – அமைதிக்கான நோபல் பரிசு
•  1982 – பெல்ஜியம் நாட்டு பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
•  1985 – சுதந்திரத்துக்கான பிரிசிடென்ஷியல் விருது

• 1996 – அமெரிக்காவின் கெளரவப் பிரஜை.

2. அன்னை இந்திராகாந்தி
19-11-1917 ல் பிறந்து 31-10-1984 ல் மறைந்தவர்.இவரின் துணிச்சலான உடனடி முடிவு எனக்கு மிகவும் பிடிக்கும். கிருஷ்ணா குடிநீர் திட்டத்திற்காக சென்னை வந்த போது திறந்த ஜீப்பில் கிண்டியில் -அவரை பார்த்தேன்.(இந்திராகாந்தியையே நேரில் பார்த்திருக்கானா -இவன்.. அப்போ இவனுக்கு வயதாகிவிட்டிருக்கும் என எண்ண வேண்டாம்.  சின்னவயதுங்க அப்போது எனக்கு)இப்போது உள்ளவாறு டெல்லியில் கிளம்பும்போதே இங்கு டிராபிக்கை நிறுத்தும் பழக்கம் அப்போது இல்லை.

3. செல்வி ஜெயலலிதா
சென்னை மக்கள் இன்று குடங்களுடன் தண்ணீருக்கு அலையாமல் இருக்கின்றார்கள் என்றால் அதற்கு இவரும் ஒரு காரணம். மழை நீர் சேகரிப்பை அனைத்து மக்களுக்கும் வலியுறுத்தி - அனைத்து கட்டடங்களிலும் மழை நீர் சேமிப்பை வலியுறுத்தியவர்.மழை நீர் சேகரிப்பு திட்டம் கொண்டுவந்ததற்காகவே இவரை எனக்கு பிடிக்கும்.
4.பத்மினி

12-06-1932 -ல் பிறந்து 24-09-2006 -ல் மறைந்தார்..நாட்டியத்துடன் கூடிய நடி ப்பில் அசத்துவார்.இவரின் தில்லானா மோகனாம்பாள் -வஞ்சிக்கோட்டை வாலிபன் போன்ற படங்கள் மறக்க முடியாதவை.
5. மும்தாஜ்

மும்தாஜ் என்றதும் கட்டிப்பிடி கட்டிப்பிடிடா மும்தாஜ் என எண்ணிவிடாதீர்கள்.
 தாஜ்மகாலை உருவாக்கியமுகலாயப் பேரரசு மன்னனான ஷாஜகானின் மனைவி ஆவார். இவரது இயற்பெயர் அர்சுமந்த் பானு பேகம்ஏப்ரல் 1593இல் இந்தியாவில் ஆக்ராவில்பிறந்தவர். இவரது தந்தை பார்சி இனத்தவரான அப்துல் அசன் அசாஃப் கான்ஜகாங்கீர் மன்னரின் மனைவியான நூர் ஜகானின் சகோதரர் ஆவார்.மும்தாஜ் தனது 19வது வயதில் மே 101612இல் குர்ராம் என்ற இளவரசனைத் திருமணம் செய்தார். இவர் பின்னர் முகாலாயப் பேரரசின் மன்னனாகி ஷா ஜகான் என்ற பெயரைப் பெற்றார். மும்தாஜ் இம்மன்னனுக்கு இரண்டாவது மனைவியானாலும் அவருக்கு மிகவும் விருப்பமுடைய மனைவியாயிருந்தாள். இவள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பர்ஹான்பூரில்தனது 14வது மகப்பேறின் போது மரணமானாள். இவளது உடல் தாஜ்மகாலில்அடக்கம் செய்யப்பட்டது.மும்தாஜ் தன் கணவர் மீது எந்த அளவு அன்பு வைத்திருந்தால் அவரின் கணவர் இவருக்காக அழகிய தாஜ்மகாலை கட்டியிருப்பார்..இவரின் இந்த அன்புக்காகவே எனக்கு மிகவும் பிடிக்கும்.
6.கிளியோபட்ரா
பெண்களை அழகுக்கு ஒப்பிடும்போது இவ பெரிய கிளியோ பட்ரா - என சொல்லுவார்கள்.(இப்போது ஐஸ்வராயை ஒப்பிடுகின்றார்கள்) இணையத்தில் தேடியபோது கிளியோபட்ராவின் இந்த படம் தான் கிடைத்தது.அழகுக்காக இவரை பிடிக்கும்.
 7.ராணி லட்சுமிபாய்
ராணி லட்சுமி பாய் என்றால் நிறையபேருக்கு தெரியாது..ஜான்சி ராணி என்றால்தான் தெரியும்.லட்சுமிபாய், ஜான்சி இராணி (கி. 1828 – ஜூன் 171858) (இந்தி- झाँसी की रानीமராத்தி- झाशीची राणी), வட இந்தியாவின் ஜான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர் இவரின் வீரததிற்காக இவரைப்பிடிககும்.
8.வேல்ஸ் இளவரசி டயானா
வேல்ஸ் இளவரசி டயானா (Diana, Princess of Wales, இயற்பெயர்: பிரான்செஸ் ஸ்பென்சர், ஜூலை 11961 - ஆகஸ்ட் 311997வேல்ஸ் இளவரசர் சார்ல்சின்முதலாவது மனைவி.வாழவேண்டிய வயதில் வாழ்வை இழந்தவர்.இவரின் எளிமை எனக்கு பிடிக்கும்.
 9.தங்க மங்கை பி.டி.உஷா.
இந்தியாவிற்காக ஒடிதங்கம் வென்றவர்..ஆனால் வழக்கப்படி இந்தியா இவரை கண்டுகொள்ளவில்லை..இவரின் விளையாட்டுதிறமை மிகவும் பிடிக்கும்.
10. கவிஞர் தாமரை
பெண் பாடலாசிரியர். இவரின் பாடல்வரிகள் அருமையாக இருக்கும். வசீகரா...தவமின்றி கிடைத்த வரமே போன்ற இவரின் பாடல்கள் மிகப்பிரபலம். .ஆபாசம் இல்லாமலும் தமிழ் பாடல்களில் காதலை வெளிப்படுத்த முடியும் என்று நிருபித்தவர் தாமரை.இவரின் தவமின்றி கிடைத்த வரமே  பாடலை எனது செல்போனின் டியுனாக வைத்துள்ளேன்.

பதிவுபிடித்திருந்தால் மறக்காமல் கருத்துக்களை சொல்லிவிட்டுப்போங்கள்.


வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
இது மகளிர் ஸ்பெஷல் பதிவு...
இவ்வளவு சீக்கிரம் நமது பதிவர் சந்திப்பு நடக்கும் என நான் நினைக்கவேயில்லை...

26 comments:

  1. சார் பத்தாவது எனக்கும் ரொம்பவும் பிடிக்கும்,

    ReplyDelete
  2. ஜெய்லானி கூறியது...
    சார் பத்தாவது எனக்கும் ரொம்பவும் பிடிக்கும்,ஃஃ//

    நன்றி ஜெய்லானி சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  3. பத்து பெண்களின் தேர்வும் அருமை,மற்றவர்கள் போட்டது இல்லாமல் புதுசா கிளியோபட்ரா, மும்தாஜ் டயானாவையும் குறிப்பிட்டு இருக்கீங்க.

    ReplyDelete
  4. 10 பெண்களின் தேர்வும் அருமை சகோ!!

    ReplyDelete
  5. அதானே பாத்தேன், உங்களுக்கும் இந்த நோவு கீதா மாப்பு? அல்லாரும் 'புடிச் பொன்னுகோ '
    பதிவு இட்டுகினுகீராங்கோ, நம்ம ஆளுங்கோ இன்னம் இடலியேன்னு பாத்தாக்கா நம்ம மாப்ஸு இட்டுகினுதுபா.
    ஆமா, ஒரு டவுட்டு கீது, ஆரும் அவங்களா பெத்த தாய,அம்மாவ " புடிச்ச பொன்னு மணிங்கோ " பட்டியல ஏன் போட மாட்டேன்றாங்கோ? ! இன்னா ஏதானும் மிஷ்டேக்கா கேடுகினனா கண்ணு?

    ReplyDelete
  6. அருமையான தேர்வு , மகளிர் தின போட்டோ கலக்கல் , அந்த இரண்டு பேரும் யாருனு எனக்கு மட்டும் சொல்லிடுங்கோ

    ReplyDelete
  7. அந்த பதிவர் சந்திப்பு மாநாட்டில், புகைப்படம் எடுக்க, உங்களை கூப்பிட்டிருக்காங்க பாருங்க....... பாட்டிகளின் ஆதரவு பெற்றவர்.....!

    ReplyDelete
  8. Jaleela கூறியது...
    பத்து பெண்களின் தேர்வும் அருமை,மற்றவர்கள் போட்டது இல்லாமல் புதுசா கிளியோபட்ரா, மும்தாஜ் டயானாவையும் குறிப்பிட்டு இருக்கீங்க.//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்

    ReplyDelete
  9. Mrs.Menagasathia கூறியது...
    10 பெண்களின் தேர்வும் அருமை சகோ!//

    நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  10. கக்கு - மாணிக்கம் கூறியது...
    அதானே பாத்தேன், உங்களுக்கும் இந்த நோவு கீதா மாப்பு? அல்லாரும் 'புடிச் பொன்னுகோ '
    பதிவு இட்டுகினுகீராங்கோ, நம்ம ஆளுங்கோ இன்னம் இடலியேன்னு பாத்தாக்கா நம்ம மாப்ஸு இட்டுகினுதுபா.
    ஆமா, ஒரு டவுட்டு கீது, ஆரும் அவங்களா பெத்த தாய,அம்மாவ " புடிச்ச பொன்னு மணிங்கோ " பட்டியல ஏன் போட மாட்டேன்றாங்கோ? ! இன்னா ஏதானும் மிஷ்டேக்கா கேடுகினனா கண்ணு?//

    ஒரு படத்தில் பாக்கியராஜ் பொதுமக்களிடம் யாராவது ஒரு பத்தினியின் பெயர் சொல்லுங்கள் என்பார். ஆளாளுக்கு சீதை,நாளாயிணி என பலபெயர்களை குறிப்பிடுவார்கள்.அப்போது பாக்கியராஜ் - எல்லோரும் யார்யார் பெயரையோ குறிப்பிடுகின்றீர்களே - உங்கள் அம்மா - மனைவி - சகோதரிகள் எல்லாம் பத்தினிகள் இல்லையா என கேட்பார்...இங்கு பதிவில் பிரபலமானவர்கள் பெயர்கள்தான் கேட்டார்கள்.தவிர அவர்கள் நமது சொந்தக்களாக இருக்ககூடாது என்று கண்டிஷன். மற்றபடி நமது சொந்தங்கள் பற்றி போட நாம் ஏன் மறுக்கப்போகின்றோம்.?தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  11. sarusriraj கூறியது...
    அருமையான தேர்வு , மகளிர் தின போட்டோ கலக்கல் , அந்த இரண்டு பேரும் யாருனு எனக்கு மட்டும் சொல்லிடுங்கோ//

    பெயரை சொல்லக்கூடாது என்று சகோதரி ....! அவர்களின் கட்டளை...அதனால் பெயரை சொல்லமாட்டேன்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  12. அன்புடன் அருணா கூறியது...
    சூப்பர்//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  13. ஸ்ரீ.கிருஷ்ணா கூறியது...
    தேர்வு அருமை.//

    நன்றி கிருஷ்ணா சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  14. அக்பர் கூறியது...
    உங்கள் தேர்வு அருமை..//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்பர்...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  15. Chitra கூறியது...
    அந்த பதிவர் சந்திப்பு மாநாட்டில், புகைப்படம் எடுக்க, உங்களை கூப்பிட்டிருக்காங்க பாருங்க....... பாட்டிகளின் ஆதரவு பெற்றவர்.....//

    உங்கள் ஆதரவுக்கும் அழைப்பிற்கும் நன்றி சகோதரி...வாழ்கவளமுடன்.வேலன்.

    ReplyDelete
  16. நல்ல பொருத்தமான தெரிவுகள்.

    ReplyDelete
  17. சூப்பர் நண்பா எல்லாமே கொஞ்சம் புதுமையாக உள்ளது, என் அழைப்பை ஏற்று தொடர்பதிவு எழுதியதற்கு மிக்க நன்றி வேலன் சார், உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. அன்புமிகு வேலன் அவர்களுக்கு
    தலைப்பு மிக அருமையாது.
    இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் அவர்களின் தாய் தான் சிறநத பெண்மனி.....இத மறந்துடீங்க....
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    ReplyDelete
  19. அன்புள்ள நண்பர் வேலன் அவர்களுக்கு
    இதுவரை இணையதளம் என்றால் ஆங்கிலம் தெரிந்தவர்கள் தான் அதிகமாக
    உபயோகபடுத்த முடியும் என்று எண்ணியிருந்தேன் தங்களைப்போன்ற தமிழ் ஆர்வலர்கள் தமிழிலேயே தரும் அனைத்து தகவல்களையும் கண்டு பிரமித்து போய்விட்டேன் தாங்கள் தரும்
    அனைத்து தகவல்களும் அருமை என்று
    ஒரு வரியில் சொல்லிவிட முடியாது அவ்வளவு அருமை குறிப்பாக இலவச மென்பொருட்களைப்பற்றி தாங்கள் தரும் தகவல்கள் மிகவும் உபயோக உள்ளது நண்பரே மேன்மேலும் தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள நண்பரே
    newfriendnaan@gmail.com

    ReplyDelete
  20. Dr.எம்.கே.முருகானந்தன் கூறியது...
    நல்ல பொருத்தமான தெரிவுகள்.ஃ//

    நன்றி டாக்டர்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  21. சசிகுமார் கூறியது...
    சூப்பர் நண்பா எல்லாமே கொஞ்சம் புதுமையாக உள்ளது, என் அழைப்பை ஏற்று தொடர்பதிவு எழுதியதற்கு மிக்க நன்றி வேலன் சார், உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//
    வாய்ப்பளித்த தங்களுக்குதான் நன்றி சொல்லவேண்டும் சசி..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் வாய்ப்ளித்தமைக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  22. mdniyaz கூறியது...
    அன்புமிகு வேலன் அவர்களுக்கு
    தலைப்பு மிக அருமையாது.
    இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் அவர்களின் தாய் தான் சிறநத பெண்மனி.....இத மறந்துடீங்க....
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்.·//

    மறக்கவில்லை நண்பரே்...விதிப்படி இரத்த சம்பந்தங்களை பதிவிடகூடாது என்பதால் அதை குறிப்பிடவில்லை..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  23. பெயரில்லா கூறியது...
    அன்புள்ள நண்பர் வேலன் அவர்களுக்கு
    இதுவரை இணையதளம் என்றால் ஆங்கிலம் தெரிந்தவர்கள் தான் அதிகமாக
    உபயோகபடுத்த முடியும் என்று எண்ணியிருந்தேன் தங்களைப்போன்ற தமிழ் ஆர்வலர்கள் தமிழிலேயே தரும் அனைத்து தகவல்களையும் கண்டு பிரமித்து போய்விட்டேன் தாங்கள் தரும்
    அனைத்து தகவல்களும் அருமை என்று
    ஒரு வரியில் சொல்லிவிட முடியாது அவ்வளவு அருமை குறிப்பாக இலவச மென்பொருட்களைப்பற்றி தாங்கள் தரும் தகவல்கள் மிகவும் உபயோக உள்ளது நண்பரே மேன்மேலும் தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள நண்பரே
    newfriendnaan@gmail.com//

    பெயரில்லா நண்பருக்கு நன்றி...தங்கள் பெயரை குறிப்பிட்டு இருக்கலாமே...இருப்பினும் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும நன்றி...வாழ்க வளமுடன்:வேலன்.

    ReplyDelete
  24. very nice selection. i like ms.jeyalalitha for implementing rain water harvesting scheme and successfully completing the new veeranam project. till today we are getting enough water supply, daily. what a relief. as a housewife i daily thank her. nice selection, thanks

    ReplyDelete