Tuesday, December 27, 2011

வேலன்:-பைல்களை பிரிக்க - சேர்க்க -File Split and Merge

சில நேரங்களில் நாம் பைல்களை மற்றவர்களுக்கு அனுப்பவிரும்புவோம். ஆனால் அதனை முழுவதையும் ஒரே பைலாக அனுப்ப முடியாது. அவ்வாறான சந்தர்பங்களில் நீங்கள் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தலாம். 2 எம்.பி.யில் இலவசமாக உள்ள இந்த சின்னசாப்ட்வேரை பதிவிறக்கம் செயய் இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். 
இதில் நீங்கள் எந்த பைலை பிரிக்க விரும்புகின்றீர்களோ அதனை தேர்வு செய்யுங்கள். அடுத்து அதனை எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்யுங்கள்.அதன் கீழே நீங்கள் எவ்வளவு பாகங்களாக பிரிக்கவிரும்புகின்றீர்களோ அதனை தேர்வு செய்யுங்கள். நீங்கள் கே.பி மற்றும் எம்.பி அளவுகளிலும் அதனை தேர்வு செய்யலாம்.கடைசியாக இதில் உள்ள Split என்பதனை கிளிக் செய்யுங்கள்.
 உங்களுக்கான பணி முடிந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
சரி ..இப்போது நீங்கள் பைல்களை பிரித்துவிட்டீர்கள். இதனை எப்படி சேர்த்து பயன்படுத்துவது? அதற்கான வழிமுறைகளையும் இந்த சாப்ட்வேர் வழங்குகின்றது. இதில் உள்ள Merge File கிளிக் செய்யவும். வரும் விண்டோவில் நீங்கள் சேர்க்விரும்பும் பைலை தேர்வு செய்யவும். இப்போது இதில உள்ள மெர்ஜ் கிளிக் செய்யவும். உங்களுக்கான பைல் முழுமையாக கிடைக்கும். இதன் மூலம் பைல்களை மற்றவர்களுக்கு சுலபமாக அனுப்ப முடியும்.வீடியோ பைல்கள்.. ஆடியோ பைல்கள். டாக்குமேண்டுகள். என இதன்மூலம் அனைத்துவிதமான பைல்கள் பிரிக்க - சேர்க் சுலபமாக முடியும். பயன்படுத்திப்பாருங்கள்.. கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.

4 comments:

  1. நல்ல உபயோகமான சாப்ட்வேர் அண்ணா நன்றி ,
    நாம் அனுப்பும் பைல் பெறுபவர்களும் இந்த சாப்ட்வேர் பெற்று இருக்க வேண்டுமா ?
    அன்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  2. நல்ல, பயனுள்ள பகிர்வு. நன்றி நண்பரே...

    ReplyDelete
  3. sakthi said...
    நல்ல உபயோகமான சாப்ட்வேர் அண்ணா நன்றி ,
    நாம் அனுப்பும் பைல் பெறுபவர்களும் இந்த சாப்ட்வேர் பெற்று இருக்க வேண்டுமா ?
    அன்புடன் ,
    கோவை சக்திஃஃ

    ஆம்...அப்போதுதான் அவர்களுக்கு பைல்களை இணைக்க சுலபமாக இருக்கும. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  4. கணேஷ் said...
    நல்ல, பயனுள்ள பகிர்வு. நன்றி நண்பரே...ஃஃ

    நன்றி கணேஷ் சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete