Friday, April 17, 2009

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-7 COVER DESIGN

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-7
COVER DESIGN








போட்டோஷாப்பில் இதுவரையில் 6 பாடங்கள்

வரை பார்த்தோம். முன்பதிவுகளை பார்க்காதவர்

கள் இங்கு சென்று பார்க்கவும்.

இதுவரை பாடங்கள் பார்த்தோம். சரி இதில் எதாவது

செய்ய முடியுமா ? என நண்பர் கேட்டார். அவருக்காக

இதுவரை பார்த்ததிலிருந்து ஒரு சின்ன பயன்பாட்டினை

பார்க்கலாம்.

முதலில் போட்டோஷாப் ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.

அதில் File - New ( பைல் - நியூ )தேர்ந்தெடுங்கள். 





இதில் நான் கவரின் அளவை கீழ்கண்டவாறு

தேர்வு செய்துள்ளேன்.


இதில் Name என்பதின் எதிரில் கவர்

என் பெயர் கொடுத்துக்கொள்ளுங்கள். அதில்

Width என்பதின் எதிரில் 10 அங்குலம்

(10 inch) எனவும், Hight என்பதின் எதிரில்

4.5 அங்குலம் (4.5 inch ) எனவும் அளவை

தேர்வு செய்து கொள்ளவும். Resulation அளவு

200 - 300 வரை விருப்பபடி அமைத்துக்கொள்

ளுங்கள். பின் ஓகே கொடுத்து வெளியேறுங்கள்.

இப்போது உங்களுக்கு கீழ்கண்டவாறு ஒரு

வெற்று கவர் உருவாகும். 





சரி . கவர் ரெடி செய்துவிட்டோம். இனி அதில் படம்

சேர்ப்பது எப்படி என பார்க்கலாம். உங்கள் கணிணியில்

உள்ள படத்தை Open மூலம் தேர்வு செய்யுங்கள். 

நான் இந்த படத்தை தேர்வு செய்துள்ளேன்.


இதில் முகத்தை மட்டும் நாம் முன்பு பார்த்த மார்யூ டூலால்

தேர்வு செய்து அதில் Feather அளவு 30 வைத்துகொள்ளுங்கள்.

மார்யூ டூல் மற்றும் Feather Tool பற்றி தெரியாதவர்கள்

முன்பாடங்களை பார்த்துக்கொள்ளவும்.

அதை செல்கட் செய்து காப்பி பின் நமது கவரை

தேர்வு செய்து அதில் பெஸ்ட் செய்யவும். உங்கள்

படம் ஆனது கவரில் நடுவில் பெஸ்ட் செய்யப்பட்டு

இருக்கும். பின் மார்க்யூ டூலுக்கு அடுத்துள்ள

மூவ் டூல் ( டூல்களின் முதல் வரிசையில் அடுத்து

உள்ள டூல் ஆகும் இது. வரும் பாடங்களில் இதை

பார்க்கலாம். அவசரத்துக்கு இப்போது அதை 

உபயோகித்துக்கொள்ளலாம்) கர்சரால் தேர்வு

செய்துகொண்டு படத்தை நகர்த்தினால் படம்

நமது மவுஸ்க்கு எற்றவாறு நகரும். அதை

இடது (நமது) மூலைக்கு கொண்டு வரவும்.படத்தை

பாருங்கள்.


அடுத்து உங்கள் முகவரியை அதில் தட்டச்சு

செய்யுங்கள். தட்டச்சு தெரியாதவர்கள் எனது

முன்பதிவை பார்க்கவும். அதை இந்த

கவரில் பேஸ்ட் செய்யவும். இங்கு ஒரு

சின்ன விவரம் நாம் பார்க்க வேண்டும். நாம்

முகவரியை அப்படியே பேஸ்ட் செய்தால்

போட்டோஷாப் அதை ஏற்றுக்கொள்ளாது. அதனால்

போட்டோஷாப்பில் உள்ள டூல்களின் வரிசையில

8 - வரிசை  2- வது டூல் கிளிக் செய்யுங்கள்.(T என 

ஆங்கில எழுத்தில் போட்டிருக்கும்). இப்போது

உங்கள் முகவரி இதில் பேஸ்ட் ஆகிவிடும். அதை

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வரிகளை திருத்திக்

கொள்ளுங்கள்.


அனுப்புனர்(From Address) முகவரி ரெடி. இப்போது

பெறுநர் (To Address ) பார்ப்போம். மீண்டும் File -

Open -சென்று அனுப்பவிரும்புகிறவரின் புகைப்

படத்தை தேர்வு செய்யுங்கள்.முன்பு கூறியபடி

மார்யூ டூலால் படத்தை இதில் பேஸ்ட் செய்யுங்கள்.

உங்களுக்கு இந்த மாதிரியாக படம் கிடைக்கும்.




பெறுநர் முகவரியில் அவர் பெயரை தட்டச்சு செய்து

அதை முன்பு கூறியபடி பேஸ்ட் செய்துவிடுங்கள்.

உங்களுக்கு இந்த மாதிரியாக படம் கிடைக்கும்.



உங்களுக்கு கவர் ரெடி. அதை பிரிண்ட் எடுத்துக்

கொள்ளுங்கள். இதை நண்பர் - உறவினர் ஆகிய

வர்களுக்கு அனுப்பினால் அவர்கள் மனம் மிக

மகிழ்ச்சி அடையும். அனுப்பிய நபரை உடனே

தெரிந்துகொள்வதுடன் போஸ்ட்மேனும் உரிய

நபரிடம் பத்திரமாக கடிதத்தை சேர்த்துவிடுவார்.

பதிவை படித்துப்பாருங்கள்.

பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

JUST FOR JOLLY PHOTOES



வலைப்பூவில் உதிரிப்பூக்கள்

போட்டோ ஷாப்.

RED,GREEN,BLUE ஆகியவற்றின் 0 Shadow

களை சேர்த்தால் நமக்கு கருப்பு நிறமும்,

மூன்று கலர்களின் 255 Shadow களையும் 

சேர்த்தால் வெள்ளை நிறமும் கிடைக்கும்.



hits counter



web counter

16 comments:

  1. வேலன்,

    அருமையான பதிவு. வாழ்த்துகள்.
    பதிவர்களின் உழைப்பு பயனர்களின் மகிழ்ச்சி .

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete
  2. அருமை.

    PiTக்கு contribute பண்ணலாமே நீங்க?

    ReplyDelete
  3. மிக அருமையான தகவல்கள் வேலன் ,வாழ்த்துக்கள் நன்றி

    ReplyDelete
  4. thamizhil idhu ponra muyarchigal unmaiyil varaverka thakka onre.. thodarungal valthugal...

    ReplyDelete
  5. ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
    வேலன்,

    அருமையான பதிவு. வாழ்த்துகள்.
    பதிவர்களின் உழைப்பு பயனர்களின் மகிழ்ச்சி .

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்//

    நன்றி நண்பர் அவர்களே...
    வாழ்க வளமுடன்,
    என்றும் அன்புடன்,
    வேலன்.

    ReplyDelete
  6. SurveySan கூறியது...
    அருமை.

    PiTக்கு contribute பண்ணலாமே நீங்க?//

    கருத்துக்கு நன்றி நண்பரே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. sakthi கூறியது...
    மிக அருமையான தகவல்கள் வேலன் ,வாழ்த்துக்கள் நன்றி//

    நன்றி சக்தி அவர்களே..

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  8. ஆதவன் கூறியது...
    thamizhil idhu ponra muyarchigal unmaiyil varaverka thakka onre.. thodarungal valthugal...//

    தங்கள் வாழ்த்துக்கு நன்றி ஆதவன் அவர்களே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  9. வேலன் சார் பயனுள்ள மிக அருமையான பதிவு. மிக்க நன்றி.

    ReplyDelete
  10. உபயோகமான பதிவு.இதுவரை வகுப்பை தவறவிட்டு விட்டேன்.இனிமேல் எப்பொழுதும் உள்ளேன் ஐயா!நன்றி.

    ReplyDelete
  11. நிஜமா நல்லவன் கூறியது...
    வேலன் சார் பயனுள்ள மிக அருமையான பதிவு. மிக்க நன்றி.//

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  12. ராஜ நடராஜன் கூறியது...
    உபயோகமான பதிவு.இதுவரை வகுப்பை தவறவிட்டு விட்டேன்.இனிமேல் எப்பொழுதும் உள்ளேன் ஐயா!நன்றி.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்

    ReplyDelete
  13. இந்த மாதிரி ஒவ்வொரு உறைக்கும் பிரிண்ட் போட்டா.....டோனர் காசை நினைத்துப்பார்க்கிறேன்.
    புதிய முறை நன்றாக உள்ளது.

    ReplyDelete
  14. வடுவூர் குமார் கூறியது...
    இந்த மாதிரி ஒவ்வொரு உறைக்கும் பிரிண்ட் போட்டா.....டோனர் காசை நினைத்துப்பார்க்கிறேன்.
    புதிய முறை நன்றாக உள்ளது.//

    அனைத்துக்கடிதங்களுக்கும் இல்லாமல் முக்கியமான கடிதங்களுக்கு மட்டும் இந்த மாதிரி பிரிண்ட் போட்டால் வித்தியாசமாக இருக்கும் அல்லவா?
    வாழ்கவளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  15. Hi,

    Hi Velan, Thanks For your posting,all are very nice and one small doubt.If we write the Tamil Font in Photo-shop, I write one line in Google transliterate then copy the photo-shop image but, letter not displayed properly. Please help me .

    ReplyDelete
  16. ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது... வேலன், அருமையான பதிவு. வாழ்த்துகள். பதிவர்களின் உழைப்பு பயனர்களின் மகிழ்ச்சி . வாழ்க வளமுடன் என்றும் நட்புடன் ந.முத்துக்குமார்// நன்றி நண்பர் அவர்களே... வாழ்க வளமுடன், என்றும் அன்புடன், வேலன்.

    ReplyDelete