Friday, March 19, 2010

வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற

நமது போட்டோக்களை நொடியில் பேனா - பென்சில் -ஆயில் பெயிண்டிங் படமாக மாற்ற போட்டோஷாப் துணையில்லாமல் இந்த சாப்ட்வேர உதவுகின்றது. 2 எம்.பிக்குள்தான் இது உள்ளது.இதனை பதிவிறக்க
இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கி உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும். .
இதிலேயே கூடுதல வசதி வேண்டும் என்றால் அதில் உள்ள Upgrade கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வலப்புறம் உள்ள Open கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.இடது புறம் உள்ள Sketch டேபின் கீழே Pen,.Pencil, Pastel,என்கிற் ரேடியோ பட்டன்கள் இருக்கும். அதில் ஏதாவது ஒன்றை கிளிக்செய்யுங்கள். அதன் பக்கத்தில் Precision அளவினையும் Line அளவினையும் வையுங்கள். லைன் ஸ்லைடரை நகர்த்த படத்தின் தரம் மாறுவதை காணலாம்.நான் கீழே பென்சில் தேர்வு செய்துள்ளேன்.
Pastel -ல் தேர்வு செய்த படம் கீழே:-
பென் கொண்டு தேர்வு செய்த படம் கீழே:-
நடிகையின் படம் ஓவியமாக கீழே:-
வலதுபுறம் பார்த்தீர்களே யானால் Automatic அடுத்து Freehand டேப் இருக்கும்.அதை கிளிக் செய்து பிரஷ் அளவினை வேண்டிய அளவிற்கு வைத்து  பக்கத்தில் உள்ள விண்டோவில் கர்சரால் நகர்த்த உங்களுக்கு படம் தெரிய வரும்.தேவையானதை வரைந்து கொள்ளலாம்.
சரி...ஒவ்வோரு புகைப்படமாக மாற்றாமல் ஒரு போல்டரில் உள்ள அனைத்து படங்களையும் மாற்ற வேண்டும். அதற்கும் வழி உள்ளது.வலதுபுறம் உள்ள Batch Convert Bar கீழே உள்ள Show பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் மாற்ற வேண்டிய போல்டரையும் சேமிக்க விரும்பும இடத்தை யும் தேர்வு செய்து Convert All  கிளிக் செய்தால் உங்கள் புகைப்படங்கள் அனைத்தும் மாறிவிடும்.
அதைப்போல் இடதுபுறம் Texture -ல் 10 ம் கும் மேற்பட்ட பின்ணணி படங்களையும் நாம் விரும்பும் படங்களையும் கொண்டு வரலாம். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.படங்கள் நன்றாக இல்லையென்றலாம் அழித்துவிடவும்.சேமிக்கவும் சேமித்ததை எடிட் செய்யவும் இதில் வசதிகள் உள்ளது.
ஐஸ்வர்யா ராய் ரசிகர்களுக்காக அவரின் புகைப்படம் கீழே:-
ஒவியமாக மாற்றியபின வந்த புகைப்படம் கீழே:-
பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

வாழ்க வளமுடன்,
வேல்ன்.

JUST FOR JOLLY PHOTOS:-

கதவை திற காற்று வரட்டும் - 
அம்மணி...அது கிரில் கேட்...திறக்காமலே காற்று வரும். நீங்கள் வாங்கள்.
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

28 comments:

  1. கேட்(gate)டை திற. கார் உள்ளே வரட்டும்.

    ReplyDelete
  2. கதவை திறந்து ரஞ்சிதா வந்துட போகுது...தலைவரே ப்ளாக்கர்களுக்கு தேவையான குறிப்புகள் அதாவது அழகுபடுத்தும் குறிப்புகள் போடுங்க...அப்புறம் வேடிக்கை வினோதங்கள் காட்டும் படங்கள் ,போடுங்க..ரொம்ப நாளாச்சு..

    ReplyDelete
  3. நல்லாத்தான் இருக்கு,ம்ம் நடத்துங்க.....

    ReplyDelete
  4. பென்சில் இல்லாம ஓவியம் பயுனுள்ள பதிவு
    எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வேலன் சார்,

    நல்ல தகவல், போட்டோஷாப் இல்லாதவர்களுக்கு இருந்தும் பயன்படுத்த முடியாதவர்களுக்கு
    மிக சுலபமானதாக இருக்கும்.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete
  6. மாப்ள, வழக்கம்போலவே பிரமாதம் தான்.
    வேறு என்னாத்த நா சொல்ல?
    அடங்காதவன் படம் என் ப்ளாகர் followers இல் இல்லை ராஜா !!

    ReplyDelete
  7. ஜாலி கமெண்ட்டும்,பதிவும் கலக்கல்!!

    ReplyDelete
  8. ஹாய் அரும்பாவூர் கூறியது...
    kalakkal padhivu//

    வருகைக்கும் கருத்துக்கும் பதிவில் இணைப்பு கொடுத்தமைக்கும் நன்றி நண்பரே...்வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  9. Chitra கூறியது...
    கேட்(gate)டை திற. கார் உள்ளே வரட்டும்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  10. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
    கதவை திறந்து ரஞ்சிதா வந்துட போகுது...தலைவரே ப்ளாக்கர்களுக்கு தேவையான குறிப்புகள் அதாவது அழகுபடுத்தும் குறிப்புகள் போடுங்க...அப்புறம் வேடிக்கை வினோதங்கள் காட்டும் படங்கள் ,போடுங்க..ரொம்ப நாளாச்சு..//

    அழகு படுத்தும் குறிப்புகள்...? புரியவில்லை...போட்டோக்கள் பதிவே நிறைய உள்ளது. தொடர்ந்து பதிவிடுகின்றேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  11. மைதீன் கூறியது...
    நல்லாத்தான் இருக்கு,ம்ம் நடத்துங்க..//

    நன்றி மைதீன் சார்..்வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  12. ஜெய்லானி கூறியது...
    :-))))))))))//

    நன்றி ஜெய்லானி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  13. karthik கூறியது...
    பென்சில் இல்லாம ஓவியம் பயுனுள்ள பதிவு
    எனது வாழ்த்துக்கள்//

    நன்றி கார்த்திக் ...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  14. ♠புதுவை சிவா♠ கூறியது...
    நன்றி வேலன்//

    நன்றி சிவா சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  15. ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
    வேலன் சார்,

    நல்ல தகவல், போட்டோஷாப் இல்லாதவர்களுக்கு இருந்தும் பயன்படுத்த முடியாதவர்களுக்கு
    மிக சுலபமானதாக இருக்கும்.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்//

    சார் இன்றுதான் காலையில் உங்களை நினைத்துக்கொண்டேன்..சார் காணவில்லையே...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...வாழ்க வளமுடன்,என்றும் அன்புடன்,வேலன்.

    ReplyDelete
  16. கக்கு - மாணிக்கம் கூறியது...
    மாப்ள, வழக்கம்போலவே பிரமாதம் தான்.
    வேறு என்னாத்த நா சொல்ல?
    அடங்காதவன் படம் என் ப்ளாகர் followers இல் இல்லை ராஜா !//

    வந்துட்டார் சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  17. Mrs.Menagasathia கூறியது...
    ஜாலி கமெண்ட்டும்,பதிவும் கலக்கல்!//

    நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  18. நல்ல தகவல், போட்டோஷாப் இல்லாதவர்களுக்கு இருந்தும் பயன்படுத்த முடியாதவர்களுக்கு
    மிக சுலபமானதாக இருக்கும்.

    ReplyDelete
  19. வேலன் அண்ணா மிகவும் அருமையான பதிவு. உங்களுடைய பழைய பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். அதனால் 24மணிநேரம் போதவில்லை. எவ்வளவு பயனுள்ள தகவல்கள் உங்களைப் போன்று நல்லவர்கள் இருப்பதால்தான் நம் நாட்டில் மழை இன்னும் பெய்து கொண்டு இருக்கிறது. வெறும் புகழ்ச்சியில்லை. இதயத்திலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள்தான். உமது பணி சிறக்கட்டும்.

    ReplyDelete
  20. நல்ல பதிவு நண்பரே தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. menan கூறியது...
    நல்ல தகவல், போட்டோஷாப் இல்லாதவர்களுக்கு இருந்தும் பயன்படுத்த முடியாதவர்களுக்கு
    மிக சுலபமானதாக இருக்கும்.ஃ//

    நன்றி மேனன் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  22. afrine கூறியது...
    வேலன் அண்ணா மிகவும் அருமையான பதிவு. உங்களுடைய பழைய பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். அதனால் 24மணிநேரம் போதவில்லை. எவ்வளவு பயனுள்ள தகவல்கள் உங்களைப் போன்று நல்லவர்கள் இருப்பதால்தான் நம் நாட்டில் மழை இன்னும் பெய்து கொண்டு இருக்கிறது. வெறும் புகழ்ச்சியில்லை. இதயத்திலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள்தான். உமது பணி சிறக்கட்டும்//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும வாழ்த்துக்கும் நன்றி அப்ரைன் அவர்களே...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  23. சசிகுமார் கூறியது...
    நல்ல பதிவு நண்பரே தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

    நன்றி சசிகுமார் அவர்களே...வாழ்கவளமுடன்,வேலன்.

    ReplyDelete
  24. மிகச் சிறப்பான பதிவு
    பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் தேவையானது.

    ReplyDelete
  25. Chitra கூறியது... கேட்(gate)டை திற. கார் உள்ளே வரட்டும்// வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete