வேலன்:-டெக்ஸ்க்டாப்பில் விளையாடசமீபத்தில் இணைய நண்பரின் மகன் அங்கிள் எப்போதும்
பெரியவங்களுக்கே பதிவிடுகின்றீர்கள். எங்களை போன்ற
சின்ன பசங்களுக்கு எதும் விளையாட்டு வெளியிட மாட்டேன்
என்கின்றீர்களே என குறை பட்டுக்கொண்டார்.அவரின் ஆசையை
நிறைவேற்றலாம் என பதிவிட்டுள்ளேன். இது சிறுவர்களுக்கான
பதிவு.

இது நீங்கள் டெக்ஸ்டாப்பில் விளையாடும் விளையாட்டு.
இதன் மூலம்உங்கள் கம்யூட்டரின் டெக்ஸ்டாப்பை
உடைக்கலாம்,வாள் கொணடுஅறுக்கலாம்,தூப்பாக்கியால்
சுடலாம். எரிய விடலாம்,வண்ணக்கலவைகளால் நிரப்பலாம்.
சின்ன சின்ன புழுக்களை மேய விடலாம்.ஸ்டம்ப் கொண்டு
முத்திரை பதிக்கலாம்.இறுதியாக அனைத்தையும்
வாஷ் செய்துவிடலாம்.இந்த விளையாட்டை பதிவிறக்க இங்கு
கிளிக் செய்யவும்.இது 1 எம்.பி. அளவுதான் பிடிக்கும்.பதிவிறக்கம்
செய்ததும் இதை ரன் செய்யவும்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் 1 முதல் 9 வரையில் விளையாட்டுக்கள் உள்ளது.
நீங்கள் மவுஸை ரைட் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ் கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.


முதல் எண் தேர்நதேடுக்க உங்களுக்கு சுத்தியல் ஓப்பன் ஆகும்.

உங்கள் கண்களை மூடிக்கொண்டு ஸ்பீக்கரை அதிக சத்தத்தில்
வைத்துக்கொண்டு மவுஸை கிளிக் செய்யுங்கள். உங்கள்
கம்யூட்டரின் மானிட்டர் அதிக சத்தத்துடன் உடைவதை காண்
பீர்கள்.
அடுத்துள்ளது கட்டிங் டூல். இதன் மூலம் மானிட்டரை கட்
செய்யலாம்.கீழ் கண்ட விண்டோவை பாருங்கள்.


மூன்றாவதாக உள்ளது மெஷின் கன். இதன் மூலம் நாம்
டெக்ஸ்டாப்பில் சுட்டு தள்ளலாம்.கீழே உள்ள படத்தை
பாருங்கள்.

நான்காவது டூல் நெருப்பு வளையம். இதன் மூலம் நெருப்பு
கோளங்கள் டெக்ஸ்டாப்பில் உருவாகும்.கீழே உள்ள விண்டோ
வினை பாருங்கள்.

ஐந்தாவது டூல் கலர் கன். இதன் மூலம் விதவிதமான கலர்களில்
நமது டெக்ஸ்டாப்பில் கலர்கள் வருவதை காணலாம். கீழே உள்ள
படத்தை பாருங்கள்.

ஆறாவது டூல் கலர் புசர். இதன் மூலம் டெக்ஸ்டாப் கருமைநிற
மாக மாறும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.

ஏழாவது டூல் ஸ்டாம்ப் டூல். இதன் மூலம் முத்திரைகளை நமது
டெக்ஸ்டாப்பில் பதியலாம். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.

எட்டாவது டூல் டெர்மினட்ஸ்'. சின்ன சின்ன பூச்சிகளை நமது
டெக்ஸக்டாப்பில் வலம் வர ஆரம்பிக்கும். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.


இறுதியாக உள்ளது வாஷிங் டூல். இதன் மூலம் நமது கணிணியில்
செய்த அனைத்து செயல்களையும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து
விடலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.

இறுதியாக ESC அழுத்துங்கள். நீங்கள் பழைய நிலமைக்கு திரும்பலாம்.

இதைப்போல் 100 க்கும் விளையாட்டுக்கள் உள்ளன.உங்கள்
ஆதரவு இருந்தால் தொடர்ந்து பதிவிடுகின்றேன்.
பதிவினை பாருங்கள். பிடித்திருந்தால் மறக்காமல்
ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

டெக்ஸ்டாப்பில் இதுவரை விளையாடியவர்கள்:-

web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

12 comments:

♠புதுவை சிவா♠ said...

வணக்கம் வேலன் சார்
எல்லா விளையாட்டும் அழகாக உள்ளது மேலும் சிறுவர்களின் அறிவுதிறன் மேம்பட வழி செய்யும் விளையாட்டையும் அறிமுகப்படித்தவும்.

மேரே பகலே (மீ த பஸ்ட்டு)
:-))))))))))))))

ஓட்டும் போட்டாச்சு

நித்தியானந்தம் said...

நல்ல தகவல் திரு.வேலன் பகிர்ந்தமைக்கு நன்றி!!

voted!!

கக்கு - மாணிக்கம் said...

டியர் வேலன், பதிவுக்கு பாராட்டுக்கள்.
அது சரி, உங்கள் மகனை இதில் விளையாட விட்டீர்களா என்ன ? தமாஷாத்தான் இருக்கு.
பாசம் மிக்கவர்தான் நீங்கள்.பிள்ளைகளின் சார்பாக நன்றிகள்.

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

வேலன். said...

♠புதுவை சிவா♠ கூறியது...
வணக்கம் வேலன் சார்
எல்லா விளையாட்டும் அழகாக உள்ளது மேலும் சிறுவர்களின் அறிவுதிறன் மேம்பட வழி செய்யும் விளையாட்டையும் அறிமுகப்படித்தவும்.

மேரே பகலே (மீ த பஸ்ட்டு)
:-))))))))))))))

ஓட்டும் போட்டாச்சு

நன்றி நண்பர் சிவா அவர்களே...அறிவுதிறன் வளரும் விளையாட்டையும் வெளியிடுகின்றென்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

நித்தியானந்தம் கூறியது...
நல்ல தகவல் திரு.வேலன் பகிர்ந்தமைக்கு நன்றி!!

voted!!

நன்றி நித்தியானந்தம் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
டியர் வேலன், பதிவுக்கு பாராட்டுக்கள்.
அது சரி, உங்கள் மகனை இதில் விளையாட விட்டீர்களா என்ன ? தமாஷாத்தான் இருக்கு.
பாசம் மிக்கவர்தான் நீங்கள்.பிள்ளைகளின் சார்பாக நன்றிகள்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...பிள்ளைகளின் மகிழ்ச்சியே நமது விருப்பம்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

உலவு.காம் (ulavu.com) கூறியது...
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்ஃ

தகவலுக்கு நன்றி...இணைத்துக்கொள்கின்றேன் நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர் said...

:-)

sarusriraj said...

ரொம்ப நல்லா இருந்தது , பசங்களுக்கு ரொம்ப பிடித்து இருந்தது , உங்கள் பிளாக் ரொம்ப உபயோகமாக இருக்கு

velan said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
:-)

மனதிலிருந்து வார்த்தைகள் வரவில்லையா...அல்லது இதற்கு போய் ஏன் கருத்துசொல்லனும் என்கின்ற மவுணமா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

velan said...

sarusriraj கூறியது...
ரொம்ப நல்லா இருந்தது , பசங்களுக்கு ரொம்ப பிடித்து இருந்தது , உங்கள் பிளாக் ரொம்ப உபயோகமாக இருக்கு//

நன்றி சகோதரி...
நல்ல விளையாட்டு, ஆனால் ஓட்டுக்கள் வந்ததோ 7 தான். ஆனால் பதிவிறக்கம் செய்து கொண்டவர்கள் 50 பேருக்கும் மேல். குழந்தைகளுக்கான நிறைய விளையாட்டுக்கள் உள்ளன. பதிவில் போடுகின்றேன்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
தங்கள் பதிவில் எனது பதிவின் லிங்க் கொடுத்தமைக்கு நன்றி...கோலங்கள் அருமை...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...