Monday, October 14, 2013

வேலன்:-வீடியோ பைல்களை ஆடியோ பைல்களாக மாற்ற

சில நேரங்களில் நாம் நம்மிடம் உள்ள வீடியோபைல்களை ஆடியோ பைல்களாக மாற்றி பாடல்கள் கேட்க விரும்புவோம் அந்த சமயங்களில் நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை ஆடியோ பைல்களாக மாற்றிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 5 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add பட்டனை கிளிக் செய்து உங்களிடம் உள்ள வீடியோ பைல்களை தேர்வு செய்யவும். பின்னர் அதனை எந்த ஆடியோ பார்மெட்டில் மாற்ற விரும்புகின்றீர்களோ அந்த ஆடியோ பார்மெட்டினை தேர்வு செய்யவும் உங்களுக்கு இதில் Advanced Audio Coding.Dolby Digital AC-3,Sun AU Format(.*au),MPEG-4Audio(.*m4a),MPEG Layer-2 Audio(.*mp2),Mpeg Layer-3 Audio(.*mp3),Ogg Vorbis Audio (.*ogg), Real Audio (.*ra), Waveform Audio (.*wav),Windows Media Audio (.*wma) ஆகிய பார்மெட்டுக்களில் நமக்கு எந்த பார்மெட் வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும்.இதில் வலது புறம் கீழே  நாம் தேர்வு செய்த வீடியோவின் ப்ரிவியுவினை காணலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

அதனைப்போலவே நாம் தேர்வு செய்த வீடியோபைல்களின் முழுவிவரம் தெரிய வரும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


இதன் மொத்த விண்டோவினையும் நாம் பார்க்கும் சமயம் நமக்கு முழுவிவரமும் தெரியவரும் இதில் நாம் பைல்களை சேமிக்கும் இடத்தினையும்,பைல் பார்மேட்டினையும் பிரிவியுவினையும் எளிதில் தேர்வு செய்து கொள்ளலாம். இறுதியாக இதில் உள்ள கன்வரட்ட் கிளிக் செய்திட நமக்கு நமக்கான வீடியோ பைல்ஆனது ஆடியோ பைல்களாக மாறியிருப்பதனை காணலாம்..மேலும இதில் சிறப்பமசங்களாக கீழ்கண்ட விவரங்கள் கொடுத்துள்ளார்கள்.
வீடியோ பைல்களையும் ஒரு பார்டெட்டிலிருந்து வேறு ஒரு வீடியோ பார்மெட்டுக்குமாற்றலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.





 பயன்படுததிப்பாருங்கள்கருத்துக்களை சுறுங்கள்
வாழ்க வளமுடன் 
வேலன்.

10 comments:

  1. வணக்கம்
    வேலன்(சார்)

    அருமையான தவல் பதிவு அருமை இந்த இப்போ தரவிறக்கம் செய்கிறேன்...

    கணினி சம்மந்தமாக ஒரு டவுட் உங்களின் மின்னஞ்சல் முகவரியை
    தர முடியுமா? சார்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. எனக்கு மிகவும் பயன்படும்... நன்றி...

    இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. பயனுள்ள பகிர்வு வேலன் சார்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. இந்த ஸாப்ட்வேரை டவுன்லோட் செய்தேன். அதில் லைசென்ஸ் கோட் கேட்கிறதே? தீர்வு உண்டா நண்பரே.
    கிரீஷ்குமார்,திருச்செந்தூர்.

    ReplyDelete
  5. ஹலோ வேலன் சார் என் பெயர் சோலைமணி 1999 உங்க கடைக்கு பக்கத்தில் ஜவுளிகடை வைத்திரு
    ந்தோம் இப்போது நான் ஸ்டுடியோ வைத்துள்ளேன் எனக்கு உங்கள் உதவி தேவை தயவுசெய்து உதவி செய்யவும்.shanthisolaimani@gmail.com

    ReplyDelete
  6. 2008rupan said...
    வணக்கம்
    வேலன்(சார்)

    அருமையான தவல் பதிவு அருமை இந்த இப்போ தரவிறக்கம் செய்கிறேன்...

    கணினி சம்மந்தமாக ஒரு டவுட் உங்களின் மின்னஞ்சல் முகவரியை
    தர முடியுமா? சார்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தாமஸ்ரூபன் சார்..தங்கள் மெயில் முகவரிதரவும் நான் தங்களை தொடர்பு கொள்கின்றேன். வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  7. திண்டுக்கல் தனபாலன் said...
    எனக்கு மிகவும் பயன்படும்... நன்றி...

    இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...

    நன்றி தனபாலன் சார்..தங்கள் வாழ்த்துக்கு நன்றி...வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  8. சே. குமார் said...
    பயனுள்ள பகிர்வு வேலன் சார்...
    வாழ்த்துக்கள்.//

    நன்றி குமார் சார்..வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  9. Blogger Your Rights said...
    இந்த ஸாப்ட்வேரை டவுன்லோட் செய்தேன். அதில் லைசென்ஸ் கோட் கேட்கிறதே? தீர்வு உண்டா நண்பரே.
    கிரீஷ்குமார்,திருச்செந்தூர்.ஃஃ

    மீண்டும் ஒரு முறை சரியாக முயற்சி செய்யவும் நண்பரே...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  10. Blogger solai mani said...
    ஹலோ வேலன் சார் என் பெயர் சோலைமணி 1999 உங்க கடைக்கு பக்கத்தில் ஜவுளிகடை வைத்திரு
    ந்தோம் இப்போது நான் ஸ்டுடியோ வைத்துள்ளேன் எனக்கு உங்கள் உதவி தேவை தயவுசெய்து உதவி செய்யவும்.shanthisolaimani@gmail.comஃஃமெயிலில் தொடர்புகொள்கின்றேன் சோலைமணி...தங்கள் வருகைக்கும் விசாரிப்புக்கும் நன்றி..ஸ்டுடியோவிற்கு தேவையானஉதவிகளை செய்கின்றேன்.வாழ்க வளமுடன்வேலன்.

    ReplyDelete