நம்மிடம் உள்ள பிரிண்டர் மூலமே பெரிய பெரிய போஸ்டர்களை நாம் சுலபமாக அச்சிடலாம். நமது குழந்தைகளின் பிறந்த நாள் அன்று இவ்வாறு அவர்களின் புகைப்படத்தை பெரிய போஸ்டரில் அச்சிடலாம். அவர்களுக்கும் மகிழ்ச்சி..நமக்கும் மகிழ்ச்சி.5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள பைல் மூலம் நமது கணிணியில் உள்ள புகைப்படத்தை தேர்வு செய்யவும். நான் இந்த இயற்கை காட்சியை தேர்வு செய்துள்ளேன்.
இதை தேர்வு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்டவாறு படம் மாறிவிடும். இதில் வலது புறம் கவனியுங்கள்.
இதில் உள்ள கிராப் டூல் மூலம் புகைப்படத்தை தேவையான அளவு கட் செய்துகொள்ளலாம்.இடையில் வரும் கோடுகளின் இடைவெளியையும் நாம் தேவையான அளவு அமைத்துக்கொள்ளலாம்.படத்தை நீள வாக்கிலோ - அகல வாக்கிலோ பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்வது மூலம் அந்த வசதி நமக்கு கிடைக்கும்.அதைப்போல நமது பிரிண்டர் மாடலையும் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
கீழே உள்ள் ரேடியோ பட்டன்கள் ஒவ்வொன்றாக கிளிக்செய்து படத்தில் எவ்வாகையாக மாற்றங்கள் ஏற்படுகின்றது என்று கவனியுங்கள்.
இதில போஸ்டர் சைஸும் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். தேவையான அளவினை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
தேவையான செட்டிங்ஸ் செய்தபின் இறுதியாக Print Poster - ல் உள்ள Print கிளிக் செய்யுங்கள் சில வினாடிகள் ஒவ்வொரு பகுதியாக நமது படம் பிரிண்ட்டாகி வரும். இடைவெளியை சரியாக பொருத்தி ஒவ்வொரு படமாக ஒட்டினால் நாம் விரும்பிய போஸ்டர் கிடைக்கும்.இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது உங்கள் புகைப்படம் தேர்வு செய்யும் முன் படத்தின் ரெசுலேஷன் 400 பிக்ஸல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.அப்போழுதுதான் புகைப்படம் புள்ளிகள் இல்லாமல் அழகாக வரும். போஸ்டர் அச்சடியுங்கள். கருத்துக்களை கூறுங்கள்.( நமது பதிவுலக நண்பர் சிம்பு அவர்கள் நீண்டநாட்களாக இந்த சாப்ட்வேர்பற்றி கேட்டிருந்தார்.நேரமின்மைகாரணமாக இவ்வளவுநாள் பதிவிடவில்லை.)வாழ்க வளமுடன்.
வேலன்.
நல்லதுதான் ஆனா கலர் இங்க் கட்டி படியாகாதே ..!!
ReplyDeleteரொம்ப நன்றி அண்ணா ரொம்ப நாட்களாக நான் இதனை தேடிக் கொண்டிருக்கிறேன்...
ReplyDelete:-) Good tip!
ReplyDeleteவழக்கம் போல பயனுள்ள பதிவு.
ReplyDeleteஊருக்கு போய் வருவதற்குள் நிறைய பதிவுகள்.
நோன்பு கழித்து தான் எல்லாத்தையும் படிக்கனும்.
நல்ல மின்பொருள் மிக்க நன்றிங்க வேலன் சார்
ReplyDeleteஜெய்லானி கூறியது...
ReplyDeleteநல்லதுதான் ஆனா கலர் இங்க் கட்டி படியாகாதே ..!!ஃஃ
ஆமாம் ஜெய்லானி சார்.ஆனால் என்ன செய்வது..தேவையென்றுவந்தால் செலவு செய்துதானே ஆகவேணடும்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
வெறும்பய கூறியது...
ReplyDeleteரொம்ப நன்றி அண்ணா ரொம்ப நாட்களாக நான் இதனை தேடிக் கொண்டிருக்கிறேன்...ஃஃ
நீங்கள் தான் என்னிடம் கேட்டிருந்தீர்களா..?வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழக்வ ளமுடன்
வேலன்.
Chitra கூறியது...
ReplyDelete:-) Good tip!
நன்றி சகோதரி...
வாழக் வளமுடன்.
வேலன்.
Jaleela Kamal கூறியது...
ReplyDeleteவழக்கம் போல பயனுள்ள பதிவு.
ஊருக்கு போய் வருவதற்குள் நிறைய பதிவுகள்.
நோன்பு கழித்து தான் எல்லாத்தையும் படிக்கனும்.
நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Tamilulagam கூறியது...
ReplyDeleteஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.
இணைத்துவிட்டேன் நண்பரே.்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
ஆ.ஞானசேகரன் கூறியது...
ReplyDeleteநல்ல மின்பொருள் மிக்க நன்றிங்க வேலன் சார்ஃ
நன்றி ஞர்னசேகரன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.