போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-4


போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-4



போட்டோஷாப் பாடங்கள் -4

இதுவரை போட்டோஷாப் பாடங்கள் 3 வரை

பார்த் தோம் . இதுவரை முன் பாடங்களை

படிக்காதவர்கள் முன்பதிவை படித்துவிட்டு

இதை தொடரவும். முன்பதிவை படிக்கா

தவர்களுக்காக மூன்று பாடங்களையும்

இங்கே பதிவிட்டுள்ளேன்.




போட்டோஷாப்பில் ஒருபடம் நாம்

மாறுதல்செய்வதற்கு முன் அதை பிரதி

DUBLICATE எடுத்துவைக்க சொல்லி

யிருந்தேன். நண்பர் ஒருவர் DUBLICATE

எப்படி எடுப்பது என கேட்டிருந்தார்.

அதனால் DUBLICATE எப்படி எடுப்பது என

முதலில் பார்ப்போம்.

உங்களுக்கு தேவையான படத்தை

முதலில் திறந்துகொள்ளுங்கள்.

நான் இந்த பிரம்மா படத்தை தேர்வு

செய்து திறந்துள்ளேன்.



இப்போது மேல் புறம் பார்த்தால் உங்களுக்கு

FILE,EDIT,IMMAGE,LAYER,SELECT... என

வரிசையாக இருப்பதில் IMMAGE -ஐ

தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு வரிசையாக

கீழ்கண்டவாறு சாரளம் ஓப்பன் ஆகும்.



அதில் Dublicate என்பதை கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு படத்தின் மீது கீழ்கண்டவாறு

ஒரு விண்டோ திறக்கும்.


அதில் உங்களுடைய புகைப்படத்தின் பெயரோ - அல்லது

புகைப்பட எண்ணோ தோன்றும். அல்லது நீங்கள் விரும்பும்

பெயரையும் அதில் தட்டச்சு செய்யலாம். அடுத்து OK

கொடுங்கள்.உங்களுக்கு இந்த மாதிரி படம் இரண்டு

தோன்றும்.







இதில் ஒன்று நிஜம். மற்றது அதன் நிழல். நீங்கள் நிஜத்தை

மூடிவைத்துவிட்டு காப்பி யில்( நிஜத்தின் நிழலில்)

என்னவேண்டுமானாலும் செய்யலாம். மாற்றங்கள்

உங்களுக்கு பிடித்திருந்தால் அதை சேமியுங்கள்.

பிடிக்கவில்லையென்றால் அதை கான்செல்(cancel)

செய்துவிட்டு முன்பு கூறியபடி மீண்டும் ஒரு படத்தை

பிரதி(Dublicate) எடுத்துக்கொள்ளுங்கள்.

பிரதி எடுப்பதில் நன்கு பயிற்சிபெற நான்கு -ஐந்துமுறை

முயற்சிசெய்து பாருங்கள். சரியாக வரும்.

இனி பாடத்திற்கு வருவோம். சென்ற பதிவுகளில்

மார்க்யூ டூல் பற்றி பார்த்தோம். அதில் உள்ள

பிற வசதிகளையும் இப்போது பார்ப்போம்.

இதில் முன்வகுப்புகளில் Deselect,Select Inverse,

Feather... பற்றி பார்த்தோம். இதில் அடுத்துஉள்ளது

Save Selection..இதன் உபயோகம் நமக்கு இப்போது

தேவைபடாது . அதனால் அதை பின்பு பார்ப்போம்.

அடுத்து உள்ளது Make Work Path. இதை தேர்வு

செய்யுங்கள். நீங்கள் மார்க்யூ டூலால் தேர்வுசெய்த

பகுதியில் கர்சரைவைத்து கிளிக் செய்தால் வரும்

பகுதியில் Make Work Path செலக்ட்செய்யவும்.



இதில் உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ ஓப்பன்

ஆகும். அதில் டாலரன்ஸ் 5 என வைத்து ஓகே கொடுக்கவும்.


நான் கீழ்கண்ட படத்தில் அதை தேர்வு செய்துள்ளேன்.

இது படத்தை சுற்றி ஒரு கேர்டு போட்டவாறு நமக்கு

படம் கிடைக்கும். கும்பலாக உள்ள நபர்களின் படங்களில்

நமக்கு தேவையானவரை மட்டும் வட்டம் போட்டு,

கட்டம் கட்டி காண்பிக்க இது பயன்படுகிறது. பிரபல

மானவர்களின் கும்பலாக உள்ள புகைப்படத்தில்

அவரைமட்டும் காண்பிக்க வட்டம் - கட்டம் கட்டி

யுள்ளதை பார்த்திரு்ப்பீர்கள். அதை இதன் மூலம்

செய்யலாம்.


அடுத்து நாம் பார்ப்பது லேயர் வழி காப்பி. சரி லேயர்

என்றால் என்ன? போட்டோஷாப்பின்

உயிர் நாடியே லேயர் எனலாம். அதுபற்றி

பின்னர்வரும் பாடங்களில் விரிவாக

பார்க்கலாம். சரி லேயர் எப்படி வரவழைப்பது?

மிகவும் சுலபம். உங்கள்கீ-போர்டில் F7 கீயை

ஒரு முறை அழுத்துங்கள் . உங்களுக்குக்கான

லேயர்ஒன்று திறந்திருப்பதை பார்க்கலாம்.


சரி பாடத்திற்கு வருவோம். மார்க்யூ டூலால்

தேர்வு செய்து வரும் விண்டோவில் அடுத்து

வருவது layer via copy . இதை கிளிக் செய்தவுடன்


நீங்கள் தேர்வு செய்த படம் ஆனது லேயரில்

சென்று அமர்ந்துகொள்ளும். படத்தை பாருங்கள்.


அதைப்போலவே லேயர் வழி கட்.(Layer via Cut)


இதை தேர்வு செய்தாலும் உங்களுக்கு முன்பு

சொன்னவாறே லேயரில் படம் தேர்வாகும்.


அடுத்து உள்ளது New Layer. ,இதை கிளிக் செய்தால்

உங்களுக்கு புதிய லேயர் ஒன்று உருவாகும்.


அதில் உள்ள New Layer கிளிக் செய்யவும்.


உங்களுக்கு புதிய விண்டோ திறக்கும் . அதில் மாற்றம்

ஏதும் செய்யாமல் ஓகெ கொடுக்கவும். புதிய லேயர்

ஒன்று உருவாகியுள்ளதை பார்ப்பீர்கள்.


லேயர்பற்றிய பாடத்தில் இதைபற்றி விரிவாக

பார்க்கலாம். அதுபோல் அடுத்த பாடத்தில்

Free Transform பற்றி பார்க்கலாம். பதிவின்

நீளம் கருதி பாடத்தை இத்துடன் முடிக்கின்றேன்.

இங்குள்ள கோயிலின் சிற்பங்கள் தேரில்

பொருத்துவதற்காக வைத்துள்ளவை.

பதிவை படித்துப்பாருங்கள். பிடித்திருந்தால்

ஒட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
சென்ற பதிவுகளில் Pixel & Resulation பற்றி பார்த் தோம்.


இன்று குறைந்த ரேசுலேசன் மற்றும் அதிக ரேசுலேசன்
பற்றி பார்ப்போம்.
Low Resolution:- Pixel குறைவாக இருக்கும். படத்தில் தெளிவு
இருக்காது. ஆனால் பைலில் குறைந்த இடத்தைப்பிடிக்கும்.
(KB அளவு குறைவாக இருக்கும்)
High Resolution:-Pixel அதிகமாக இருக்கும். படம் அருமையாக
இருக்கும். ஆனால் பைலில் அதிக இடம் பிடிக்கும்.
(KB அளவு அதிகமாக இருக்கும்).
உதாரணமாக ஒரு படத்தை நாம் 4inx6in தேர்வுசெய்து அதன்
Resollution 200 DPI என வைத்தால் (4x200)x(6x200) =800x1200
=9,60,000 Pixel - அதாவது மொத்தம் 9லட்சத்து அறுபதாயிரம்
புள்ளிகள் அந்த படத்தில் இருக்கும்.(தலை சுற்றுகிறதா).
மிகப்பெரிய படத்தை பிரிண்ட் செய்யும் போது அதிக
Resolution வைத்தால் படம் அழகாக இருக்கும்.குறைவாக
வைத்தால் படம் புள்ளிபுள்ளியாக தெரியும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

33 comments:

Muthu Kumar N said...

வேலன்,

அருமையாக உள்ளது உங்கள் பதிவுகள்.

என்னுடைய சிறு ஆலோசனை உங்கள் தலைப்பின் அருகில்

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-4
(Learn about Duplicate)

ஆங்கிலத்தில் இருந்தால் Search செய்வது சுலபமாக இருக்கும் என்பது added advantage.

அந்தந்த பகுதி பாடங்கள் உள்ளடக்கம் எதைப்பற்றியது என்று தலைப்போடு இணைந்து இருந்தால் பின்னாளில் தேடும்போது சுலபமாக தேடி எடுத்து பயன்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன்,

அருமையாக உள்ளது உங்கள் பதிவுகள்.

என்னுடைய சிறு ஆலோசனை உங்கள் தலைப்பின் அருகில்

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-4
(Learn about Duplicate)

ஆங்கிலத்தில் இருந்தால் Search செய்வது சுலபமாக இருக்கும் என்பது added advantage.

அந்தந்த பகுதி பாடங்கள் உள்ளடக்கம் எதைப்பற்றியது என்று தலைப்போடு இணைந்து இருந்தால் பின்னாளில் தேடும்போது சுலபமாக தேடி எடுத்து பயன்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்//

சுடசுட கருத்து அளித்தமைக்கு நன்றி.நான் பிளாக்கில் பதிவேற்றிவிட்டு தமிலிஷ்ஷில் சப்மிட் செய்வதற்குள் இங்கு மின்தடை ஏற்பட்டுவிட்டது. தங்கள் ஆலோசனையை இந்த பதிவிலேயே திருத்திக்கொள்கின்றேன்.தகவலுக்கும் கருத்துக்கும் நன்றி.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Technologies Unlimited said...

Thank you sir..

Thank you for ur hard work.

வெங்கட்ராமன் said...

வேலன் நல்ல முயற்சி.

Word மற்றும் Excel போல புகைப்பட மென்பொருள் பற்றிய அடிப்படை விஷயங்களும் இப்போது எல்லோருக்கும் தேவை.

முத்துக்குமார் சொல்வதை கண்டிப்பாக செய்யவும். திரட்டிகள் அல்லாது google ல் தேடுபவர்களுக்கு கூட உபயோக மாக இருக்கும்.

Tag கொடுக்கும் போதும் photoshop lessons ஆங்கிலத்தில் கொடுங்கள். பலரையும் சென்றடைய ஏதுவாக இருக்கும்.

தொடருங்கள். . . .

ஆனந்த். said...

4 -ஆம் பதிவுக்கு வாழ்த்துக்கள், உங்கள் பதிவுகள் வாரம் ஒரு முறை வருவதை இருமுறை பதிவிட்டால் போட்டோ ஷாப் கற்பதற்கு எளிமையாக இருக்கும் என்பது
எனது கருத்து, முயற்சி செய்யுங்களேன் . பதிவிற்கு நன்றி தொடரட்டும் உங்கள் பணி.

வேலன். said...

Amazing Photos கூறியது...
Thank you sir..

Thank you for ur hard work.//

தாங்கள் கூறுவது உண்மைதான் நண்பரே...போட்டோஷாப் பாடம் பதிவிட சற்று அதிகபடியாக சிரமப்படவேண்டியுள்ளது.
தாங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்:,
வேலன்.

வேலன். said...

தமிழ்நெஞ்சம் கூறியது...


I am giving u Butterfly award.

Please see this post//

விருது வழங்கிய தாங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி...என்னுடன் விருது
பெற்ற நண்பர்களு்க்கும் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

வெங்கட்ராமன் கூறியது...
வேலன் நல்ல முயற்சி.

Word மற்றும் Excel போல புகைப்பட மென்பொருள் பற்றிய அடிப்படை விஷயங்களும் இப்போது எல்லோருக்கும் தேவை.

முத்துக்குமார் சொல்வதை கண்டிப்பாக செய்யவும். திரட்டிகள் அல்லாது google ல் தேடுபவர்களுக்கு கூட உபயோக மாக இருக்கும்.

Tag கொடுக்கும் போதும் photoshop lessons ஆங்கிலத்தில் கொடுங்கள். பலரையும் சென்றடைய ஏதுவாக இருக்கும்.

தொடருங்கள். . . .//

தகவலுக்கு நன்றி நண்பரே...இனிவரும் பாடங்களில் தாங்கள் சொல்வதுபோல் செய்கின்றேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஆனந்த். கூறியது...
4 -ஆம் பதிவுக்கு வாழ்த்துக்கள், உங்கள் பதிவுகள் வாரம் ஒரு முறை வருவதை இருமுறை பதிவிட்டால் போட்டோ ஷாப் கற்பதற்கு எளிமையாக இருக்கும் என்பது
எனது கருத்து, முயற்சி செய்யுங்களேன் . பதிவிற்கு நன்றி தொடரட்டும் உங்கள் பணி.//

நன்றி நண்பரே..தாங்கள் சொல்வதுபோல் வாரம் இரு பதிவுகள் போடலாம். ஆனால் மற்ற பதிவுகள்
பாதிப்படையலாம். தவிர போட்டோஷாப்பில் பாடத்தை கற்பவர்கள் அதை பயிற்சி செய்ய ஒருவார கால அவகாசம் தேவைபடலாம். எனவே இந்த இடைவெளி.தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்:,
வேலன்.

நிஜமா நல்லவன் said...

மிக்க நன்றி வேலன் சார். அடுத்த பாடங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

குடந்தை அன்புமணி said...

நல்ல பதிவு. தொடருங்கள். தொடருகிறோம்.

Advocate P.R.Jayarajan said...

Nalla valigatty....

வடுவூர் குமார் said...

இலகுவாக புரிகிற மாதிரி சொல்லியுள்ளீர்கள்.

Unknown said...

மிகவும் அருமையாக சொல்லிகொடுக்கிறீர்கள், மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்க உங்கள் சேவை குணம், தொடர்க இச்சேவைப்பணி.

அன்புடன்
ச. அன்வர்.

வேலன். said...

நிஜமா நல்லவன் கூறியது...
மிக்க நன்றி வேலன் சார். அடுத்த பாடங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

குடந்தைஅன்புமணி கூறியது...
நல்ல பதிவு. தொடருங்கள். தொடருகிறோம்.//

தொடர்கிறேன்...தொடருங்கள்...
கருத்துக்கு நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Advocate Jayarajan கூறியது...
Nalla valigatty....//

தங்கள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் ஜெயராஜன் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

வடுவூர் குமார் கூறியது...
இலகுவாக புரிகிற மாதிரி சொல்லியுள்ளீர்கள்.//

வருகைக்கு நன்றி நண்பரே...நீங்கள் GIMP யில் முயற்சிசெய்து பார்க்கின்றேன் என சொன்னீர்கள்- பார்த்தீர்களா?
வாழ்க வளமுடன்:,
வேலன்.

வேலன். said...

Anwar கூறியது...
மிகவும் அருமையாக சொல்லிகொடுக்கிறீர்கள், மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்க உங்கள் சேவை குணம், தொடர்க இச்சேவைப்பணி.

அன்புடன்
ச. அன்வர்.//

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

தோழர் வேலனுக்கு, உங்களின்
கடின உழைப்பு பிறருக்கும் இலவசமாகப் பயன் பட வேண்டும் என்கிற நல்லெண்ணம் போல, உலகத்தில் எல்லோர்க்கும் வாய்த்துவிட்டால்....
எண்ணவே மிகச் சந்தோசமாக இருக்கிறதல்லவா?
பலருக்கும் பயன் படும் மிகத் தரமான பதிவு. தொடருங்கள்.
photoshop (போட்டோஷாப் )
ற்கான கோப்பினை நாம் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளமுடியுமா?
அது பற்றியும் விளக்கினீர்களென்றால் எம் போன்ற அறியாப் பயிர்களை வளர்த்தவர் போலாவீர்கள்.
நன்றி.
தமிழ்சித்தன்.

வேலன். said...

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! கூறியது...
தோழர் வேலனுக்கு, உங்களின்
கடின உழைப்பு பிறருக்கும் இலவசமாகப் பயன் பட வேண்டும் என்கிற நல்லெண்ணம் போல, உலகத்தில் எல்லோர்க்கும் வாய்த்துவிட்டால்....
எண்ணவே மிகச் சந்தோசமாக இருக்கிறதல்லவா?
பலருக்கும் பயன் படும் மிகத் தரமான பதிவு. தொடருங்கள்.
photoshop (போட்டோஷாப் )
ற்கான கோப்பினை நாம் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளமுடியுமா?
அது பற்றியும் விளக்கினீர்களென்றால் எம் போன்ற அறியாப் பயிர்களை வளர்த்தவர் போலாவீர்கள்.
நன்றி.
தமிழ்சித்தன்.//

தாங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...எனது பதிவில் முதன்முதலாக வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன். வாழ்த்துக்கள். தாங்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருந்தால் தெரிவிக்கவும். ஆவன செய்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர் said...

நன்றி. நல்ல விளக்கங்கள்!

வேலன். said...

ஜுர்கேன் க்ருகேர் கூறியது...
நன்றி. நல்ல விளக்கங்கள்!//

கருத்துக்கு நன்றி நண்பரே...தாங்களுடைய ஒற்றைதலைவலி சரியாகிவிட்டதா?இப்போது உடல்நலம் பரவாயில்லையா? நலம் பெற வேண்டி..

வாழ்க வளமுடன்,
வேலன்.

Asokaa Photo said...

அ௫மையா பதிவு தொடருங்கள்.

வேலன். said...

Asokaa Photo கூறியது...
அ௫மையா பதிவு தொடருங்கள்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்:,
வேலன்.

முருகன் ஜெயராமன் said...

கணினிக்கு புதியவரான என்னை போன்றவர்களுக்கு உபயோகமான
தகவல்.

வேலன். said...

முருகன் ஜெயராமன் கூறியது...
கணினிக்கு புதியவரான என்னை போன்றவர்களுக்கு உபயோகமான
தகவல்.//

பதிவிற்கு முதன்முதலாக வந்துள்ளீர்கள்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

ராஜ நடராஜன் said...

அனைத்துப் பாடங்களையும் சோளக்காட்டு மாடு மாதிரி மேய்ந்து விட்டேன்.நேரம் கிடைக்கும் போது மெல்ல அசைப்போடுகிறேன்.விளைச்சல் நிலத்துக்கு நன்றி:)

வேலன். said...

ராஜ நடராஜன் கூறியது...
அனைத்துப் பாடங்களையும் சோளக்காட்டு மாடு மாதிரி மேய்ந்து விட்டேன்.நேரம் கிடைக்கும் போது மெல்ல அசைப்போடுகிறேன்.விளைச்சல் நிலத்துக்கு நன்றி:)//

முதன் முதலில் வந்துள்ளீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

pls mail ur email id to thangavelmanickam@gmail.com

Anonymous said...

I cana't take prient can you send to my mail with fond.Thank you.
my Id: ansaariclassic@yahoo.com

Anonymous said...

photoshop என்றால் அது வேலன் அண்ணா தான்
தொடருங்கள். தொடருகிறோம்.

என்றும் நட்புடன் M.RAJESH

Related Posts Plugin for WordPress, Blogger...