ஜெபிஜே மற்றும் பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக மாற்ற இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.30 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதன் கீழே PDF.Word.Text.HTML Text Only PDF என நிறைய ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். இதில் எது தேவையோ அதனை தேர்வு செய்து கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.தேவையான ஆப்ஷன்களையும் பைல்களை சேமிக்க விரும்பும் இடத்தினையும் தேர்வு செய்தவுடன் கன்வர்ட்செய்திட கிளிக் செய்யவும்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் சேமித்த இடத்திற்கு சென்று பார்த்தால் உங்களுடைய ஜெபிஜே மற்றும் பிடிஎப் பைல்களானது வேர்ட்பைல்களாக மாறி யிருப்பதை காணலாம்.இதுபோல் உங்களுக்கு தேவையான பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete