Tuesday, November 2, 2010

வேலன்-பிடிஎப் ரீடர் -Foxit Reader

பிடிஎப் ரீடர் எவ்வளவோ இருந்தாலும் குறைந்த அளவில் நிறைய வசதிகளை தருவதாக இந்த Foxit Reader ஐ சொல்லலாம். அடோப் ரீடரை விட 30 மடங்கு அளவில் குறைந்தது.7 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்  செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Open PDF File கிளிக் செய்து தேவையான பிடிஎப் பைலை திறக்கவும்.

இதில் மேற்புறம் நிறைய டூல்கள் கொடுத்துள்ளார்கள்.

அம்பு குறியில் குறிப்பிட்ட படத்தை - வார்த்தையை அடையாளப்படுத்துதல்,நோட் எழுதி வைத்தல்,வார்ததையை ஹைலைட் செய்தல்,வார்த்தையை அன்டர்லைன் செய்தல்,வார்த்தையை அடி்த்தல்,வார்த்தையின் கீழே வளைவான கோடுபோடுதல்,வார்த்தைக்கு இடையில் வார்த்தையை சேர்க்க அம்பு குறியிடுதல்,வேண்டிய பகுதியை காப்பி செய்தல் என இதில் உள்ள வசதிகள் ஏராளம் - தாராளம். மேலும் சிறப்பு வசதியாக பிடிஎப் பைலை ரிவார்ஸாகவும் மாற்றலாம்.நேரடியாக வேர்ட் பைலாக மாற்றிக்கொள்ளலாம்.எளிய விளக்கத்திற்காக நான்குறிப்பிட்ட வசதிகள் யாவற்றையும் இங்குளள படத்தில் விளக்கிஉள்ளேன் பாருங்கள்.
பதிவுகளை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

20 comments:

  1. அருமை வேலன் சார்,

    மிகவும் சிறப்பான ஒரு மென்பொருள் அதுவும் அளவில் குறைந்தத7 எம்.பியில் சூப்பர்

    பகிர்ந்தமைக்கு நன்றி சார்

    வாழ்க வளமுடன்
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  2. நானும் இதையே பாவித்து வருகிறேன். இது அடோப் ரெடேரை விட வேகமானதும் கூட

    ReplyDelete
  3. இன்னினாமோ சொல்லிகினுகீறீங்க . நா இன்னாத்த கண்டுகினேன்.?
    மாப்ஸு ஏபிடி கிரீய ? சொகமாகீரியலா?

    ReplyDelete
  4. நன்றி வேலன்

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  5. எனக்கு PDF READER தேவை.
    உங்கள் பதிவு எனக்கு பயனுள்ளதாக இருந்தது.
    வாழ்த்துக்கள் வேலன் சார்.
    நம்ம வலைப்பக்கமெல்லாம் வராதே இல்லை.

    ReplyDelete
  6. நானும் பல தொழில்நுட்ப பதிவரிடம் கேட்டுவிட்டேன் பதிலே இல்லை,நீங்களாவது சொல்லுங்கள்,
    1.நெட்புக்கில்
    தமிழில் ப்ளாக் எழுதுதல்,தமிழில் மின்னஞ்சல் அனுப்புதல்,voice chat செய்தல்,file sharing,DVD Reader,போன்ற வசதிகள் உன்டா?சென்னையில் சுமார் எவ்வளவு விலை முதல் கிடைக்கும்?

    ReplyDelete
  7. அட.. இதுவும் நல்லாத்தான் இருக்கு வேலன் சார்.அடோப் ரீடர்தான் பெரும்பாலும் பயன்படுத்தவார்கள். இப்பதிவு மூலம் ஒரு பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கீங்க..! இனிய முன்கூட்டிய தீபாவளி வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  8. வேலன் சார் எனக்கு ஒரு உதவி தேவை என்னிடம் avl format ல் சில file உள்ளது அதை PDF ஆகவோ WORD ஆகவோ கன்வெர்ட் செய்ய வேண்டும் அதற்கான சாப்ட்வேர் இருந்தால் தெரியபடுத்தவும். இந்த format நீங்கள் ஏற்கனவே வெளியிட்டு இருந்த ஜோதிடம் சாப்ட்வேர் ன் save option இப்படி இருக்கிறது . கணினிக்கு புதிய வரவான எனக்கும் உங்கள் பாடங்கள் மற்றும் குறிப்புகள் அனைத்தும் உபயோகமானதாக இருக்கிறது .

    ReplyDelete
  9. நன்றி திரு வேலன் சார் அவர்களே நல்ல தகவல் நான் ஒரு வருட காலமாகவே foxit reader தான் பயன்படுத்தி வருகிறேன் ஏனெனில் இது மிகவும் சிறிய அளவே கொண்ட மென்பொருள் மற்றும் adope reader போன்று எந்த ஒரு error message காட்டாது மிக விரவாக செயல் படும் மற்றும் சுதந்திர இலவச மென்பொருளும் கூட....

    ReplyDelete
  10. மாணவன் கூறியது...
    அருமை வேலன் சார்,

    மிகவும் சிறப்பான ஒரு மென்பொருள் அதுவும் அளவில் குறைந்தத7 எம்.பியில் சூப்பர்

    பகிர்ந்தமைக்கு நன்றி சார்

    வாழ்க வளமுடன்
    நட்புடன்
    மாணவன்//

    நன்றி சிம்பு சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. Rajasurian கூறியது...
    நானும் இதையே பாவித்து வருகிறேன். இது அடோப் ரெடேரை விட வேகமானதும் கூடஃ

    ஆம் நண்பரே..சூப்பராக உள்ளது..
    வாழ்க வளமுடன்.
    வேலனஃ.

    ReplyDelete
  12. கக்கு - மாணிக்கம் கூறியது...
    இன்னினாமோ சொல்லிகினுகீறீங்க . நா இன்னாத்த கண்டுகினேன்.?
    மாப்ஸு ஏபிடி கிரீய ? சொகமாகீரியலா?
    ஃஃ

    சொக்காதான்கீரன் மாம்ஸ்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. ♠புதுவை சிவா♠ கூறியது...
    நன்றி வேலன்

    வாழ்க வளமுடன்ஃ

    நன்றி சிவா சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. சே.குமார் கூறியது...
    எனக்கு PDF READER தேவை.
    உங்கள் பதிவு எனக்கு பயனுள்ளதாக இருந்தது.
    வாழ்த்துக்கள் வேலன் சார்.
    நம்ம வலைப்பக்கமெல்லாம் வராதே இல்லை.ஃஃ

    நன்றி குமார் சார்...கோபித்துக்கொள்ளாதீர்கள் அவசியம் வந்துவிடுகின்றேன்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. ஆகமக்கடல் கூறியது...
    நானும் பல தொழில்நுட்ப பதிவரிடம் கேட்டுவிட்டேன் பதிலே இல்லை,நீங்களாவது சொல்லுங்கள்,
    1.நெட்புக்கில்
    தமிழில் ப்ளாக் எழுதுதல்,தமிழில் மின்னஞ்சல் அனுப்புதல்,voice chat செய்தல்,file sharing,DVD Reader,போன்ற வசதிகள் உன்டா?சென்னையில் சுமார் எவ்வளவு விலை முதல் கிடைக்கும்?
    ஃஃ

    நோக்கியா தயாரிததுள்ள நெட்புக்கின் சென்னை விலை சரியாக தெரியவில்லை நண்பரே.விசாரித்து விரிவாக பதில் சொல்கின்றேன்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. பிரவின்குமார் கூறியது...
    அட.. இதுவும் நல்லாத்தான் இருக்கு வேலன் சார்.அடோப் ரீடர்தான் பெரும்பாலும் பயன்படுத்தவார்கள். இப்பதிவு மூலம் ஒரு பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கீங்க..! இனிய முன்கூட்டிய தீபாவளி வாழ்த்துகள் சார்.


    நன்றி பிரவின்குமார் சார்..உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  17. யோகி ஸ்ரீ ராமானந்த குரு கூறியது...
    வேலன் சார் எனக்கு ஒரு உதவி தேவை என்னிடம் avl format ல் சில file உள்ளது அதை PDF ஆகவோ WORD ஆகவோ கன்வெர்ட் செய்ய வேண்டும் அதற்கான சாப்ட்வேர் இருந்தால் தெரியபடுத்தவும். இந்த format நீங்கள் ஏற்கனவே வெளியிட்டு இருந்த ஜோதிடம் சாப்ட்வேர் ன் save option இப்படி இருக்கிறது . கணினிக்கு புதிய வரவான எனக்கும் உங்கள் பாடங்கள் மற்றும் குறிப்புகள் அனைத்தும் உபயோகமானதாக இருக்கிறது .ஃ
    தங்கள் வருகைக்கு நன்றி சார்...தாங்கள் ஜோதிட சாப்ட்வேரை தகவல்கள் கொடுத்து முடித்து பலன்கள் பார்த்ததும் அதை நேரடியாக பிரிண்ட் கொடுக்கவும். அதுசமயம் நீங்கள் மைக்ரோசாப்ட்டின் ஒன்நோட் அப்ளிகேஷனையோ - பிடிஎப் கிரியேட்டரையை உங்கள் கணிணியில் இணைத்திருக்க வேண்டும். பிரிண்ட ஆப்ஷனாக பிடிஎப் தேர்வு செய்தால்உங்களுக்கு தேவையானது பிடிஎப் பைலாக கிடைக்கும்.
    வாழ்க வளமுட்ன்.
    வேலன்.

    ReplyDelete
  18. சரவணன்.D கூறியது...
    நன்றி திரு வேலன் சார் அவர்களே நல்ல தகவல் நான் ஒரு வருட காலமாகவே foxit reader தான் பயன்படுத்தி வருகிறேன் ஏனெனில் இது மிகவும் சிறிய அளவே கொண்ட மென்பொருள் மற்றும் adope reader போன்று எந்த ஒரு error message காட்டாது மிக விரவாக செயல் படும் மற்றும் சுதந்திர இலவச மென்பொருளும் கூட....

    நன்றி சரவணன் சார்.யதேச்சையாக தேடும் சமயம் கிடைத்தது.நன்றாக இருக்கவே பதிவிட்டேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  19. Can I send Fax from computer via internet.
    ?
    tnx

    ReplyDelete
  20. //நன்றி சரவணன் சார்.யதேச்சையாக தேடும் சமயம் கிடைத்தது.நன்றாக இருக்கவே பதிவிட்டேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...//
    நான் உங்களை விட வயதில் சிறியவன் தானே சார் எல்லாம் எதுக்கு சார்.
    http://gnometamil.blogspot.com/

    ReplyDelete