புத்தாண்டு நல் வாழ்ததுக்கள்.
புத்தாண்டுக்கு வாழ்த்துவதும் வாழ்த்தினை பெறுவதும்
இனிய அனுபவம். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர்
(செல்போனும்-இன்டர்நெட்டும் அதிகம் புழகத்தில்
வருவதற்கு முன்னர்) வாழ்த்து அட்டைகளிலே நாம்
வாழ்த்தினை தெரிவித்துகொண்டோம். புதுவருடம்,
பொங்கல்,தீபாவளி,பிறந்தநாள் மற்றும் திருமணநாள்
ஆகியவற்றுக்கு வாழ்த்து அட்டைகள் வாங்கி
கைபட எழுதி நமக்கு வேண்டியவர்களுக்கு அனுப்புவோம்.
அதே போல் நமக்கு வரும் வாழ்த்து அட்டைகளையும்
ஆவலுடன் பிரித்து அதில் உள்ள படம் பார்த்து -
வாழ்த்தினை படித்து மகிழ்வோம். காலங்கள் மாறு
கின்றது அதேபோல் வாழ்த்தும் விதங்களும் மாறுகின்றது.
இந்த தளம் நமக்கு அந்த காலத்திய வாழ்த்தும் விதத்தினை
நினைவு கூர்கின்றது. விதவிதமான வாழ்த்து அட்டைகள்,
விதவிதமான புகைப்படங்களுடன் அழகாக காட்சி
உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்.
உங்களுக்கு பிடித்த புகைப்படத்தின் கார்டினை தேர்வு செய்யுங்கள்.
கார்டின்மீது கர்சரை வைத்து கிளிக் செய்யுங்கள்.
உங்கள் கார்டுக்கான வாசகங்கள் பிளே ஆகும். விருப்பமானபாடலையும் தேர்வு செய்துகொள்ளலாம். அதன்பிறகு அதன்
கீழே உள்ள Sendthis ecard கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு
கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் நமது பெயரும் அடுத்து நமது இ-மெயில்
முகவரியையும் தட்டச்சு செய்யுங்கள். அடுத்து மெசேஜ்
காலத்தில் நீங்கள் சொல்லவிரும்பும் வார்த்தைகளை-
வாழ்த்துகளை தெரிவியுங்கள். உங்களது வலப்பக்கம் இதன்
பிரிவியு தெரியும். பார்த்துக்கொள்ளுங்கள்.இப்போது அப்படியே
கொஞ்சம் கீழே வாருங்கள்.உங்களு்க்கு கீழ்கண்ட விண்டோவரும்.
இதில் நீங்கள் அனுப்புவரின் பெயரையும்அவரின் இ-மெயில்
முகவரியையும் தட்டச்சு செய்து என்று நீங்கள் அனுப்பவேண்
டுமோ அந்த நாளையும் தேர்வு செய்துவிடுங்கள்.நீங்கள்
அனுப்பியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஓப்பன் ஆகும்.
இதில் உள்ள view this ecard கிளிக் செய்தால் நீங்கள் அனுப்பிய
கார்டினை மீண்டும் பார்த்துக்கொள்ளலாம்.
உங்கள் நண்பர்களுக்கு - உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து
அனுப்பி தூள் கிளப்புங்க...
உங்கள் அனைவருக்கும்
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்,
இன்றைய PSD புகைப்படம் டிசைன் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இந்த டிசைன் பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும்.
புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்தவர்கள்:-